மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது: யோபு 38:1யோபு 40:6
“எல்லாம் வல்லவருடன் வாதாடுகிறவன் அவரைத் திருத்துவானோ? 1 கொரி 2:16ஏசா 40:14ரோம 11:34-36யோபு 33:13ஏசா 45:9-11ஏசா 50:8மத் 20:11ரோம 9:19-23
இறைவனைக் குற்றம் சாட்டுகிறவன் அவருக்குப் பதிலளிக்கட்டும்.”
யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னது:
“நான் தகுதியற்றவன்; நான் உமக்கு என்ன பதிலளிக்க முடியும்? நீதி 30:32யோபு 29:9யோபு 21:5யோபு 42:6எஸ்றா 9:6ஆதி 18:27நியாயாதி 18:191 தீமோ 1:15
நான் என் கையினால் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
நான் ஒருமுறை பேசினேன், ஆமாம் இரண்டொருமுறை பேசினேன், ஆனால் என்னிடம் பதில் இல்லை; யோபு 33:14சங் 62:11யோபு 9:15யோபு 9:32இராஜா 6:10எரே 31:18-19யோபு 34:31-32ரோம 3:19
நான் இனிமேல் ஒன்றுமே சொல்லமாட்டேன்.”
அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்: யோபு 38:12 பேது 3:10-12எபி 12:18-20சங் 50:3-4
“இப்பொழுது நீ மனிதனைப்போல் திடமாய் நில்; யோபு 38:3யோபு 42:4யோபு 23:3-4யோபு 13:22
நான் உன்னிடம் கேள்வி கேட்பேன்,
நீ எனக்குப் பதில் சொல்.
“நீ என் நீதியை அவமதிப்பாயோ? ரோம 3:4ஏசா 28:18யோபு 32:2ஏசா 14:27யோபு 10:3யோபு 34:5-6சங் 51:4கலா 3:15
நீ உன்னை நீதியுள்ளவனாக்குவதற்கு, என்னைக் குற்றவாளியென்று தீர்ப்பாயோ?
உன் புயம் இறைவனுடையதைப் போன்றதோ? யோபு 37:4-5சங் 89:131 கொரி 10:22யாத் 15:6ஏசா 45:9யோபு 23:6யோபு 33:12-13யோபு 9:4
உன் குரல் அவருடைய குரலைப்போல் முழங்குமோ?
அப்படியானால் உன்னை மகிமையினாலும் மகத்துவத்தினாலும் அழகுபடுத்தி, சங் 93:1சங் 149:4ஏசா 59:171 நாளாக 29:111 கொரி 15:542 பேது 1:16-17யாத் 28:2ஏசா 4:2
மேன்மையையும் மாட்சிமையையும் உடுத்திக்கொள்.
உன் கோபத்தின் சீற்றத்தை வீசி, தானி 4:37ஏசா 2:11-12ஏசா 2:17நாகூ 1:61 பேது 5:5-6அப் 12:22-23தானி 5:20-23உபா 32:22
பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்து.
பெருமையுள்ள ஒவ்வொரு மனிதனையும் பார்த்து அவர்களைத் தாழ்மைப்படுத்து; ஏசா 63:3மல்கி 4:31 சாமு 2:7அப் 1:25பிரச 11:3ஏசா 10:6ஏசா 13:11யோபு 36:20
கொடியவர்களை அவர்கள் நிற்கும் இடத்திலேயே நசுக்கிப் போடு.
அவர்கள் எல்லோரையும் ஒன்றாய் தூசிக்குள் புதைத்துவிடு; ஏசா 2:10எஸ்த 7:8யோபு 14:13யோபு 36:13சங் 49:14யோவா 11:44
கல்லறையின் உள்ளே அவர்களின் முகங்களை மூடிப்போடு.
அப்பொழுது உன் வலதுகையே உன்னை மீட்கும் எபே 2:4-9ஏசா 40:29சங் 44:3சங் 44:6ரோம 5:6
என்று நானும் ஒத்துக்கொள்வேன்.
“இப்பொழுது உன்னோடுகூட ஆதி 1:24-26யோபு 40:20சங் 104:14யோபு 39:8
நான் படைத்த நீர்யானையைப் பார்;
அது எருதைப் போலவே புல் மேய்கிறது.
அதின் இடுப்பிலுள்ள பலம் எவ்வளவு?
அதின் வயிற்றின் தசைநார்களின் வலிமை எவ்வளவு?
அதின் வால் கேதுரு மரத்தைப்போல் அசைகிறது; யோபு 41:23
அதின் இடுப்பு நரம்புகள் நெருக்கமாகப் பிணைந்திருக்கின்றன.
அதின் எலும்புகள் வெண்கலக் குழாய்களாகவும், ஏசா 48:4யோபு 7:12
கால்கள் இரும்புத் தூண்களைப் போலவும் இருக்கின்றன.
இறைவனின் படைப்புகளில் இதுவே முதலிடம் பெறுகிறது; யோபு 41:33ஏசா 27:1யோபு 26:13சங் 104:24சங் 7:12
இருந்தும் அதைத் தமது வாளுடன் அணுக அதைப் படைத்தவரால் முடியும்.
குன்றுகள் விளைச்சலைக் கொடுக்கும்; சங் 104:14சங் 104:26யோபு 40:15சங் 147:8-9
காட்டு விலங்குகளெல்லாம் அதனருகில் விளையாடும்.
அது தாமரையின் கீழும், ஏசா 19:6-7ஏசா 35:7
நாணலின் மறைவில் சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.
தாமரைகளின் நிழல் அதை மூடுகின்றன; எசேக் 17:5ஏசா 15:7லேவி 23:40
ஆற்றலறிகள் அதைச் சூழ்ந்து நிற்கின்றன.
ஆறு பெருக்கெடுக்கும்போது அது திகிலடைவதில்லை; ஆதி 13:10ஏசா 28:16ஏசா 37:25யோசு 3:15சங் 55:8
யோர்தான் நதி அதின் வாய்க்கெதிராகப் பெருக்கெடுத்து ஓடினாலும்,
அது உறுதியாயிருக்கும்.
அது பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? யோபு 41:1-2
மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?