லேவியராகமம் 19

Leviticus 19

பலவகை நீதிச்சட்டங்கள்

யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘உங்கள் இறைவனாகிய யெகோவாவான நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். லேவி 11:44-45லேவி 20:71 பேது 1:15-162 கொரி 6:14-16மத் 5:48லேவி 20:262 கொரி 7:1யாத் 19:6

“ ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தகப்பனுக்கும், தாய்க்கும் மரியாதை கொடுக்கவேண்டும். என்னுடைய ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. யாத் 20:12எபே 6:1-3யாத் 20:8எபி 12:9எசேக் 22:7-8நீதி 30:17யாத் 21:15யாத் 21:17

“ ‘நீங்கள் விக்கிரகங்களிடம் திரும்பவேண்டாம். வார்க்கப்படும் உலோகத்தினால் உங்களுக்காக தெய்வங்களைச் செய்யவும் வேண்டாம். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. லேவி 26:1யாத் 20:23யாத் 34:17சங் 115:4-7உபா 27:151 கொரி 10:141 யோவா 5:21யாத் 20:3-5

“ ‘நீங்கள் யெகோவாவுக்குச் சமாதான காணிக்கையைப் பலியிடும்போது, அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் அதைப் பலியிடுங்கள். லேவி 22:19லேவி 22:29லேவி 7:16லேவி 1:32 நாளாக 31:2எபே 2:13-14யாத் 24:5எசேக் 45:15-17 அது பலியிடப்படுகிற நாளிலும், அதற்கு அடுத்த நாளிலுமே அதைச் சாப்பிடவேண்டும். மூன்றாம் நாள்வரை மீதமிருக்கும் எதையும் எரித்துவிடவேண்டும். லேவி 7:11-17 மூன்றாம் நாளில் அதில் எதையும் சாப்பிட்டால் அது அசுத்தமானது. அக்காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. லேவி 7:18-21ஏசா 1:13ஏசா 65:4ஏசா 66:3எரே 16:18லேவி 22:23லேவி 22:25 அதைச் சாப்பிடுகிற எவனும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைத் தூய்மைக்கேடாக்கினபடியால், அக்குற்றத்திற்கு அவனே பொறுப்பாளி. அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். லேவி 22:15லேவி 5:1

“ ‘நீங்கள் உங்கள் வயலின் விளைச்சலை அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் இருக்கும் கதிர்களை முற்றிலுமாக அறுவடை செய்யாமலும், சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். லேவி 23:22உபா 24:19-22ரூத் 2:15ரூத் 2:2லேவி 23:10லேவி 23:29 அப்படியே உங்கள் திராட்சைத்தோட்டத்திலும், இரண்டாம்முறை பறிக்காமலும், விழுந்ததைப் பொறுக்காமலும் விடுங்கள். அவைகளை ஏழைகளுக்கும் பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. ஏசா 17:6ஏசா 24:13லேவி 25:6நியாயாதி 8:2எரே 49:9மீகா 7:1ஒபதி 1:5

“ ‘களவு செய்யவேண்டாம். கொலோ 3:9எபே 4:25யாத் 20:15சங் 101:7சகரி 5:3-4ரோம 3:4உபா 5:19எரே 9:3-5

“ ‘பொய் சொல்லவேண்டாம்.

“ ‘ஒருவரையொருவர் ஏமாற்றவேண்டாம்.

“ ‘என் பெயரைக்கொண்டு பொய்யாய் ஆணையிடுவதினால் உங்கள் இறைவனின் பெயருக்கு இழிவு உண்டாக்க வேண்டாம். நானே யெகோவா. யாத் 20:7உபா 5:11லேவி 18:21யாக் 5:12லேவி 6:3மத் 5:33-34லேவி 24:11லேவி 24:15-16

“ ‘நீங்கள் உங்கள் அயலானை மோசடி செய்து, அவனைக் கொள்ளையிடாதீர்கள். யாக் 5:4மல்கி 3:5உபா 24:14-15எரே 22:13நீதி 20:10யாத் 22:15யாத் 22:21எசேக் 22:29

“ ‘கூலிக்காரனுடைய கூலியை அடுத்தநாள்வரை கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம்.

