தெபோராள்
ஏகூத் இறந்தபின் இஸ்ரயேலர் திரும்பவும் யெகோவாவின் பார்வையில் கொடுமையானதைச் செய்தார்கள். எரே 5:3லேவி 26:23-25நியாயாதி 10:6நியாயாதி 2:11நியாயாதி 2:19-20நியாயாதி 3:12நியாயாதி 3:7நியாயாதி 6:1 எனவே யெகோவா அவர்களை ஆத்சோரில் ஆட்சிசெய்கிற கானானியரின் அரசனாகிய யாபீனுக்கு விற்றுப்போட்டார். அவனுடைய படைத்தளபதி சிசெரா அரோஷேத் ஹகோயீமில் வசித்தான். நியாயாதி 4:13நியாயாதி 4:16யோசு 11:11 சாமு 12:9சங் 83:9நியாயாதி 10:7யோசு 11:10-11ஏசா 50:1 யாபினிடம் தொளாயிரம் இரும்பு ரதங்கள் இருந்தன. அவன் இஸ்ரயேலரை இருபது வருடங்களாக கொடூரமாக ஒடுக்கினான். அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு அழுதனர். நியாயாதி 1:19சங் 106:42நியாயாதி 3:91 சாமு 7:8உபா 28:29உபா 28:33உபா 28:47-48நியாயாதி 10:16
அக்காலத்தில் லபிதோத்தின் மனைவி தெபோராள் இறைவாக்கினளாக இருந்தாள். அவளே இஸ்ரயேலரை நீதி விசாரித்து வந்தாள். யாத் 15:202இராஜா 22:14கலா 3:28லூக் 2:361 கொரி 11:5அப் 21:9யோவே 2:28-29மீகா 6:4 எப்பிராயீம் மலையில் ராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் தெபோராளின் பேரீச்ச மரத்தின்கீழ் அவள் நீதிமன்றத்தைக் கூட்டுவாள். இஸ்ரயேலர் தமது வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள அங்கே அவளிடம் வருவார்கள். யாத் 18:191 சாமு 1:1உபா 17:8-12யாத் 18:13ஆதி 35:8எரே 31:15யோசு 16:2யோசு 18:22 அவள் நப்தலியிலிருக்கும் கேதேசிலிருந்து அபினோமின் மகன் பாராக்கை வரவழைத்து அவனிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறதாவது: நீ நப்தலியிலும், செபுலோனிலும் பத்தாயிரம் மனிதரைக் கூட்டிக்கொண்டு அவர்களை வழிநடத்தி தாபோர் மலைக்குப்போ. அப் 13:47எபி 11:32நியாயாதி 8:18யோசு 19:32யோசு 19:37யோசு 21:32சங் 7:61 சாமு 10:3 நான் யாபீனின் படைத்தளபதி சிசெராவையும், அவனுடைய இரதங்களையும், அவனுடைய படையையும் கீசோன் ஆற்றண்டையில் வரும்படி தூண்டி உன்னுடைய கையில் ஒப்படைப்பேன் என்கிறார்” என்றாள். 1 இராஜா 18:40எசேக் 38:10-16நியாயாதி 5:21சங் 83:9-101 சாமு 24:101 சாமு 24:18யாத் 14:4யாத் 21:13
அப்பொழுது பாராக் அவளிடம், “நீ என்னுடன் வந்தால் நான் போவேன்; நீ என்னுடன் வராவிட்டால் நானும் போகமாட்டேன்” என்று சொன்னான். யாத் 4:10-14மத் 14:30-31
அதற்கு தெபோராள், “சரி; நான் உன்னுடன் வருகிறேன். ஆனால் இவ்விதம் நீ போவதானால் அந்தப் புகழ் உன்னுடையதாயிராது. யெகோவா சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றாள். அதன்பின் தெபோராள் பாராக்குடன் கேதேஸுக்குப் போனாள். 1 சாமு 2:302 சாமு 20:21-22நியாயாதி 2:14நியாயாதி 4:17-22நியாயாதி 5:24-27நியாயாதி 9:542 நாளாக 26:18 அங்கே பாராக் செபுலோனியரையும், நப்தலியினரையும் கேதேஸுக்கு வரவழைத்தான். அப்பொழுது பத்தாயிரம் ஆண்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடன் தெபோராளும் சென்றாள். நியாயாதி 5:18நியாயாதி 5:151 சாமு 25:27யாத் 11:8நியாயாதி 4:141 இராஜா 20:11நியாயாதி 4:6
கேனியனான ஏபேர் மற்ற கேனியர்களை விட்டுப் பிரிந்திருந்தான், கேனியர் மோசேயின் மைத்துனனான ஒபாபின் சந்ததியில் வந்தவர்கள், அவன் கேதேசிற்கு அருகிலுள்ள சானாயிமில் இருக்கிற பெரிய மரத்தடியில் குடியிருந்தான். நியாயாதி 1:16யோசு 19:33எண் 10:29யோசு 19:37யாத் 3:1யாத் 18:1யாத் 2:18நியாயாதி 4:6
