யோவான் 15

John 15

திராட்சைக்கொடியும் கிளைகளும்

“நானே உண்மையான திராட்சைக்கொடி. என் பிதாவே தோட்டக்காரர். எரே 2:21ஏசா 27:2-31 கொரி 3:9ஏசா 60:21சங் 80:8-19ஏசா 4:2யோவா 6:55ஏசா 5:1-7 கனிகொடாத என்னிலுள்ள ஒவ்வொரு கிளையையும் அவர் தூக்கிவைக்கிறார். ஆனால், கனி கொடுக்கிற கிளைகளையோ அவர் கத்தரித்துச் சுத்தம் பண்ணுகிறார். அதனால் அவை இன்னும் அதிகமாய்க் கனிகொடுக்கும். மத் 3:10எபி 12:10-11மத் 15:13வெளி 3:19யோவா 15:8லூக் 13:7-9எபி 6:7-8மத் 13:12 நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் ஏற்கெனவே சுத்திகரிக்கப் பட்டிருக்கிறீர்கள். யோவா 17:17எபே 5:261 பேது 1:22யோவா 13:10 என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தன் சுயமாகவே கனி கொடுப்பதில்லை; அது திராட்சைக் கொடியிலே நிலைத்திருக்க வேண்டும். நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் உங்களால் கனிகொடுக்க இயலாது. 1 யோவா 2:6கலா 2:20யோவா 8:312 யோவா 1:9யோவா 6:56யோவா 15:5-7பிலி 1:111 யோவா 2:24-28

“நானே திராட்சைக்கொடி; நீங்களோ கிளைகள். நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் அதிகமாய் கனி கொடுப்பீர்கள்; என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவுமே செய்யமுடியாது. பிலி 4:13கொலோ 1:10யோவா 15:16கலா 5:22நீதி 11:302 கொரி 13:8யோவா 5:19யாக் 1:17 நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால், நீங்கள் வெட்டி எறியப்பட்டு வாடிப்போகிற ஒரு கிளையைப்போல் இருப்பீர்கள்; அப்படிப்பட்ட கிளைகள் சேர்த்து எடுக்கப்பட்டு நெருப்பில்போட்டு எரிக்கப்படும். மத் 7:19எபி 6:7-8மத் 13:41யோவா 15:2மத் 3:102 பேது 2:20எபி 10:271 யோவா 2:19 நீங்கள் என்னில் நிலைத்திருந்து என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்குமானால், நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அது உங்களுக்குச் செய்யப்படும். சங் 37:41 யோவா 5:14யோவா 14:131 யோவா 3:22யோவா 15:16மத் 7:7யோவா 16:23கலா 5:16 நீங்கள் அதிகமாய் கனிகொடுத்து, என்னுடைய சீடர்கள் எனக் காண்பியுங்கள். இதுவே என் பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும். மத் 5:16யோவா 8:31பிலி 1:112 கொரி 9:10-15யோவா 15:5சங் 92:12-151 பேது 4:11யோவா 13:35

“பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். யோவா 17:23-24யோவா 17:261 யோவா 2:28யோவா 15:13வெளி 1:5யோவா 15:11எபே 3:18யூதா 1:20 நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறேன். அதுபோல் நீங்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். யோவா 14:151 யோவா 5:31 யோவா 3:21-241 யோவா 2:52 பேது 2:211 யோவா 2:1-2யோவா 4:34யோவா 8:29 என்னுடைய சந்தோஷம் உங்களில் இருக்கும்படியும், உங்களுடைய சந்தோஷம் முழுமை பெறும்படி இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ரோம 15:13யோவா 17:13யோவா 16:241 யோவா 1:41 பேது 1:8யோவா 16:332 யோவா 1:121 தெச 5:16 நான் உங்களில் அன்புகூர்ந்தது போலவே, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்புகூரவேண்டுமென்பதே என் கட்டளை. 1 யோவா 4:211 பேது 4:8யோவா 13:34எபே 5:2ரோம 12:101 யோவா 3:231 பேது 3:81 பேது 1:22 ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைப் பார்க்கிலும் பெரிதான அன்பு யாரிடமும் இல்லை. யோவா 10:11எபே 5:2ரோம 5:6-8யோவா 10:151 யோவா 4:7-11 நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்தால், நீங்கள் எனக்கு நண்பர்களாயிருப்பீர்கள். மத் 12:501 யோவா 5:3யாக் 2:23யோவா 14:21யோவா 14:15யோவா 13:17லூக் 12:4ஏசா 41:8 நான் இனிமேலும் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லப்போவதில்லை. ஏனெனில் ஒரு வேலைக்காரன் தன் எஜமானுடைய வேலைகளை அறியமாட்டானே. நானோ உங்களை நண்பர்கள் என்றே சொல்கிறேன். ஏனெனில் என் பிதாவினிடத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றையெல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். சங் 25:141 கொரி 2:9-12மத் 13:11யாக் 2:23கொலோ 1:26வெளி 1:1ஆதி 18:17-19எபே 3:5 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன், நீங்கள் போய் நிலையான கனி கொடுக்கும்படி உங்களை நியமித்தேன். அப்பொழுது நீங்கள் என் பெயரில் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார். எரே 1:5-7யோவா 15:19எபே 2:102 தீமோ 3:15-171 யோவா 4:19கலா 1:15லூக் 6:13அப் 22:14 ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். இதுவே என் கட்டளை. யோவா 15:121 யோவா 3:14-171 பேது 2:17

