வெளிப்படுத்தின விசேஷம் 16

Revelation 16

இறைவனின் கோபத்தின் ஏழு கிண்ணங்கள்

பின்பு நான், ஆலயத்திலிருந்து ஒரு சத்தமான குரலைக் கேட்டேன். அது அந்த ஏழு இறைத்தூதர்களிடம், “போங்கள், இறைவனுடைய கோபத்தின் ஏழு கிண்ணங்களையும் பூமியின்மேல் ஊற்றுங்கள்” என்று சொன்னது. செப்ப 3:8எரே 10:25வெளி 15:1சங் 79:6வெளி 16:17வெளி 15:5-8வெளி 16:2-12மத் 13:41-42

முதலாவது இறைத்தூதன் போய், தனது கிண்ணத்திலுள்ளதைத் தரையின்மேல் ஊற்றினான். அப்பொழுது மிருகத்தின் அடையாளம் உள்ளவர்கள்மேலும், அதன் உருவச்சிலையை வணங்கியவர்கள்மேலும், வேதனை உண்டாக்கும் கொடிய புண்கள் ஏற்பட்டன. வெளி 8:7வெளி 16:11வெளி 13:15-18உபா 28:27யாத் 9:8-11லூக் 16:20-221 சாமு 5:61 சாமு 5:9

இரண்டாவது இறைத்தூதன், தனது கிண்ணத்திலுள்ளதைக் கடலின்மேல் ஊற்றினான். அது இறந்துபோன மனிதனுடைய இரத்தத்தைப்போல் மாறியது. அப்பொழுது கடலிலுள்ள எல்லா உயிரினங்களும் செத்துப்போயின. யாத் 7:17-21வெளி 8:8-9வெளி 11:6சங் 105:29சங் 78:44எசேக் 16:38ஆதி 7:22வெளி 10:2

மூன்றாவது இறைத்தூதன், தனது கிண்ணத்திலுள்ளதை ஆறுகளின்மேலும், நீரூற்றுகளின்மேலும் ஊற்றினான்; அவை இரத்தமாகின. யாத் 7:17-20வெளி 8:10-11ஓசி 13:15வெளி 14:7ஏசா 50:2வெளி 16:5யாத் 8:5எசேக் 35:8 பின்பு தண்ணீர்களுக்குப் பொறுப்பாயிருந்த இறைத்தூதன் இப்படியாக சொன்னதைக் கேட்டேன். அவன்: வெளி 1:8வெளி 11:17வெளி 1:4சங் 145:172 தெச 1:5-6ஆதி 18:25சங் 129:4வெளி 15:3-4

“இருக்கிறவரும் இருந்தவருமான பரிசுத்தரே,

இந்த நியாயத்தீர்ப்புகளில் நீர் நியாயமானவராய் இருந்திருக்கிறீர்;

ஏனெனில், நீர் நியாயந்தீர்க்க நீதியுள்ளவராய் இருக்கிறீர்;

இவர்கள் உமது பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும், ஏசா 49:26வெளி 11:18வெளி 6:10-11லூக் 11:49-50வெளி 18:242இராஜா 24:4மத் 23:30-37வெளி 13:15

இறைவாக்கினரின் இரத்தத்தையும் சிந்தினார்கள்;

எனவே, நீர் அவர்களுக்கு இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்தது

அவர்களுக்கு ஏற்ற தண்டனையே”

என்றான்.

அப்பொழுது பலிபீடத்திலிருந்து: வெளி 19:2வெளி 6:9வெளி 15:3-4ஏசா 6:6வெளி 8:3-5வெளி 14:18எசேக் 10:2எசேக் 10:7

“ஆம், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே,

உமது நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவை”

என்று பதில் வருவதைக் கேட்டேன்.

நான்காவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை சூரியனின்மேல் ஊற்றினான். அப்பொழுது சூரியனுக்கு மனிதரை நெருப்பினால் சுட்டெரிக்கும் வல்லமை கொடுக்கப்பட்டது. அப் 2:20யோனா 4:8லூக் 21:25வெளி 14:18வெளி 7:16ஏசா 24:23மத் 13:6வெளி 6:12 அந்தக் கடும் வெப்பத்தினால் மக்கள் பொசுங்கினார்கள். அப்பொழுது இந்த வாதைகளின்மேல் அதிகாரமுள்ள இறைவனின் பெயரை அவர்கள் சபித்தார்களேதவிர, அவர்கள் மனந்திரும்பவும் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தவும் மறுத்தார்கள். வெளி 16:21வெளி 2:21எரே 5:3லூக் 13:5வெளி 11:13வெளி 16:10-11லூக் 13:3ஆமோ 4:6-12

ஐந்தாவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை மிருகத்தின்மேலும், அதன் அரியணையின்மேலும் ஊற்றினான். அப்பொழுது அவனுடைய அரசு இருளில் மூழ்கியது. வேதனையினால் மனிதர்களின் நாவுகளைக் கடித்துக்கொண்டார்கள். வெளி 9:2மத் 8:12யாத் 10:21-23ஏசா 8:21-22மத் 22:13வெளி 13:2-4வெளி 17:17வெளி 18:23 அவர்கள் தங்களுடைய வேதனைகளினாலும், அவர்களின் புண்களினாலும் பரலோகத்தின் இறைவனை சபித்தார்களேதவிர, தாங்கள் செய்ததைவிட்டு மனந்திரும்ப மறுத்தார்கள். வெளி 16:9வெளி 11:13வெளி 16:2வெளி 16:21வெளி 2:21சங் 136:262 தீமோ 3:13தானி 2:18-19