“ ‘செவிடனை சபிக்காமலும், குருடனின் வழியில் தடையேதும் போடாமலும் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே யெகோவா. உபா 27:18லேவி 19:321 பேது 2:17லேவி 25:17ரோம 14:131 கொரி 8:8-13நெகே 5:15வெளி 2:14

“ ‘நீதியைப் புரட்டவேண்டாம்; ஏழையை ஒடுக்கவேண்டாம். செல்வந்தர்களுக்குச் சலுகைகாட்ட வேண்டாம். ஆனால் உங்கள் அயலானுக்கு நியாயமாகத் தீர்ப்பு வழங்குங்கள். உபா 1:17உபா 27:19நீதி 24:23யாத் 23:2-3யாத் 23:6-8லேவி 19:35உபா 16:192 நாளாக 19:6-7

“ ‘நீங்கள் உங்கள் மக்களுக்குள் அவதூறு பேசுகிறவர்களாகத் திரியாதீர்கள். யாத் 23:1யாத் 23:7நீதி 20:19எசேக் 22:9நீதி 11:13எரே 6:28எரே 9:41 இராஜா 21:10-13

“ ‘உங்கள் அயலானின் உயிருக்கு 1 ஆபத்து உண்டாக்கும் எதையும் செய்யவேண்டாம். நானே யெகோவா.

“ ‘உங்கள் இருதயத்தில் உங்கள் சகோதரனை வெறுக்க வேண்டாம். உங்கள் அயலானின் குற்றத்தில் நீங்களும் பங்குகொள்ளாதபடி அவனை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளுங்கள். 1 யோவா 2:9லூக் 17:31 யோவா 2:111 யோவா 3:12-15நீதி 26:24-26நீதி 27:5-6கலா 6:1மத் 18:15-17

“ ‘பழிவாங்கத் தேடவேண்டாம். உங்கள் மக்களில் யாருக்கெதிராகவும் வன்மங்கொள்ள வேண்டாம். நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலானிடத்திலும் அன்பாய் இரு. நானே யெகோவா. மத் 22:39-40ரோம 13:9மாற் 12:31-34லூக் 10:27-37கலா 5:14யாக் 2:8மத் 19:19மத் 5:43-44

“ ‘நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும். 2 கொரி 6:14-17உபா 22:9-11மத் 9:16-17கலா 3:9-112 சாமு 13:291 இராஜா 1:33எஸ்றா 2:662 சாமு 18:9

“ ‘வெவ்வேறு வகையான மிருகங்களை ஒன்றோடு ஒன்று புணரவிடவேண்டாம்.

“ ‘இரண்டு வகையான விதைகளை ஒன்றாய் கலந்து வயலில் விதைக்கவும் வேண்டாம்.

“ ‘இரண்டு வகையான நூல்களைக்கொண்டு நெய்யப்பட்ட உடைகளை உடுத்தவேண்டாம்.

“ ‘மீட்டுக்கொள்ளப்படாமலும், விடுதலை அடையாமலும் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு அடிமைப் பெண்ணுடன் வேறு யாராவது உறவுகொண்டால், அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனெனில், அவள் விடுதலை பெற்றிருக்கவில்லை. உபா 22:23-24யாத் 21:20-21 ஆனாலும் அவன் தான் செய்த குற்றத்திற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவை குற்றநிவாரண காணிக்கையாக யெகோவா முன்னிலையில் சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். லேவி 6:6-7லேவி 5:1-6லேவி 5:15 ஆசாரியன் அக்குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டு அவன் செய்த பாவத்திற்காக யெகோவா முன்னிலையில், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். லேவி 4:20லேவி 4:26

“ ‘நீங்கள் உங்கள் நாட்டிற்குள்போய் கனிகொடுக்கும் மரங்களை நாட்டும்போது, அதன் பழங்களை உண்பதற்கு, முதல் மூன்று வருடங்களும் தடை செய்யப்பட்டவைகளாக 2 எண்ணிக்கொள்ளுங்கள்; அவற்றைச் சாப்பிடக்கூடாது. அப் 7:51லேவி 22:27எரே 9:25-26யாத் 22:29-30யாத் 6:12எரே 6:10லேவி 12:3லேவி 14:34 நான்காம் வருடத்தில் அதன் பழங்கள் எல்லாம் பரிசுத்தமாய் இருக்கும். அவை யெகோவாவுக்குத் துதியின் காணிக்கையாகும். உபா 18:4நீதி 3:9உபா 14:28-29எண் 18:12-13உபா 12:17-18 ஆனால் ஐந்தாம் வருடத்தில் உண்டாகும் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். இவ்வாறாக உங்கள் அறுவடை பெருகும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. ஆகா 1:9-11பிரச 11:1-2ஆகா 1:4-6ஆகா 2:18-19லேவி 26:3-4மல்கி 3:8-10நீதி 3:9-10

“ ‘எந்த இறைச்சியையும் அதன் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். உபா 18:10-142இராஜா 17:172 நாளாக 33:62இராஜா 21:6உபா 12:23லேவி 17:10-14லேவி 3:17லேவி 7:26

“ ‘குறி கேட்கவோ, சகுனம் பார்க்கவோ வேண்டாம்.

