இஸ்ரயேலரை ஆசீர்வதிப்பதையே யெகோவா விரும்புகிறார் என பிலேயாம் அறிந்தான். எனவே அவன் முன்புபோல் மாந்திரீகத்தின் உதவியை நாடாமல், பாலைவனத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான். எண் 23:23எண் 22:13எண் 23:15எண் 23:20எண் 23:28எண் 23:3எண் 31:16வெளி 2:14 பிலேயாம் வெளியே பார்க்கையில், இஸ்ரயேலர் கோத்திரம் கோத்திரமாய் முகாமிட்டிருப்பதைக் கண்டான். அந்நேரத்தில் இறைவனின் ஆவியானவர் அவன்மேல் வந்தார். 1 சாமு 19:202 நாளாக 15:11 சாமு 10:101 சாமு 19:23எண் 11:25-29எண் 2:2-34யோவா 11:49-51லூக் 10:20 அவன் இறைவாக்குரைத்துச் சொன்னதாவது: எண் 23:7எண் 24:16எண் 22:31எண் 23:18எண் 24:4
“பேயோரின் மகன் பிலேயாமின் இறைவாக்கு,
தெளிவாய்ப் பார்க்கும் கண்களை உடையவனின் இறைவாக்கு,
இறைவனின் வார்த்தைகளைக் கேட்கிறவனின் இறைவாக்கு, வெளி 1:17வெளி 1:102 கொரி 12:1-4எசேக் 1:28எண் 12:61 சாமு 19:24அப் 10:10அப் 10:19
அவன் எல்லாம் வல்லவரிடமிருந்து தரிசனம் காண்கிறவன்,
அவன் முகங்குப்புற கீழே விழுந்தவன், கண்கள் திறக்கப்பட்டவன்:
“யாக்கோபே, உன் கூடாரங்களும்,
இஸ்ரயேலே, உன் குடியிருப்புகளும் எவ்வளவு அழகானவை!
“அவை பள்ளத்தாக்குகளைப்போல் பரந்திருக்கின்றன, சங் 1:3ஏசா 58:11சங் 104:16எசேக் 31:3-4எசேக் 47:12ஆதி 13:10ஆதி 2:8-10ஏசா 41:19
ஆற்றின் அருகில் இருக்கும் தோட்டங்களைப்போல் இருக்கின்றன,
யெகோவா நட்ட சந்தனமரங்களைப்போல் இருக்கின்றன.
தண்ணீரருகே நிற்கிற கேதுருமரங்களைப்போல் இருக்கின்றன.
அவர்கள் வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; 2 சாமு 5:121 நாளாக 14:2எரே 51:13வெளி 17:11 சாமு 15:8-9வெளி 17:15வெளி 19:161 இராஜா 4:21
அவர்களுடைய வித்து நீர்த்திரளின்மேல் பரவும்.
“அவர்களுடைய அரசன் ஆகாபைப் பார்க்கிலும் பெரியவனாயிருப்பான்;
அவர்கள் அரசு புகழ்ந்துயர்த்தப்படும்.
“இறைவன் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்; சங் 45:5எரே 50:17எண் 14:9எண் 23:22எண் 23:24சங் 2:9ஏசா 38:13எரே 50:9
அவர்களுக்கு ஒரு காட்டெருதின் பெலன் இருக்கிறது.
அவர்கள் தங்களுக்கு விரோதமான நாடுகளை விழுங்கிப்போடுவார்கள்.
அவர்களுடைய எலும்புகளையும் முறித்துப்போடுவார்கள்;
அவர்கள் தங்களுடைய அம்புகளினால் உருவக்குத்துவார்கள்.
அவர்கள் சிங்கத்தைப் போலவும் பெண் சிங்கத்தைப் போலவும் ஆதி 12:3ஆதி 27:29ஆதி 49:9எண் 23:24மத் 25:45யோபு 38:39-40மத் 25:40அப் 9:5
மடங்கிப் படுத்திருக்கிறார்கள்; அவற்றை எழுப்பத் துணிபவன் யார்?
“உங்களை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்களாக;
உங்களை சபிப்பவர்கள் சபிக்கப்பட்டிருப்பார்களாக!”
