கானானை வேவு பார்த்தல்
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கவிருக்கும் கானான் நாட்டை ஆராய்ந்து அறிவதற்கு சில மனிதரை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் அதன் தலைவர்களில் ஒருவனை அனுப்பு” என்றார். உபா 1:22-25எண் 32:8எண் 34:18உபா 1:15யாத் 18:25யோசு 2:1-24எண் 1:4எண் 11:16
யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைப் பாரான் பாலைவனத்திலிருந்து அனுப்பினான். அவர்கள் எல்லோரும் இஸ்ரயேலரின் தலைவர்களாயிருந்தார்கள். எண் 12:16எண் 32:8உபா 1:19உபா 9:23உபா 1:23
அவர்களுடைய பெயர்களாவன:
ரூபன் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா,
சிமியோன் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகன் சாப்பாத்,
யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப், எண் 14:6எண் 34:19யோசு 14:6-15எண் 13:30எண் 14:301 நாளாக 4:15எண் 14:24எண் 26:65
இசக்கார் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகன் ஈகால்,
எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து நூனின் மகன் ஓசேயா, யாத் 24:13எண் 11:28உபா 31:14உபா 31:23உபா 31:7-8உபா 32:44உபா 34:9யாத் 17:9-13
பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகன் பல்த்தி,
செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்,
யோசேப்பு கோத்திரத்தானான மனாசேயின் கோத்திரத்திலிருந்து சூசியின் மகன் காதி,
தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மியேல்,
ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாயேலின் மகன் சேத்தூர்,
நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேசியின் மகன் நாகபி,
காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகன் கூயேல்.
நாட்டை ஆராய்ந்து அறிவதற்கு மோசே அனுப்பிய மனிதர்களின் பெயர்கள் இவையே. மோசே நூனின் மகன் ஒசேயாவுக்கு யோசுவா என்று பெயரிட்டான். எண் 13:8யாத் 17:9அப் 7:45உபா 32:44எபி 4:8ஓசி 1:1மத் 1:21-23எண் 14:30
கானானை ஆராய்ந்து அறியும்படிக்கு மோசே அவர்களை அனுப்பியபோது, அவன் அவர்களிடம், “நீங்கள் தெற்கு பிரதேசத்தின் வழியாக மலைநாட்டிற்குப் போங்கள். நியாயாதி 1:9ஆதி 12:9ஆதி 13:1நியாயாதி 1:15நியாயாதி 1:19யோசு 15:3உபா 1:44ஆதி 14:10 போய், அந்த நாடு எப்படிப்பட்டதுதென்றும், அங்கே வாழும் மக்கள் பலசாலிகளா, பலவீனர்களா, அதிகமானவர்களா, குறைவானவர்களா என்றும் பாருங்கள். யாத் 3:8எசேக் 34:14 அவர்கள் வாழும் நிலம் எப்படிப்பட்டது? நல்லதோ? கெட்டதோ? அவர்கள் வாழும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை? அரண் அற்றவையோ? அரணுள்ளவையோ? மண் எப்படிப்பட்டது? அது வளமுள்ளதா, வளமற்றதா? மரங்கள் இருக்கின்றனவா, இல்லையா? என்றும் பாருங்கள். அந்த நாட்டின் பழங்களில் சிலவற்றைக் கொண்டுவரவும் முயற்சி செய்யுங்கள்” என்றான். அது திராட்சை முதற்பழம் பழுக்கும் காலமாய் இருந்தது. உபா 31:23உபா 31:6-8எசேக் 34:14நெகே 9:25நெகே 9:351 நாளாக 22:11உபா 1:25எபி 13:6
