ஆசாரியர்கள் ஊழியம் ஆரம்பித்தல்
மோசே எட்டாம் நாளில் 1 ஆரோனையும் அவன் மகன்களையும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களையும் அழைத்தான். மத் 28:1எசேக் 43:26-27லேவி 14:10லேவி 14:23லேவி 15:14லேவி 15:29லேவி 8:33எண் 6:10 அவன் ஆரோனிடம், “நீ உன்னுடைய பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு குறைபாடற்ற இளங்காளையையும், உன்னுடைய தகன காணிக்கைக்காக குறைபாடற்ற ஒரு ஆட்டுக் கடாவையும் எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக கொண்டுவா. லேவி 4:3யாத் 29:1லேவி 8:14லேவி 8:182 கொரி 5:21எபி 10:10-14எபி 7:27லேவி 9:7-8 பின்பு இஸ்ரயேலரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘பாவநிவாரண காணிக்கைக்காக வெள்ளாட்டுக்கடாவையும், தகன காணிக்கைக்காக கன்றுக்குட்டியையும், ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும் எடுத்துக்கொள்ளுங்கள்; அவை இரண்டும் குறைபாடற்றதாயும், ஒரு வயதுடையதாயும் இருக்கவேண்டும். எஸ்றா 6:17லேவி 4:231 பேது 2:24எஸ்றா 10:19வெளி 5:9தீத் 2:141 பேது 3:182 கொரி 5:21 சமாதான காணிக்கைக்காக ஒரு மாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், எண்ணெய் கலந்து பிசைந்த தானியக் காணிக்கையுடன் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தும்படி கொண்டுவாருங்கள். ஏனெனில் இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார்’ என்று சொல்” என்றான். யாத் 29:43லேவி 9:23லேவி 9:6எசேக் 43:21 இராஜா 8:10-12யாத் 16:10யாத் 19:11யாத் 24:16
அவர்கள் மோசே கட்டளையிட்ட பொருட்களை சபைக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் அனைவரும் நெருங்கிவந்து, யெகோவா முன்னிலையில் நின்றார்கள். 1 நாளாக 15:32 நாளாக 5:2-3உபா 31:12யாத் 19:17நெகே 8:1 அப்பொழுது மோசே, “யெகோவாவின் மகிமை உங்களுக்குத் தோன்றும்படி, நீங்கள் செய்யவேண்டுமென யெகோவா கட்டளையிட்டது இதுவே” என்றான். லேவி 9:23யாத் 24:162 நாளாக 5:13-14எசேக் 43:2யாத் 16:10யாத் 40:34-351 இராஜா 8:10-12
மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தின் அருகில் வந்து பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் பலியிட்டு, உனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். மக்களுக்கான காணிக்கையைப் பலியிட்டு, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இவற்றைச் செய்” என்றான். எபி 5:3எபி 5:1எபி 9:7லேவி 4:31 சாமு 3:14எபி 7:27-28லேவி 4:16-20லேவி 8:34
அப்படியே ஆரோன் பலிபீடத்திற்கு வந்து, தனது பாவநிவாரண காணிக்கையாக கன்றுக்குட்டியை வெட்டிக்கொன்றான். லேவி 1:4-5லேவி 4:1-12லேவி 4:29 ஆரோனுடைய மகன்கள் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். ஆரோன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளில் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். லேவி 4:6-7லேவி 8:15எபி 10:4-19எபி 2:10எபி 9:22-23லேவி 16:18லேவி 4:17-18லேவி 4:25 பாவநிவாரண காணிக்கை மிருகத்தின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும் பலிபீடத்தில் அவன் எரித்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இது செய்யப்பட்டது. ஏசா 53:10ஏசா 57:15ஏசா 66:2லேவி 3:3-5லேவி 3:9-11லேவி 4:34-35லேவி 4:8-12லேவி 8:16-17 இறைச்சியையும், தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான். லேவி 4:11-12லேவி 8:17லேவி 16:27-28எபி 13:11-12லேவி 4:21
