யூதாவுக்குப் பங்கு
வம்சம் வம்சமாக யூதா கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட பங்கு தென்பகுதியில் ஏதோம் நாட்டிற்கும், சீன் பாலைவனத்திற்கும் பரந்திருந்தது. எண் 26:55-56எசேக் 47:19யோசு 14:2எண் 33:36-37எண் 34:3-5
அதன் தென் எல்லை உப்புக்கடலில் 1 தென் மூலையிலுள்ள முனையிலிருந்து, எசேக் 47:8ஆதி 14:3ஏசா 11:15எசேக் 47:18யோசு 3:16எண் 34:3 அக்கராபீமின் மேட்டைத் தென்புறமாகக் கடந்து சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ் பர்னேயாவுக்கு தெற்கே சென்றது. பின்பு அது எஸ்ரோன் பக்கமாக ஆதார்வரை போய் வளைந்துசென்று கார்க்காவை அடைந்தது. எண் 34:4நியாயாதி 1:36ஆதி 14:7எண் 20:1எண் 32:8 பின்பு அஸ்மோன் பக்கமாகச்சென்று, எகிப்தின் நதியுடன் இணைந்து மத்திய தரைக்கடலில் முடிந்தது. இதுவே யூதா கோத்திரத்தாரின் தென் எல்லை. எண் 34:5யோசு 13:3யாத் 23:31ஆதி 15:18
யோர்தான் நதியின் ஆரம்பம் வரை உள்ள உப்புக்கடல் அதன் கிழக்கு எல்லையாகும். எண் 34:12யோசு 18:15-19எண் 34:10
வட எல்லை யோர்தான் முகத்துவாரத்திலுள்ள கடலின் முனையிலிருந்து ஆரம்பமாகி, அங்கிருந்து பெத் ஓக்லாவுக்குச் சென்று பின் பெத் அரபாவின் வடக்காகக் கடந்து ரூபனின் மகனாகிய போகனின் கல் இருந்த இடம்வரை சென்றது. யோசு 18:17யோசு 18:19-21 அந்த எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குச் சென்றது. வடக்கே திரும்பி கணவாய்க்குத் தெற்கிலுள்ள அதும்மீமின் மேட்டுக்கு எதிரேயுள்ள கில்காலுக்குச் சென்றது. அங்கிருந்து எல்லையானது என்சேமேசின் நீரூற்றுகளுக்குச் சென்று என்ரொகேல் நீரூற்றுவரை வந்தது. 1 இராஜா 1:92 சாமு 17:17யோசு 7:26ஓசி 2:5ஏசா 65:10யோசு 10:38-39யோசு 10:43யோசு 15:15 பின் எல்லையானது பென் இன்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் பட்டணத்தின் தென்மலைச்சரிவை அதாவது எருசலேமை அடைந்தது. அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்கிற்கு மேற்கே மலையின் உச்சிக்கு ஏறியது. இந்த மலை ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடக்குமுனையில் இருந்தது. யோசு 18:16யோசு 15:63நியாயாதி 19:10யோசு 18:282இராஜா 23:10நியாயாதி 1:212 நாளாக 28:32 சாமு 5:18 அந்த மலையுச்சியிலிருந்து எல்லையானது, நெப்தோ நீரூற்றை நோக்கிச்சென்று, பின்னர் எப்ரோன் மலையிலுள்ள நகரங்களின் வழியாகச் சென்று அங்கிருந்த கீரியாத்யாரீமாகிய பாலாவை நோக்கிசென்றது. 1 நாளாக 13:6யோசு 18:15நியாயாதி 18:122 சாமு 6:2யோசு 9:17 பாலாவிலிருந்து எல்லையானது, மேற்கே வளைந்து சேயீர் மலையை நோக்கித் திரும்பி யெயாரீம் மலையில் வடக்குசரிவு அதாவது கெசலோக் ஒரமாகத் தொடர்ந்துசென்றது. அங்கிருந்து பெத்ஷிமேஷைக் கடந்து திம்னாவரை சென்றது. நியாயாதி 14:11 சாமு 6:12-21ஆதி 38:12-13நியாயாதி 14:5யோசு 15:57 அது எக்ரோனின் வடக்கு மலைச்சரிவை நோக்கிச்சென்று, சிக்ரோனை நோக்கி திரும்பிச்சென்று, பாலா மலையைக்கடந்து யாப்னியேலை அடைந்தது. அதன் எல்லை மத்திய தரைக்கடலில் முடிந்தது. 1 சாமு 5:101 சாமு 7:142இராஜா 1:162இராஜா 1:2-32இராஜா 1:6யோசு 15:45யோசு 19:43-44
தேசத்தின் மேற்கு எல்லை, மத்திய தரைக்கடலின் கரையோரமாகும். எசேக் 47:20யோசு 15:47எண் 34:6-7உபா 11:24
மேலே கூறப்பட்டவை யூதாவின் கோத்திரத்திற்கு அதன் வம்சங்களுக்கேற்ப வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாகும்.
