நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல, நீங்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். பிலி 3:171 தெச 1:6எபே 5:1-21 கொரி 4:16எபி 6:12பிலி 2:4-52 தெச 3:9ரோம 15:2-3
வழிபாடு
நீங்கள் எப்பொழுதும் என்னை நினைவில் வைத்திருக்கிறதற்காகவும், நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றைத் தொடர்ந்து, அதேவிதமாய் கைக்கொள்ளுகிறதற்காகவும் நான் உங்களைப் பாராட்டுகிறேன். 2 தெச 2:151 கொரி 4:17நீதி 31:28-311 கொரி 11:171 கொரி 11:221 கொரி 15:22 தெச 3:6லூக் 1:6 ஒவ்வொரு மனிதனுக்கும் கிறிஸ்துவே தலைவராய் இருக்கிறார். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனே தலைவனாயிருக்கிறான். கிறிஸ்துவுக்கு இறைவனே தலைவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று, விரும்புகிறேன். ஆதி 3:16கொலோ 1:181 கொரி 3:23கொலோ 3:18எபே 4:151 பேது 3:5-6கொலோ 2:19எபே 5:22-24 எனவே தன் தலையை மூடிக்கொண்டு மன்றாடுகிறவனோ, அல்லது இறைவாக்கு உரைக்கிறவனோ, அவன் தன் தலைவராகிய கிறிஸ்துவை அவமதிக்கிறான். 2 சாமு 15:301 கொரி 11:141 கொரி 12:101 கொரி 12:282 சாமு 19:41 கொரி 14:1-25 ஒவ்வொரு பெண்ணும் தான் மன்றாடும்போது அல்லது இறைவாக்கு உரைக்கும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாத எந்தப் பெண்ணும், தன் தலைவனை அவமதிக்கிறாள். அது அவளது தலை மொட்டையடிக்கப்பட்டதற்கு சமமாயிருக்கும். உபா 21:12லூக் 2:36அப் 2:171 கொரி 14:34அப் 21:9 இவ்விதம் ஒரு பெண் தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால், அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வதோ, தன் தலையை மொட்டையடிப்பதோ, அவளுக்கு வெட்கமாக இருக்குமென்றால், அவள் தன் தலையை மூடிக்கொள்ளவேண்டும். உபா 22:5எண் 5:18
ஒரு ஆண் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இறைவனுடைய சாயலையும் மகிமையையும் பிரதிபலிப்பவன் அவனே. ஆனால் பெண்ணோ மனிதனின் மகிமையைப் பிரதிபலிப்பாய் இருக்கிறாள். 1 கொரி 11:3ஆதி 9:6ஆதி 1:26-27ஆதி 5:1சங் 8:6ஆதி 3:16யாக் 3:9 ஏனெனில் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்படவில்லை; பெண்ணே ஆணிலிருந்து படைக்கப்பட்டாள். 1 தீமோ 2:13ஆதி 2:21-23 ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. ஆனால் பெண்ணே ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். ஆதி 2:18ஆதி 2:23-24ஆதி 2:20 இந்த காரணத்திற்காகவும், தூதர்களுக்காகவும், ஒரு பெண் தான் அதிகாரத்தின்கீழ் இருப்பதைக் காட்ட அவளது தலையை மூடிக்கொள்ளவேண்டும். ஆதி 24:64-65எபி 1:14மத் 18:10ஆதி 20:16பிரச 5:6 எவ்வாறாயினும், கர்த்தரின் ஒழுங்கின்படி ஒரு பெண், ஆண் இல்லாமல் இல்லை. ஒரு ஆண், பெண் இல்லாமல் இல்லை. கலா 3:281 கொரி 7:10-141 கொரி 12:12-22 ஏனெனில் பெண் ஆணிலிருந்து படைக்கப்பட்டது போலவே, மனிதன் பெண்ணிலிருந்தே பிறக்கிறான். ஆனால், எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன. ரோம 11:361 கொரி 8:6எபி 1:2-3நீதி 16:4
ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல், இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள். லூக் 12:571 கொரி 10:15யோவா 7:24 ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் உங்களுக்குக் போதிக்கிறதே? 2 சாமு 14:261 கொரி 14:35 ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக்குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால், எங்களுக்கோ இறைவனின் திருச்சபைகளுக்கோ இவைத் தவிர வேறெந்த வழக்கமும் இல்லையென்று அறியுங்கள். 1 கொரி 7:171 தீமோ 6:3-41 தெச 2:141 கொரி 14:33-34அப் 21:24அப் 21:211 கொரி 16:1
கர்த்தரின் திருவிருந்து
பின்வரும் விஷயத்தில் நான் உங்களுக்குக் கொடுக்கும் அறிவுரைகளில், நான் உங்களைப் புகழப் போகிறதில்லை, ஏனெனில் உங்கள் ஒன்றுகூடுதல் நன்மையைவிட தீமையையே விளைவிக்கின்றன. எபி 10:251 கொரி 11:221 கொரி 14:231 பேது 2:14ஏசா 58:1-41 கொரி 11:21 கொரி 14:26லேவி 19:17 முதலாவதாக, நீங்கள் திருச்சபையாகக் கூடிவரும்போது, உங்களிடையே பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதை நான் ஓரளவு நம்புகிறேன். 1 கொரி 3:31 கொரி 1:10-121 கொரி 5:11 கொரி 6:1 உங்களிடையே பிரிவினைகள் இருக்கவேண்டும் என்பது உண்மைதான். அப்பொழுதுதான் யார் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் என்பது தெளிவாகும். 