அபினோமின் மகன் பாராக், தாபோர் மலைக்குமேல் போயிருக்கிறான் என்று சிசெராவுக்குச் சொல்லப்பட்டது. சங் 89:12எரே 46:18யோசு 19:12யோசு 19:34நியாயாதி 4:6 அப்பொழுது சிசெரா தன்னிடமிருந்த தொளாயிரம் இரும்பு ரதங்களையும், தன்னுடன் இருந்த எல்லா மனிதர்களையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு அரோஷேத் ஹகோயீமிலிருந்து கீசோன் ஆற்றருகே வந்தான். நியாயாதி 4:2-3நியாயாதி 4:7
தெபோராள் பாராக்கிடம், “நீ போ! இதுவே சிசெராவை யெகோவா உன் கையில் தரும் நாள், உனக்கு முன்னே யெகோவா போகவில்லையா?” என்றாள். எனவே பாராக்கும் அவனுடனிருந்த பத்தாயிரம் போர்வீரர்களும் தாபோர் மலையை விட்டு கீழே இறங்கினார்கள். 2 சாமு 5:24உபா 9:3ஏசா 52:12சங் 68:7-81 சாமு 9:26ஆதி 44:4மீகா 2:13ஆதி 19:14 பாராக் முன்னேறுகையில் யெகோவா சிசெராவையும், அவனுடைய ரதங்களையும், அவனுடைய இராணுவத்தையும் வாளினால் முறியடித்தார். அப்பொழுது சிசெரா தன் தேரைக் கைவிட்டு ஓடித் தப்பினான். யோசு 10:10சங் 83:9-102 நாளாக 13:15-172இராஜா 7:6எபி 11:32நியாயாதி 5:20-21
ஆனால் பாராக் ரதங்களையும், இராணுவத்தையும் அரோஷேத் ஹகோயிம் வரைக்கும் துரத்திச்சென்றான். சிசெராவின் எல்லாப் படைகளும் வாளுக்கு இரையாகின. ஒருவனும் மிஞ்சவில்லை. யாக் 2:13ரோம 2:12ஏசா 43:17யோசு 10:19-20யோசு 11:8லேவி 26:7-8சங் 104:35சங் 83:9 ஆயினும் சிசெரா கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்குள் ஓடினான். ஏனெனில் ஆத்சோரின் அரசன் யாபீனுக்கும் கேனியனான ஏபேரின் வம்சத்துக்கும் சிநேகபூர்வமான உறவு இருந்தது. ஏசா 57:21சங் 37:35-36சங் 69:22ஆமோ 5:19-20நியாயாதி 5:24நியாயாதி 5:6யோபு 12:19-21யோபு 18:7-12
அப்பொழுது யாகேல் வெளியில் சென்று சிசெராவைச் சந்தித்து அவனிடம், “வாரும் ஐயா! என் கூடாரத்திற்குள் வாரும். பயப்படவேண்டாம்” என்றாள். எனவே அவன் கூடாரத்திற்குள் சென்றான். அப்பொழுது அவள் அவனை ஒரு போர்வையால் மூடிவிட்டாள். 2இராஜா 6:19
அவன், “நான் தாகமாயிருக்கிறேன். தயவுசெய்து தண்ணீர் தா” என்றான். அவள் பாலுள்ள தோல் குடுவையைத் திறந்து அவனுக்குக் குடிக்கக்கொடுத்து அவனை மூடிவிட்டாள். நியாயாதி 5:25-26யோவா 4:71 இராஜா 17:10ஆதி 24:43ஏசா 41:17
“அவ்வேளை சிசெரா அவளிடம், நீ கூடாரவாசலில் நின்றுகொள். யாராவது வந்து, ‘இங்கு யாரேனும் இருக்கிறார்களா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்று சொல் என்றான்.” யோசு 2:3-52 சாமு 17:20
ஆனால் ஏபேரின் மனைவி யாகேல் சிசெரா களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, ஒரு கூடார முளையையும், சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் சென்று அவனுடைய நெற்றியில் முளையை வைத்து அடித்தாள். அது அவனுடைய மூளையைத் துளைத்துக்கொண்டு தரைவரை சென்றது. எனவே அவன் இறந்தான். 1 கொரி 1:27நியாயாதி 5:26-27சங் 3:7நியாயாதி 3:211 கொரி 1:191 சாமு 17:431 சாமு 17:49-50நியாயாதி 15:15
சிசெராவை துரத்திவந்த பாராக் அப்போது அங்கு வந்துசேர்ந்ததும், யாகேல் சென்று அவனைச் சந்தித்தாள். “வாரும் நீர் தேடும் மனிதனை உமக்குக் காட்டுகிறேன்” என்றாள். எனவே அவன் அவளுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவனுடைய நெற்றியில் கூடார முளை அடிக்கப்பட்டு, இறந்திருக்கக் கண்டான். 2 சாமு 17:10-152 சாமு 17:3
அந்த நாளில் இறைவன் இஸ்ரயேலர் முன்பாக கானானிய அரசன் யாபீனை அடக்கினார். நெகே 9:24சங் 18:47சங் 18:391 நாளாக 22:181 கொரி 15:28எபி 11:33சங் 47:3சங் 81:14 அதோடு இஸ்ரயேலரின் கரம் கானானிய அரசன் யாபீனை அழிக்கும்வரை மென்மேலும் வலிமையடைந்தது. 1 சாமு 3:12