யோசுவாவிற்கு யெகோவா கட்டளையிட்டபடியே அவன் யூதா தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகனாகிய காலேப்புக்கு கொடுத்தான். அது கீரியாத் அர்பா அதாவது எப்ரோன் பிரதேசம் ஆகும். அர்பா என்பவன் ஏனாக்கின் முற்பிதா. உபா 1:34-36யோசு 14:6-15எண் 13:30எண் 14:23-24 காலேப் மூன்று ஏனாக்கியரின் மகன்களை எப்ரோனிலிருந்து துரத்திவிட்டான். அவர்கள் ஏனாக்கின் வழித்தோன்றல்களான சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்கள். நியாயாதி 1:10நியாயாதி 1:20யோசு 11:21எண் 13:22-23யோசு 10:36-37எண் 13:33 அங்கிருந்து அவன் தெபீரில் வசித்தவர்களுக்கெதிராக படையெடுத்துச்சென்றான். தெபீர் என்பது முன்பு கீரியாத் செபேர் எனப்பட்டது. யோசு 10:38நியாயாதி 1:11-13யோசு 10:3 காலேப், “கீரியாத் செபேர் நகரைத் தாக்கிக் கைப்பற்றும் வீரனுக்கு, என் மகள் அக்சாளைத் திருமணம் செய்துவைப்பேன்” என்று சொல்லியிருந்தான். நியாயாதி 1:12-13நியாயாதி 1:6 காலேபின் சகோதரனான கேனாசின் மகன் ஒத்னியேல் அந்நகரைக் கைப்பற்றினான். எனவே காலேப் தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். நியாயாதி 1:13நியாயாதி 3:9நியாயாதி 3:11யோசு 14:61 நாளாக 2:49எண் 32:12
ஒரு நாள் அவள் ஒத்னியேலுடன் வந்தபோது, அவளைத் தன் தகப்பனிடம் இன்னும் ஒரு வயல் நிலத்தைக் கேட்கும்படி அவளைத் தூண்டினான். அப்படியே அவள் கழுதையிலிருந்து இறங்கியபோது காலேப் அவளிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். 1 சாமு 25:23ஆதி 24:64
அதற்கு அவள், “எனக்கு இன்னும் ஒரு உதவிசெய்ய வேண்டும். நீங்கள் எனக்கு, ‘நெகேவ்’ என்னும் வறண்டபகுதியில் நிலத்தை கொடுத்திருப்பதால் நீரூற்றுள்ள நிலத்தையும் கொடுங்கள்” என்றாள். அப்படியே காலேப் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் நீரூற்றுள்ள நிலத்தையும் அவளுக்குக் கொடுத்தான். நியாயாதி 1:14-152 கொரி 9:51 சாமு 25:27உபா 33:7ஆதி 33:11
யூதா கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக வழங்கப்பட்ட சொத்துரிமையாவது: உபா 33:7ஆதி 49:8-12
நெகேவின் தென்பகுதியில், ஏதோம் எல்லையை நோக்கி யூதா கோத்திரத்திற்குத் தென்முனையிலிருந்த நகரங்களாவன: ஆதி 35:21நெகே 11:25
கப்சேயேல், ஏதேர், யாகூர், கீனா, திமோனா, ஆதாதா, கேதேஸ், ஆத்சோர், இத்னான், உபா 1:19யோசு 12:22எண் 33:37 சீப், தெலெம், பெயாலோத், 1 சாமு 23:141 சாமு 23:191 சாமு 23:241 சாமு 15:4சங் 54:1 ஆத்சோர் அதாத்தா, கீரியோத் எஸ்ரோன் அதாவது ஆத்சோர், ஆமாம், சேமா, மொலாதா; 1 நாளாக 4:28 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத், நெகே 11:26 ஆத்சார்சூவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா, ஆதி 26:331 நாளாக 4:28ஆதி 21:14ஆதி 21:31-33யோசு 19:2-3 பாலா, ஈயிம், ஆத்சேம், 1 நாளாக 4:29யோசு 15:9-11யோசு 19:3 எல்தோலாத், கெசீல், ஓர்மா, யோசு 19:4உபா 1:44நியாயாதி 1:17எண் 14:45 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா, 1 சாமு 27:61 சாமு 30:11 நாளாக 12:1யோசு 19:5 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய இருபத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். நெகே 11:29எண் 34:11
மேற்கு மலையடிவாரங்களில் நியாயாதி 13:25நியாயாதி 16:31எண் 13:23யோசு 19:41
