யோபு 41

Job 41

“லிவியாதான் என்னும் பெரிய பாம்பைத் தூண்டிலினால் பிடிக்க முடியுமோ? ஏசா 27:1யோபு 3:8சங் 104:26சங் 74:14

நீ அதின் நாக்கைக் கயிற்றினால் கட்டமுடியுமோ?

அதற்கு மூக்கணாங்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? ஏசா 37:29எசேக் 29:4-52இராஜா 19:28ஏசா 27:1

அல்லது அதின் தாடையைக் கொக்கியினால் ஊடுருவக் குத்த உன்னால் முடியுமோ?

அது உன்னிடத்தில் இரக்கம் கேட்டு, மன்றாடிக்கொண்டிருக்குமோ? ஏசா 30:10நீதி 15:1நீதி 18:23நீதி 25:15சங் 55:21

உன்னிடம் மெதுவான வார்த்தையைப் பேசுமோ?

வாழ்நாள் முழுவதும் நீ அதை அடிமையாக்கிக்கொள்ளும்படி, யாத் 21:6உபா 15:171 இராஜா 20:31-34ஆதி 1:28சங் 8:5-6

அது உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்யுமோ?

ஒரு பறவையைப்போல் நீ அதை வளர்க்க முடியுமோ? நியாயாதி 16:25-30யோபு 28:11

உன் பெண் பிள்ளைகள் அதனுடன் விளையாட அதைக் கட்டிவைப்பாயோ?

வியாபாரிகள் அதைப் பரிமாறிக்கொள்வார்களோ? நியாயாதி 14:11

அதை அவர்கள் வர்த்தகர் நடுவில் பங்கிட்டுக்கொள்வார்களோ?

அதின் உடலை ஈட்டிகளினாலும்,

அதின் தலையைக் கூர்மையான மீன்பிடி ஈட்டியால் குத்துவாயோ?

அதின்மேல் உன் கையைப்போட்டால், அது அடிப்பதை நீ மறக்கமாட்டாய்; 1 இராஜா 20:112இராஜா 10:4லூக் 14:31-32

இனி அதின்மேல் கைபோடவுமாட்டாய்.

அதை அடக்குவதற்கான எந்த எதிர்பார்ப்பும் வீணானது; 1 சாமு 3:11உபா 28:34ஏசா 28:19லூக் 21:11

அதின் தோற்றமே பயமுறுத்தக் கூடியது.

அதை எழுப்ப தைரியமுள்ளவன் இல்லை. யோபு 9:41 கொரி 10:22ஆதி 49:9எரே 12:5யோபு 3:8யோபு 40:9எண் 24:9சங் 2:11-12

அப்படியிருக்க என்னை எதிர்த்துநிற்க யாரால் முடியும்?

தனக்கு பதில் கொடுக்கவேண்டுமென்று முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? ரோம 11:35சங் 24:11 நாளாக 29:11-14உபா 10:14யோபு 35:7சங் 50:121 கொரி 10:26யாத் 19:5

வானத்தின் கீழே இருப்பவை ஒவ்வொன்றும் என்னுடையவை.

“இப்பொழுது நான் லிவியாதானின் கால்களைப்பற்றியும், ஆதி 1:25

அதின் பலத்தைப் பற்றியும், வசீகரத் தோற்றத்தைப்பற்றியும் பேசத் தவறமாட்டேன்.

அதின் மேற்தோலை உரிக்கக்கூடியவன் யார்? 2இராஜா 19:28யாக் 3:3சங் 32:9

அதை மூக்கணாங்கயிற்றுடன் அணுக யாரால் முடியும்?

பயங்கரப் பற்கள் நிறைந்த தானி 7:7பிரச 12:4யோபு 38:10நீதி 30:14சங் 57:4சங் 58:6

அதின் வாயின் தாடையைப் பிடித்துத் திறக்கக்கூடியவன் யார்?