அப்பொழுது பிலேயாமுக்கு விரோதமாக பாலாக்கின் கோபம் மூண்டது. அவன் தன் கைகளைத் தட்டி பிலேயாமிடம்: “நான் என் பகைவர்களைச் சபிக்கவே உன்னை அழைப்பித்தேன். ஆனால் நீயோ, இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறாய். எசேக் 21:14எண் 23:11எசேக் 21:17எசேக் 22:13யோபு 27:23யோசு 24:9-10நெகே 13:2உபா 23:4-5 இப்பொழுது நீ உடனடியாக உன் வீட்டிற்குப் போ. நான் உனக்கு நிறைய வெகுமதி கொடுப்பேன் என சொல்லியிருந்தேன். ஆனால் அந்த வெகுமதிகளை நீ பெறாதபடி யெகோவா உன்னைத் தடுத்துள்ளார்” என்றான். எண் 22:17எண் 22:371 பேது 5:2-32 யோவா 1:8அப் 8:20எபி 11:24-26மத் 19:28-30பிலி 3:8
அதற்குப் பிலேயாம் பாலாக்கிடம்: “நீ என்னிடம் அனுப்பிய தூதுவர்களிடம் நான் சொல்லவில்லையா? எண் 22:18எண் 22:38 ‘பாலாக், வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தன் அரண்மனையை நிறைத்து அதை எனக்குத் தந்தாலும் யெகோவாவினுடைய கட்டளையை மீறி என் சொந்த விருப்பத்தின்படி எந்த நன்மையையோ, தீமையையோ என்னால் செய்யமுடியாது. யெகோவா சொல்வதை மட்டுமே நான் செய்யவேண்டும்’ என்று சொல்லியிருந்தேனே! எண் 16:28எண் 22:18எண் 22:20 இப்பொழுது நான் என் மக்களிடத்திற்குப் போகப்போகிறேன். நீ வா. இந்த மக்கள் வரப்போகும் நாட்களில் உன் மக்களுக்கு என்ன செய்வார்கள் என நான் உன்னை எச்சரிப்பேன்” என்றான். மீகா 6:5ஆதி 49:1வெளி 2:14தானி 2:282 தீமோ 3:1அப் 2:17தானி 10:14ஓசி 3:5
பிலேயாமின் நான்காம் இறைவாக்கு
பின்பு அவன் தன் இறைவாக்கை உரைத்துச் சொன்னதாவது: எண் 23:7எண் 24:3-4யோபு 27:1மத் 13:35எண் 23:18
“பேயோரின் மகன் பிலேயாமின் இறைவாக்கு,
தெளிவாய்ப் பார்க்கும் கண்களை உடையவனின் இறைவாக்கு,
இறைவனின் வார்த்தைகளைக் கேட்பவனின் இறைவாக்கு, எண் 24:41 கொரி 13:21 கொரி 8:12 சாமு 23:1-2
அவன் மகா உன்னதமானவரிடமிருந்து அறிவைப்பெற்றவன்,
எல்லாம் வல்லவரிடத்தில் இருந்து தரிசனம் காண்கிறவன்,
முகங்குப்புற விழும்போது, கண்கள் திறக்கப்பட்டவன்:
“நான் அவரைக் காண்கிறேன், ஆனால் இப்பொழுது அல்ல; வெளி 22:16லூக் 1:32-33ஆதி 49:10வெளி 1:7வெளி 11:152 பேது 1:19மத் 2:2-9சங் 45:6
நான் அவரைப் பார்க்கிறேன், ஆனால் சமீபமாய் அல்ல.
யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் வரும்,
இஸ்ரயேலில் இருந்து ஒரு செங்கோல் எழும்பும்.
அவர் மோவாபியரின் நெற்றிகளை 1 நொறுக்குவார்,
சேத்தின் சந்ததி எல்லோரையும் தண்டிப்பார்.
ஏதோம் வெற்றிகொள்ளப்படும்; ஆமோ 9:122 சாமு 8:14ஆதி 27:29ஆதி 27:40ஆதி 32:3ஏசா 34:5ஏசா 63:1சங் 60:1
அவரது பகைவனான சேயீரும் வெற்றிகொள்ளப்படுவான்.
ஆனால் இஸ்ரயேலோ வலிமையில் பெருகும்.
யாக்கோபிலிருந்து ஒரு ஆளுநர் வருவார். ஆதி 49:10மத் 28:18மீகா 5:2சங் 2:1-121 கொரி 15:251 பேது 3:22எபே 1:20-22ஏசா 11:10
பட்டணத்தில் தப்புகிறவர்களை அவர் தண்டிப்பார்” என்றான்.
பிலேயாமின் ஐந்தாவது இறைவாக்கு
அதன்பின் பிலேயாம் அமலேக்கியரைக் கண்டு, இறைவாக்குரைத்து: யாத் 17:14யாத் 17:81 நாளாக 4:431 சாமு 14:481 சாமு 15:3-81 சாமு 27:8-91 சாமு 30:11 சாமு 30:17
“நாடுகளுக்குள்ளே அமலேக்கியர் முதலாவதாயிருந்தார்கள்.
ஆனால் கடைசியில் அவர்களுக்கு அழிவே இருக்கும்” என்றான்.
பிலேயாமின் ஆறாவது இறைவாக்கு
பின்பு அவன் கேனியரைக் கண்டு இறைவாக்குரைத்து: ஆதி 15:19நியாயாதி 1:16யோபு 29:18
“உங்கள் குடியிருப்பு பாதுகாப்பாயிருக்கிறது,
உங்களுடைய கூடு ஒரு கற்பாறையில் அமைந்திருக்கிறது.
ஆனாலும் கேனியரே! அசூர் உங்களைச் சிறைபிடிக்கும்போது எஸ்றா 4:2ஆதி 10:11ஆதி 10:22சங் 83:8ஓசி 14:3
நீங்கள் அழிக்கப்படுவீர்கள்” என்றான்.
பிலேயாமின் ஏழாவது இறைவாக்கு
பின்னும் பிலேயாம் இறைவாக்கைத் தொடர்ந்து சொன்னது: எண் 23:232இராஜா 5:1மல்கி 3:2
“ஐயோ! இறைவன் இதைச் செய்யும்போது யாரால் உயிர்த்தப்பி வாழமுடியும்?
கித்தீம் கரைகளிலிருந்து கப்பல்கள் வந்து, ஆதி 10:4தானி 10:20தானி 11:30ஆதி 10:21-25எண் 24:20தானி 11:45தானி 2:35தானி 2:45
அசூரையும், ஏபேரையும் கீழ்ப்படுத்தும்.
அவர்களும் அழிந்துபோவார்கள்.”
அதன்பின் பிலேயாம் எழுந்து வீட்டிற்குத் திரும்பினான், பாலாக் தன் வழியே போனான். எண் 31:8யோசு 13:22எண் 24:11