அவர்கள் போய் சீன் பாலைவனம்தொடங்கி, லேபோ ஆமாத்துக்கு முன்பாக உள்ள ரேகோப் வரையும் நாட்டை ஆராய்ந்து பார்த்தார்கள். எண் 20:1எண் 33:36எண் 27:14யோசு 15:1யோசு 13:52 சாமு 8:9ஆமோ 6:2உபா 32:51 அவர்கள் தெற்கு பக்கத்தின் வழியாகப்போய் எப்ரோனுக்கு வந்தார்கள். அங்கே அகீமான், சேசாய், தல்மாய் ஆகிய ஏனாக்கின் சந்ததியினர் வாழ்ந்தார்கள். எப்ரோன் எகிப்திலுள்ள சோவான் கட்டப்படுவதற்கு ஏழு வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டது. சங் 78:12சங் 78:43ஏசா 19:11யோசு 15:13-14ஏசா 30:4நியாயாதி 1:10யோசு 11:21-222 சாமு 2:1 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை வந்தடைந்தபோது, ஒரு தனி திராட்சைப்பழக் குலையுடைய ஒரு கிளையை வெட்டினார்கள். அதனுடன் சில மாதுளம் பழங்களையும், அத்திப்பழங்களையும் ஒரு தடியில்போட்டு, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு போனார்கள். எண் 13:24எண் 32:9உபா 1:24-25நியாயாதி 16:4 அங்கே இஸ்ரயேலர் திராட்சைக் குலையை வெட்டியதனால் அந்த இடம், “எஸ்கோல் 1” பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. அவர்கள் நாற்பது நாட்களுக்கு நாட்டை ஆராய்ந்துபார்த்து பின்பு திரும்பி வந்தார்கள். யாத் 34:28யாத் 24:18எண் 14:33-34
நாட்டைப் பற்றிய அறிக்கை
அவர்கள் பாரான் பாலைவனத்திலுள்ள காதேசில் இருந்த மோசே, ஆரோன் மற்றும் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரிடமும் வந்தார்கள். தாம் ஆராய்ந்து அறிந்தவற்றை அவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் சொன்னதோடு, அந்நாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்களையும் அவர்களுக்குக் காட்டினார்கள். எண் 32:8எண் 20:1உபா 1:19எண் 20:16எண் 33:36யோசு 14:6 அவர்கள் மோசேயிடம், “நீர் அனுப்பிய நாட்டிற்கு நாங்கள் போனோம். அது பாலும் தேனும் 2 வழிந்தோடும் நாடு! இதோ அதன் பழங்கள். யாத் 3:8யாத் 13:5யாத் 3:17யாத் 33:3உபா 26:9உபா 31:20உபா 1:25-33உபா 26:11-15 ஆனால் அங்குள்ள மக்களோ மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அத்துடன் நகரங்களும் அரணுள்ளவையும், விசாலமானவையுமாய் இருக்கின்றன. அங்கே ஏனாக்கின் சந்ததிகளைக்கூட நாங்கள் கண்டோம். உபா 1:28உபா 9:1-2யோசு 11:22எண் 13:33உபா 2:10-11உபா 2:21உபா 3:5யோசு 15:14 அமலேக்கியர் நாட்டின் தெற்கு பகுதியில் வாழ்கிறார்கள். ஏத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கிறார்கள். கடல் அருகேயும், யோர்தான் நதியோரம் கானானியர் வாழ்கிறார்கள்” என்று விவரமாய்ச் சொன்னார்கள். எண் 14:43நியாயாதி 6:31 சாமு 14:481 சாமு 15:3-91 சாமு 30:1யாத் 17:8-16யாத் 3:17யாத் 3:8
அப்பொழுது காலேப், மக்களை மோசேக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவர்களிடம், “நாம் இப்பொழுதே போய் அந்நாட்டை நமக்கு உடைமையாக்கிக் கொள்ளவேண்டும். நிச்சயமாக நாம் அதைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்” என்றான். எண் 14:24பிலி 4:13ரோம 8:31சங் 60:12எண் 14:6-9எபி 11:33ஏசா 41:10-16ரோம 8:37
ஆனால் காலேப்புடன் போன மனிதர்களோ, “அந்த மக்களை எதிர்க்க நம்மால் முடியாது. ஏனெனில், அவர்கள் எங்களைப்பார்க்கிலும் பலசாலிகள்” என்றார்கள். உபா 1:28யோசு 14:8எபி 3:19உபா 9:1எண் 32:9 அவர்கள் தாம் ஆராய்ந்து அறிந்து வந்த நாட்டைப்பற்றி இஸ்ரயேலர் மத்தியில் பிழையான செய்தியைப் பரப்பினார்கள். நாங்கள் ஆராய்ந்து அறிந்து வந்த நாடு அங்கு வாழ்கிறவர்களை அழித்தொழிக்கும் நாடு. நாங்கள் அங்கு கண்ட மக்களும் உருவத்தில் பெரியவர்கள். ஆமோ 2:9எண் 14:36-37எசேக் 36:13-14மத் 23:132 சாமு 21:20உபா 1:281 நாளாக 20:6எண் 13:28 அரக்கர்களின் வழிவந்த ஏனாக்கின் சந்ததிகளான அரக்கர்களையும் அங்கு கண்டோம். நாங்கள் எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன்னால் வெட்டுக்கிளிகளைப்போல் காணப்பட்டோம். அவர்களுடைய பார்வையிலும் நாங்கள் அப்படியே காணப்பட்டோம் என்றார்கள். உபா 1:28ஆதி 6:4ஏசா 40:221 சாமு 17:42உபா 9:2உபா 3:111 நாளாக 11:231 சாமு 17:4-7