மத்தேயு 6

Matthew 6

ஏழைகளுக்குக் கொடுத்தல்

“நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர் முன்பாக அவர்கள் காணவேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு வெகுமதி கிடைக்காது. மத் 23:5யோவா 12:43எபி 6:10மத் 23:28-30லூக் 16:15கலா 6:12மத் 6:4-6எசேக் 33:31

“ஆகவே நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களால் மதிப்பைப் பெறும்படி, வேஷக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வதுபோல் செய்யவேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள். மத் 6:52 கொரி 9:6-15மத் 6:16யோவா 5:41யாக் 2:15-161 யோவா 3:17-19லூக் 20:461 பேது 4:11 ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாதிருக்கட்டும். யோவா 7:4மத் 9:30மாற் 1:44மத் 12:19மத் 8:4 அப்பொழுது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார். மத் 6:18மத் 6:6எரே 17:10லூக் 14:14சங் 44:21மத் 25:34-40எரே 23:24லூக் 8:17

மன்றாடல்

“நீங்கள் மன்றாடும்போது, வேஷக்காரர்களைப்போல் இருக்கவேண்டாம், ஏனெனில் அவர்கள் மனிதர் காணும்படி ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள். மத் 6:2லூக் 18:10-11லூக் 18:13மாற் 11:25ஏசா 55:6-7எரே 29:12ஏசா 1:15யாக் 4:6 ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்பொழுது மறைவில் செய்யப்படுவதைக் காணும் உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதியளிப்பார். 2இராஜா 4:33மத் 14:23ஏசா 65:24அப் 9:40சங் 34:15ஏசா 26:20மத் 6:18மத் 26:36-39 நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள், ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். பிரச 5:2-3பிரச 5:71 இராஜா 18:26-29மத் 6:32மத் 26:44தானி 9:18-19மத் 26:42அப் 19:34 நீங்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார். மத் 6:32லூக் 12:30பிலி 4:6யோவா 16:23-27சங் 38:9சங் 69:17-19

“ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டிய விதம் இதுவே: வெளி 4:11லூக் 11:1-4ரோம 8:15ஏசா 64:8சங் 111:9எசேக் 36:23மல்கி 1:11ஏசா 57:15

“ ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே,

உமது பெயர் பரிசுத்தப்படுவதாக,

உம்முடைய இராஜ்யம் வருவதாக. எபி 10:36மத் 26:42மத் 12:50யோவா 4:341 தெச 5:18யோவா 6:40ரோம 12:2கொலோ 1:9

உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல்

பூமியிலேயும் செய்யப்படுவதாக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். நீதி 30:8லூக் 11:3மத் 4:4சங் 34:10யோவா 6:31-59சங் 33:18-19யோபு 23:12ஏசா 33:16

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எபே 4:32மாற் 11:25எபே 1:7மத் 18:21-35கொலோ 3:131 யோவா 1:7-9லூக் 11:4லூக் 6:37

எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

எங்களைச் சோதனைக்கு 1 உட்படப்பண்ணாமல், 1 கொரி 10:13யோவா 17:15மத் 26:41வெளி 7:14-172 தெச 3:3மத் 6:10வெளி 19:1எரே 15:21

எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும்.

இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.’ 2

ஏனெனில், மனிதர் உங்களுக்கெதிராகக் குற்றம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிப்பார். எபே 4:32மாற் 11:25கொலோ 3:13மத் 7:2யாக் 2:13மத் 18:21-35மத் 6:12நீதி 21:13 ஆனால் மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாவிட்டால், உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கமாட்டார். மத் 18:35

உபவாசம்

“நீங்கள் உபவாசிக்கும்போது, வேஷக்காரர் செய்வதுபோல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மனிதர்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள். ஏசா 58:3-5மத் 9:14-15நெகே 1:4தானி 9:3லூக் 18:12சங் 69:10அப் 14:23எஸ்த 4:16 ஆனால் நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து, உங்கள் முகத்தைக் கழுவுங்கள். ரூத் 3:3பிரச 9:82 சாமு 12:20தானி 10:2-32 சாமு 14:2 அப்பொழுது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாதிருக்கும். ஆனால் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; மறைவில் செய்பவற்றை காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார். மத் 6:4மத் 6:62 கொரி 10:182 கொரி 5:91 பேது 2:13கொலோ 3:22-241 பேது 1:7ரோம 2:6