அதின் முதுகில் உள்ள செதில்கள் நெருங்கி எரே 9:23வெளி 5:2-3வெளி 5:5

இணைக்கப்பட்ட கேடய வரிசைகள்போல் இருக்கின்றன.

அவைகளின் ஒவ்வொரு வரிசையும்

காற்றுப் புகாதபடி மிக நெருக்கமாய் இருக்கின்றன.

அவை ஒன்றோடொன்று நெருக்கமாய் இணைந்து

பிரிக்க முடியாதவாறு, ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

அது மூச்சுவிடும்போது அனல் வீசுகிறது; யோபு 3:9வெளி 1:14

அதின் கண்கள் அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைப்போல் இருக்கின்றன.

அதின் வாயிலிருந்து நெருப்புத் தணல்கள் புறப்பட்டு, சங் 18:8

நெருப்புப் பொறிகளும் பறக்கும்.

எரியும் நாணல்மீது கொதிக்கும் சட்டியிலிருந்து எழும்புவதுபோல், எரே 1:13-14

அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.

அதின் மூச்சு கரியைக் கொழுத்தி எரியச்செய்கிறது; சங் 18:8ஆப 3:5ஏசா 30:33சங் 18:12

அதின் வாயிலிருந்து ஜூவாலை பாய்கிறது.

அதின் கழுத்திலே வல்லமை இருக்கும்; 1 கொரி 15:55-57ஓசி 13:14யோபு 39:19யோபு 40:16

திகில் அதற்கு முன்னே செல்லும்.

அதின் தசை மடிப்புகள் அசைக்க முடியாதபடி

ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.

அதின் நெஞ்சு கற்பாறையைப்போலவும், ஏசா 48:4எரே 5:3சகரி 7:12

அம்மிக் கல்லைப்போலவும் கடினமானதாய் இருக்கிறது.

அது எழும்பும்போது பலவான்கள் திகிலடைந்து, யோனா 1:4-6சங் 107:28

அதின் தாக்குதலுக்கு பயந்து ஓடுகிறார்கள்.

அதைத் தாக்குகிறவனுடைய வாள், ஈட்டி, அம்பு, யோபு 39:21-24

கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.

அது இரும்பை வைக்கோலாகவும்,

வெண்கலத்தை உளுத்துப்போன மரமாகவும் மதிப்பிடும்.

அம்பு அதனைத் துரத்தாது; ஆப 1:10யோபு 39:7

கவண்கற்கள் அதற்குப் பதரைப் போலிருக்கும்.

பெருந்தடி அதற்கு வைக்கோல் போன்றது; 2 நாளாக 26:14

அது ஈட்டியின் சத்தத்திற்கு நகைக்கிறது.

அதின் அடிப்பக்கம் கூர்மையான கற்கள் கிடந்தாலும், ஏசா 41:15

சூடடிக்கும் இயந்திரம் சேற்றில் ஏற்படுத்தும் அடையாளத்தை ஏற்படுத்தி செல்கிறது.

அது கொதிக்கும் பானையைப்போல் ஆழ்கடல்களைப் பொங்கச்செய்து,

தைலம்போலக் கடலைக் கலக்குகிறது.

அது தன் பின்னால் பாதையை மின்னச்செய்யும்; ஆதி 1:15ஆதி 1:2ஆதி 15:15ஆதி 25:8ஆதி 42:38யோபு 28:14யோபு 38:16யோபு 38:30

அப்பொழுது ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.

பூமியின்மேல் உள்ளதொன்றும் அதற்கு நிகரானதல்ல; யோபு 40:19

அது பயமற்ற ஒரு விலங்கு.

அகந்தையான எல்லாவற்றையும் அது அற்பமாய் எண்ணுகிறது; எசேக் 29:3சங் 73:6யோபு 26:12யோபு 28:8யாத் 5:2ஏசா 28:1சங் 73:10வெளி 12:1-3

பெருமைகொண்ட எல்லாவற்றுக்கும் மேலான அரசன் அதுவே.”