1 யோவா 2:19தீத் 3:10அப் 20:30உபா 13:3லூக் 17:12 பேது 2:1-2மத் 18:71 தீமோ 4:1-2 நீங்கள் ஒன்றுகூடி வந்து, சாப்பிடுவது உண்மையில் கர்த்தருடைய திருவிருந்து அல்ல. நீங்கள் சாப்பிடும் வேளையில், மற்றவருக்காகக் காத்திராமல் சாப்பிடுகிறீர்கள். இதனால் ஒருவன் பசியாயிருக்கிறான், மற்றவர்கள் குடித்து வெறிக்கிறார்கள். 2 பேது 2:13யூதா 1:121 கொரி 10:16-181 கொரி 11:23-25 சாப்பிடவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையோ? நீங்கள் இறைவனுடைய திருச்சபையை அவமதித்து, எளியவர்களை வெட்கப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நான் என்ன சொல்வேன்? இதைக்குறித்து நான் உங்களைப் பாராட்டுவேனோ? நிச்சயமாக இல்லை. நீதி 17:5அப் 20:28யாக் 2:5-61 கொரி 10:321 தீமோ 3:151 கொரி 11:171 கொரி 11:21 தீமோ 3:5
கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்ததையே நான் உங்களுக்குக் கொடுத்தேன்: கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலே அப்பத்தை எடுத்து, லூக் 22:19-20மத் 26:26-281 கொரி 11:23-25மாற் 14:22-241 கொரி 15:31 தெச 4:2உபா 4:5கலா 1:11-12 நன்றி செலுத்திய பின்பு, அவர் அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவில் வைத்துக்கொள்ளும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். யோவா 6:53-581 கொரி 11:27-281 கொரி 10:3-41 கொரி 10:16-17யாத் 12:14ஏசா 26:81 கொரி 5:7-8ஏசா 55:1-3 அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை; இதை நீங்கள் பானம் பண்ணும்போதெல்லாம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். லூக் 22:20எபி 9:15-20எபி 13:202 கொரி 3:61 கொரி 10:162 கொரி 3:141 கொரி 11:27-28 ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தைச் சாப்பிட்டு, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், கர்த்தர் திரும்ப வருமளவும், அவருடைய மரணத்தை பிரசித்தம் பண்ணுகிறீர்கள்” என்றார். எபி 9:28வெளி 1:7யோவா 14:31 யோவா 2:28அப் 1:112 பேது 3:10யோவா 21:221 கொரி 15:23
ஆனபடியால், யாராவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தைச் சாப்பிட்டாலோ, கர்த்தருடைய பாத்திரத்தைக் குடித்தாலோ, அவன் கர்த்தருடைய உடலுக்கும், அவருடைய இரத்தத்திற்கும் எதிராகப் பாவஞ்செய்யும் குற்றவாளியாகின்றான். யோவா 6:511 கொரி 10:21எபி 10:29எண் 9:13லேவி 10:1-3எண் 9:10யோவா 6:63-642 நாளாக 30:18-20 எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தைச் சாப்பிட்டு, பாத்திரத்திலிருந்து குடிக்குமுன், தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும். கலா 6:42 கொரி 13:5புலம் 3:40மத் 5:23-241 கொரி 11:31ஆகா 1:5சங் 26:2-7ஆகா 1:7 ஏனெனில், ஒருவன் கர்த்தருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல், இதைச் சாப்பிட்டு குடித்தால், அவன் தன்மேல் நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொள்வதற்காகவே சாப்பிட்டுக் குடிக்கிறான். 1 கொரி 11:271 கொரி 11:241 கொரி 11:301 கொரி 11:32-34பிரச 8:5எபி 5:14யாக் 3:1யாக் 5:12 இதனாலேயே உங்களில் பலர் பலவீனத்திற்கு உள்ளாகி வியாதிப்பட்டும் இருக்கிறனர். உங்களில் சிலர் மரண நித்திரைக்கும் உள்ளானார்கள். வெளி 3:19யாத் 15:26ஆமோ 3:2எண் 20:12சங் 38:1-81 இராஜா 13:21-241 தெச 4:142 சாமு 12:14-18 ஆகவே, நம்மை நாமே நியாயந்தீர்த்துக்கொண்டால், நாம் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டோம். 1 யோவா 1:9சங் 32:3-5வெளி 2:51 கொரி 11:28லூக் 15:18-20வெளி 3:2-3எரே 31:18-20 அப்படியிருந்தும், நாம் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படும்போது, நாம் அவரால் தண்டிக்கப்பட்டு சீர்ப்படுத்தப்படுகிறோம். இதனால், நாம் உலகத்தவர்களோடு குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படமாட்டோம். எபி 12:5-11நீதி 3:11-12சங் 118:18வெளி 3:19உபா 8:5யோபு 5:17-181 கொரி 11:30எரே 7:28
ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக சாப்பிட ஒன்றுகூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். யாராவது பசியாயிருந்தால், அவன் வீட்டிலேயே சாப்பிடவேண்டும். அப்பொழுது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். 1 கொரி 11:21-221 கொரி 4:191 கொரி 7:171 கொரி 16:2தீத் 1:51 கொரி 16:5
மற்ற விஷயங்களைக்குறித்த அறிவுரைகளை, நான் வரும்போது உங்களுக்குக் கொடுப்பேன்.