பரலோகத்தில் செல்வங்கள்

“நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் உடைத்துத் திருடுவார்கள். எபி 13:51 யோவா 2:15-16லூக் 12:21நீதி 23:4-5நீதி 11:4யாக் 5:1-3நீதி 16:161 தீமோ 6:17 ஆனால் உங்களுடையச் செல்வத்தைப் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடரும் உடைத்துத் திருடமாட்டார்கள். லூக் 12:33மத் 19:211 தீமோ 6:19யாக் 2:5லூக் 18:22எபி 11:261 தீமோ 6:17வெளி 2:9 ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும். கொலோ 3:1-3லூக் 12:342 கொரி 4:18நீதி 4:23ஏசா 33:6எபி 3:12எரே 4:14மத் 12:34

“கண் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண் நல்லதாய் இருந்தால், உன் முழு உடலும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும். லூக் 11:34-362 கொரி 11:3கொலோ 3:22எபே 6:5அப் 2:46 ஆனால் உன் கண் கெட்டதாயிருந்தால், உன் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உன்னில் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு பெரியதாயிருக்கும்! 1 யோவா 2:11மத் 6:22ஏசா 5:20-21எரே 4:22நீதி 26:121 கொரி 3:18-191 கொரி 1:18-20ஏசா 44:18-20

“எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது. 1 யோவா 2:15-16லூக் 16:13யாக் 4:41 தீமோ 6:9-10யோசு 24:15கலா 1:10மத் 4:10ரோம 6:16-22

கவலை வேண்டாம்

“ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதை உண்ணுவோம் எதைக் குடிப்போம் என உங்கள் உயிரைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம்; அல்லது எதை உடுத்துவோம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானதல்லவா? பிலி 4:6ரோம 8:321 பேது 5:7சங் 55:22லூக் 12:22-31மத் 6:31மத் 6:27-28மாற் 4:19 ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை. அப்படி இருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவா? மத் 10:29-31சங் 147:9யோபு 38:41லூக் 12:24-32சங் 145:15-16சங் 104:27-28லூக் 12:6-7மத் 6:32 கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டமுடியும் 3? லூக் 12:25-26பிரச 3:14மத் 5:36சங் 39:5-61 கொரி 12:18

“உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை. மத் 6:25பிலி 4:6லூக் 12:27லூக் 22:35-36மத் 6:31லூக் 3:11மத் 10:10 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை. 2 நாளாக 9:20-222 நாளாக 9:4-61 இராஜா 10:4-71 பேது 3:2-51 தீமோ 2:9-10 விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு, எவ்வளவு அதிகமாய் உடுத்துவிப்பார்? லூக் 12:28மத் 14:311 பேது 1:24மத் 16:8மத் 8:26யாக் 1:10-11யோவா 20:27மாற் 4:40 எனவே என்னத்தை உண்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்னத்தை உடுப்போம்? என்று சொல்லிக் கவலைப்பட வேண்டாம். 1 பேது 5:7லூக் 12:29மத் 4:4சங் 55:22மத் 15:332 நாளாக 25:9சங் 37:3சங் 78:18-31 ஏனெனில் இறைவனை அறியாதவர்கள் இவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். உங்கள் பரலோக பிதாவோ இவை உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார். மத் 6:8லூக் 12:30எபே 4:17லூக் 11:11-13சங் 17:14மத் 20:25-261 தெச 4:5சங் 103:13 எனவே முதலாவதாக இறைவனுடைய அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு அவற்றோடுகூடக் கொடுக்கப்படும். லூக் 12:31மத் 5:6யோவா 6:27சங் 34:9-10சங் 84:11-12மாற் 10:29-30ரோம 14:17நீதி 3:9-10 நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாளையத்தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும், அன்றன்றுள்ள பிரச்சனையே போதும். மத் 6:25யோவா 14:27எபி 13:5-6யோவா 16:33லூக் 11:3புலம் 3:23மத் 6:111 இராஜா 17:14-16