ஆறாவது இறைத்தூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை, ஐபிராத்து எனப்பட்ட பெரிய ஆற்றின்மேல் ஊற்றினான். அப்பொழுது கிழக்கிலிருந்து வரும் அரசருக்கு வழியை ஏற்படுத்தும்படி அந்த ஆற்றின் தண்ணீர் வற்றிப்போயிற்று. வெளி 9:14எரே 51:36ஏசா 41:25ஏசா 44:27ஏசா 11:15ஏசா 42:15எரே 50:38-40தானி 11:43-45 அதற்குப் பின்பு நான், மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன். அவை தவளைகளைப்போல் காணப்பட்டன; அவை அந்த இராட்சதப் பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், அந்தப் பொய் தீர்க்கதரிசியின் வாயிலிருந்தும் வெளியே வந்தன. வெளி 19:202 தெச 2:9-111 யோவா 4:1-3வெளி 20:10வெளி 13:11-18வெளி 16:141 தீமோ 4:1-3யாத் 8:2-7 அவை அற்புத அடையாளங்களைச் செய்துகாட்டும் பிசாசுகளின் ஆவிகள்; அவை உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களிடம் புறப்பட்டுச்சென்றன. எல்லாம் வல்ல இறைவனுடைய அந்த மகாநாளில், அவருக்கு எதிராக நடக்கப்போகும் யுத்தத்திற்காக, அவர்களை ஒன்றுசேர்க்கும்படியே அவை சென்றன. வெளி 17:141 தீமோ 4:1வெளி 20:81 யோவா 5:192 கொரி 11:13-15யாக் 3:152 தெச 2:9யோவா 8:44

கர்த்தர் சொன்னதாவது, “இதோ, நான் திருடனைப்போல் வருகிறேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது உடைகளை ஆயத்தமாய் வைத்திருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்பொழுது அவன் நிர்வாணமாய் வெளியேப்போய், பகிரங்கமாய் வெட்கத்திற்குட்படமாட்டான்.” 1 தெச 5:2-3மத் 24:42-432 பேது 3:10வெளி 3:18வெளி 3:3-4லூக் 12:37-43மத் 25:13மாற் 13:33-37

பின்பு அந்த அற்புத அடையாளங்களைச் செய்யும் ஆவிகள், அரசர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்த்துக்கொண்டு, எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்தன. சகரி 12:11நியாயாதி 5:19யோவே 3:9-142இராஜா 23:29-30வெளி 17:14வெளி 19:17-21வெளி 9:11யோவா 19:13

ஏழாவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை ஆகாயத்திலே ஊற்றினான். அப்பொழுது ஆலயத்திலிருந்து ஒரு சத்தமான குரல், “செய்தாயிற்று!” என்று அரியணையிலிருந்து கூறியது. யோவா 19:30வெளி 21:6எபே 2:2எபே 6:12தானி 12:7-13வெளி 10:6-7வெளி 15:5-6வெளி 11:15 அப்பொழுது மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கங்களும், பெரிய பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன. மனிதர் பூமியில் உண்டான நாளிலிருந்து, அதுபோன்ற பூமியதிர்ச்சி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவ்வளவு பலமாய் அந்தப் பூமியதிர்ச்சி இருந்தது. தானி 12:1வெளி 4:5வெளி 11:13வெளி 11:19மத் 24:21வெளி 6:12வெளி 8:5 மகா நகரமான பாபிலோன், மூன்று பகுதிகளாகப் பிளந்தன. உலக நாடுகளின் நகரங்கள் இடிந்து விழுந்தன. மகா பாபிலோனை இறைவன் மறந்துவிட, இவ்வாறு அவர் தமது கடுங்கோபத்தின் கிண்ணத்திலே, தனது கோபத்தின் திராட்சை மதுவை நிரப்பி அவளுக்குக் கொடுத்தார். வெளி 17:18வெளி 18:5வெளி 18:10வெளி 18:21வெளி 18:16-19வெளி 18:2தானி 4:30எரே 25:15-16 தீவுகளெல்லாம் மறைந்துபோயிற்று; மலைகள் காணப்படாமற்போயிற்று. வெளி 6:14வெளி 20:11ஏசா 2:14-17எரே 4:23-25 வானத்திலிருந்து பெரும் கல்மழை மனிதர்மேல் விழுந்தது. அதன் கல் ஒவ்வொன்றும் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அப்பொழுது மனிதர், அந்தக் கல்மழையின் வாதையினிமித்தம் இறைவனைச் சபித்தார்கள்; ஏனெனில், அந்த வாதை மிகவும் கொடியதாக இருந்தது. வெளி 11:19யோசு 10:11வெளி 16:9வெளி 16:11வெளி 8:7யாத் 9:23-26எசேக் 13:11எசேக் 13:13