“ ‘உங்கள் தலைமுடியின் ஓரங்களை வெட்டாமலும், உங்கள் தாடியின் ஓரங்களைக் கத்தரியாமலும் இருங்கள். 3 லேவி 21:5உபா 14:1எசேக் 44:20எரே 48:37ஏசா 15:2எரே 16:6எசேக் 7:18

“ ‘இறந்தவர்களுக்காக உங்கள் உடல்களைக் கீறி காயப்படுத்தவேண்டாம். உங்கள் உடல்களில் பச்சை குத்தவும் வேண்டாம். நான் யெகோவா. உபா 14:11 இராஜா 18:28லேவி 21:5லேவி 21:1எரே 16:6எரே 48:37மாற் 5:5வெளி 13:16-17

“ ‘நீங்கள் உங்கள் மகளை வேசியாக்குவதினால், அவளை இழிவுபடுத்தாதீர்கள். மீறினால், நாடு வேசித்தனத்திற்குத் திரும்பி, கொடுமையினால் நிறையும். உபா 23:17-181 கொரி 6:15லேவி 21:7ஓசி 4:12-14

“ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா. லேவி 26:2லேவி 19:3பிரச 5:12 கொரி 6:16யாத் 20:8லேவி 16:2மத் 21:13சங் 89:7

“ ‘அஞ்சனம் பார்க்கிறவர்களின் பக்கம் போகவேண்டாம். குறிசொல்லுகிறவர்களை தேடவும் வேண்டாம். ஏனெனில், இவற்றால் நீங்கள் அசுத்தமடைவீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. ஏசா 8:19லேவி 20:272 நாளாக 33:6லேவி 20:6-7உபா 18:10-141 நாளாக 10:132இராஜா 21:61 சாமு 28:3

“ ‘வயதானவர்களின் முன் எழுந்து நில்லுங்கள். முதியோருக்கு மரியாதை செலுத்துங்கள். உங்கள் இறைவனிடத்தில் பயபக்தியாயிருங்கள். நானே யெகோவா. 1 தீமோ 5:1நீதி 16:31புலம் 5:12நீதி 20:29யோபு 32:4யோபு 32:6லேவி 19:14ரோம 13:7

“ ‘ஒரு பிறநாட்டினன் உங்கள் நாட்டில் உங்களுடன் தங்கியிருந்தால், அவனை ஒடுக்காதீர்கள். யாத் 22:21யாத் 23:9உபா 24:14எரே 7:6மல்கி 3:5உபா 10:18-19எசேக் 22:29எசேக் 22:7 உங்களோடு வாழும் எந்த பிறநாட்டினனும் உங்களுடைய நாட்டினனைப்போல நடத்தப்படவேண்டும். உங்களைப்போல் அவனிலும் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் முன்பு ஒருகாலத்தில் நீங்களும் எகிப்து நாட்டில் பிறநாட்டினராய் இருந்தீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. உபா 10:19லேவி 19:18யாத் 12:48-49மத் 5:43

“ ‘நீளம், நிறை, கொள்ளளவு ஆகியவற்றை அளக்கும்போது, நீதியற்ற அளவுகளைப் பயன்படுத்த வேண்டாம். உபா 25:13உபா 25:15எசேக் 22:12-13லேவி 19:15மத் 7:2மீகா 6:1நீதி 11:1நீதி 16:11 சரியான தராசையும், சரியான படிக்கற்களையும், சரியான எப்பா அளவையும் சரியான ஹின் அளவையும் பயன்படுத்த வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. யாத் 20:2நீதி 11:1உபா 25:13-15நீதி 20:10

“ ‘ஆகவே நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும், என்னுடைய எல்லா சட்டங்களையும் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா’ ” என்றார். உபா 8:1லேவி 18:4-51 யோவா 3:22-23உபா 5:1சங் 119:34உபா 4:1-2உபா 4:5-6உபா 6:1-2