எஸ்தாவோல், சோரியா, அஷ்னா, சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம், யோசு 12:17யோசு 15:53 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா, 1 சாமு 17:11 சாமு 22:1யோசு 10:31 நாளாக 4:18யோசு 10:10யோசு 10:23யோசு 12:11யோசு 12:15 சாராயீம், அதித்தாயீம், கெதேரா அல்லது கெதெரோத்தாயீம் ஆகிய பதினான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். 1 சாமு 17:52
சேனான், அதாஷா, மிக்தால்காத், திலியான், மிஸ்பே, யோக்தெயேல், 2இராஜா 14:71 சாமு 10:171 சாமு 7:161 சாமு 7:5-6ஆதி 31:48-49நியாயாதி 20:1நியாயாதி 21:5 லாகீசு, போஸ்காத், எக்லோன், யோசு 10:32இராஜா 22:1யோசு 10:31-322இராஜா 14:192இராஜா 18:142இராஜா 18:172இராஜா 19:8யோசு 12:11-12 காபோன், லகமாஸ், கித்லீஷ், கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா ஆகிய பதினாறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். யோசு 10:21யோசு 10:10யோசு 10:28யோசு 12:16
லிப்னா, ஏத்தேர், ஆஷான், யோசு 10:292இராஜா 8:22யோசு 12:15யோசு 19:7 இப்தா, அஸ்னா, நெத்சீப், கேகிலா, அக்சீப், மரேஷா ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். 1 சாமு 23:1-14ஆதி 38:5மீகா 1:14-15
எக்ரோனும் அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும். யோசு 13:31 சாமு 5:101 சாமு 6:17ஆமோ 1:8சகரி 9:5-7செப்ப 2:4 எக்ரோனின் மேற்கே அஸ்தோத்தின் சுற்றுப்புறமும் அவற்றோடும் அவற்றின் கிராமங்களும். 1 சாமு 5:11 சாமு 5:62 நாளாக 26:6ஆமோ 1:8ஏசா 20:1நெகே 13:23-24 அஸ்தோத் பட்டணமும் அதன் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும், காசா நகரும், அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், அதன் கிராமங்களும் ஆகும். இப்பிரதேசங்கள் எகிப்தின் ஆறுவரையும் மத்திய தரைக்கடற்கரை வரையும் பரந்திருந்தன. யோசு 15:4அப் 8:26ஆமோ 1:6-7யாத் 23:31நியாயாதி 16:1-21எரே 47:1எரே 47:5யோசு 13:3
மலைநாட்டில் இருந்தவைகளான: யோசு 21:14
சாமீர், யாத்தீர், சோக்கோ, தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத் சன்னா, யோசு 15:15நியாயாதி 1:11 ஆனாப், எஸ்தெமொ, ஆனிம், கோசேன், ஓலோன், கிலொ ஆகிய பதினொன்று நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். யோசு 10:41யோசு 11:162 சாமு 15:12
அராப், ரூமா, எஷான், ஏசா 21:11 யானூம், பெத் தப்புவா, ஆப்பெக்கா உம்தா, கீரியாத் அர்பா அல்லது எப்ரோன், சீயோர் ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். யோசு 15:13ஆதி 23:2யோசு 14:15
மாகோன், கர்மேல், சீப், யுத்தா, 1 சாமு 23:251 சாமு 25:2யோசு 15:241 இராஜா 18:421 சாமு 23:14-151 சாமு 25:71 சாமு 26:1-22 நாளாக 26:10 யெஸ்ரயேல், யோக்தெயாம், சனோகா, காயின், கிபியா, திம்னா ஆகிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். யோசு 15:10ஆதி 38:12எரே 14:1
அல்கூல், பெத்சூர், கேதோர், 1 நாளாக 4:39 மாராத், பெத் ஆனோத், எல்தெகோன், ஆகிய ஆறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
கீரியாத் பாகால், அதாவது கீரியாத்யாரீம், ரபா ஆகிய இரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். யோசு 18:141 சாமு 7:1
பாலைவனத்தில் இருந்த நகரங்களாவன: யோசு 15:6யோசு 18:18
பெத் அரபா, மித்தீன், செக்காக்கா, நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி ஆகிய நகரங்களும் அவற்றின் கிராமங்களும் உட்பட ஆறு ஆகும். 1 சாமு 23:292 நாளாக 20:2
ஆனாலும் எருசலேம் பட்டணத்தில் வாழ்ந்த எபூசியரை வெளியேற்ற யூதாவினால் முடியவில்லை. எனவே அவர்கள் யூதா மக்களுடன் இன்றுவரை எருசலேமில் வாழ்ந்து வருகிறார்கள். நியாயாதி 1:21நியாயாதி 1:82 சாமு 5:6-91 நாளாக 11:4-8ரோம 7:14-21