உலகம் சீடரை வெறுத்தல்

“உலகம் உங்களை வெறுக்கும்போது, முதலில் அது என்னையே வெறுத்தது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 1 யோவா 3:13யோவா 7:7லூக் 6:22யோவா 3:20மாற் 13:13மத் 10:221 யோவா 3:1மத் 5:11 நீங்கள் உலகத்துக்கு சொந்தமானவர்களாய் இருந்தால், அது உங்களைத் தன்னுடையவர்களென்று ஏற்று, உங்களில் அன்பாயிருக்கும். ஆனால், நீங்கள் உலகத்துக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்து வேறுபிரித்தேன். அதனாலேயே உலகம் உங்களை வெறுக்கிறது. 1 யோவா 4:4-5யோவா 17:14-16எபே 1:4-11தீத் 3:3-71 யோவா 5:19-20எபே 2:2-5யோவா 15:161 பேது 2:9-12 நான் உங்களுடன் பேசிய வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்: ‘எந்த வேலையாளும் தன்னுடைய எஜமானைவிடப் பெரியவன் அல்ல.’ 1 அவர்கள் என்னைத் துன்புறுத்தினால், உங்களையும் துன்புறுத்துவார்கள். அவர்கள் என்னுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், உங்களுடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவார்கள். 2 தீமோ 3:12யோவா 13:16மத் 10:24எசேக் 3:71 கொரி 4:122 கொரி 4:9அப் 4:27-30ஏசா 53:1-3 அவர்கள் என்னை அனுப்பிய பிதாவை அறியாமல் இருக்கிறார்கள். அதனாலேயே என் பெயரின் நிமித்தம் உங்களைத் துன்புறுத்துவார்கள். மத் 10:22யோவா 16:3யோவா 8:19மத் 10:18மத் 24:91 பேது 4:13-14அப் 5:41ஏசா 66:5 நான் வந்து அவர்களுடனே பேசியிருக்காவிட்டால், பாவத்தின் குற்றம் அவர்கள்மேல் சுமராது. ஆனால் இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்து அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லமுடியாது. யோவா 9:41யாக் 4:17அப் 17:30ரோம 1:20யோவா 12:48எசேக் 33:31-331 பேது 2:16எபி 6:4-8 என்னை வெறுக்கிறவன் என் பிதாவையும் வெறுக்கிறான். 1 யோவா 2:232 யோவா 1:9யோவா 8:40-42 வேறு யாரும் செய்திராத கிரியைகளை நான் அவர்கள் மத்தியில் செய்தேனே. அப்படி நான் செய்திராவிட்டால் அவர்கள்மேல் பாவத்தின் குற்றம் சுமராது. ஆனால் இப்பொழுதோ அவர்கள் இந்த கிரியைகளைக் கண்டிருந்தும், என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். யோவா 14:9யோவா 5:36யோவா 10:32யோவா 10:37யோவா 7:31யோவா 9:32உபா 5:9எபி 2:3-4 ‘அவர்கள் காரணமின்றி என்னை வெறுக்கிறார்கள்’ என்று அவர்களுடைய சட்டத்தில் எழுதப்பட்டிருப்பது நிறைவேறும்படியே இப்படி நடந்தது. 2 சங் 109:3சங் 69:4சங் 35:19லூக் 24:442 கொரி 11:72 தெச 3:8கலா 2:21யோவா 10:34

பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்

“நான் பிதாவினிடத்திலிருந்து உங்களிடத்திற்கு அனுப்பும் உதவியாளார் உங்களிடம் வருவார். அப்போது பிதாவினிடமிருந்து வரும் சத்திய ஆவியானவர் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பார். யோவா 14:26யோவா 14:16-17யோவா 16:13-15அப் 5:32அப் 2:32-33அப் 15:81 யோவா 5:6-10லூக் 24:49 நீங்களும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும். ஏனெனில் நீங்கள் ஊழிய தொடக்கத்திலிருந்து என்னுடன் இருக்கிறீர்களே. 1 யோவா 4:14அப் 10:39-42யோவா 21:24லூக் 24:481 யோவா 1:1-2அப் 23:11லூக் 1:2-31 பேது 5:1