அதன்பின் தகன காணிக்கை மிருகத்தை அவன் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதை பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். எபே 5:2எபே 5:25-27லேவி 1:1-17லேவி 8:18-21 அவர்கள் தகன காணிக்கையை, தலை உட்பட துண்டம் துண்டமாக அவனிடம் கொடுத்தார்கள். அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்தான். அவன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் கழுவி அவற்றைப் பலிபீடத்தில் இருந்த தகன காணிக்கையின்மேல் வைத்து எரித்தான். லேவி 8:21
பின்பு ஆரோன், மக்களுக்கான காணிக்கையைக் கொண்டுவந்தான். அவன் மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையான வெள்ளாட்டை எடுத்து, அதை வெட்டிக்கொன்று, முன்பு பலியிட்ட மிருகத்தைப்போலவே பாவநிவாரண காணிக்கையாக அதைச் செலுத்தினான். லேவி 4:27-31எபி 2:17எபி 5:3லேவி 9:32 கொரி 5:21ஏசா 53:10எண் 28:1-29தீத் 2:14
அவன் தகனகாணிக்கையைக் கொண்டுவந்து, விதிக்கப்பட்டிருந்த முறைப்படியே அதைச் செலுத்தினான். எபி 10:1-22லேவி 1:1-13லேவி 8:18-21லேவி 9:12-14 அத்துடன் அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவந்து, அதில் ஒரு கைநிறைய எடுத்து, காலையில் செலுத்திய தகன காணிக்கையுடன் அதையும் பலிபீடத்தின்மேல் எரித்தான். லேவி 2:1-2யாத் 29:38-42கலா 2:20யோவா 6:53லேவி 3:5லேவி 9:1
பின்பு அவன் மக்களுக்கான சமாதான காணிக்கையாக, மாட்டையும், செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். கொலோ 1:20எபே 2:14-17ரோம 5:1லேவி 3:1-17லேவி 7:11-18ரோம 5:10 ஆரோனின் மகன்கள் மாட்டினுடைய, செம்மறியாட்டுக் கடாவினுடைய கொழுப்பான பாகங்களை, அதாவது கொழுத்த வால், கொழுப்புப்படை, சிறுநீரகங்கள், ஈரலை மூடியுள்ள கொழுப்பு ஆகியவற்றை எடுத்து, லேவி 3:16லேவி 3:5லேவி 3:9லேவி 9:10 மிருகங்களின் நெஞ்சுப்பகுதியில் வைத்தார்கள். பின்பு ஆரோன் அந்தக் கொழுப்பை பலிபீடத்தின்மேல் எரித்தான். லேவி 3:14-17லேவி 7:29-34 நெஞ்சுப்பகுதிகளையும், வலது தொடையையும் ஆரோன், மோசே கட்டளையிட்டபடி யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான். லேவி 7:30-341 பேது 4:11யாத் 29:24யாத் 29:26-28ஏசா 49:3லேவி 7:24லேவி 7:26லூக் 2:13
அதன்பின் ஆரோன் மக்களை நோக்கி தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தான். பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும், சமாதான காணிக்கையையும் பலியிட்டு முடித்துக் கீழே இறங்கினான். உபா 21:5லூக் 24:50எண் 6:23-271 நாளாக 23:131 இராஜா 8:551 பேது 3:92 நாளாக 6:32 கொரி 13:14
அதன்பின் மோசேயும் ஆரோனும் சபைக் கூடாரத்திற்குள்ளே போனார்கள். அவர்கள் வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தபொழுது, யெகோவாவினுடைய மகிமை மக்கள் அனைவருக்கும் முன் தோன்றியது. லேவி 9:6லூக் 1:21-22எண் 16:19எண் 16:42எபி 9:24-28எண் 14:10 யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த தகன காணிக்கையையும், கொழுப்பான பாகங்களையும் பட்சித்தது. மக்கள் அனைவரும் அதைக் கண்டபோது, மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்தார்கள். 1 இராஜா 18:38-39நியாயாதி 6:211 நாளாக 21:26யாத் 3:2நியாயாதி 13:19-202 நாளாக 7:1-3ஆதி 15:17நியாயாதி 13:23