சகரியா 10

Zechariah 10

யெகோவா யூதாவை ஆதரிப்பார்

யூதா மக்களே, யெகோவாவிடம் வசந்தகாலத்தில் மழைக்காக மன்றாடுங்கள்; யாக் 5:16-18ஏசா 44:3மத் 7:7-8உபா 28:23யாக் 5:7யோவா 16:23சங் 65:9எசேக் 36:37

யெகோவாவே மழைமேகங்களை உண்டாக்குகிறவர்.

அவர் மனிதர்களுக்கு மழையைப் பொழியச்செய்து,

அனைவருக்காகவும் வயலின் பயிர்களை விளையச் செய்கிறவர்.

விக்கிரகங்கள் வஞ்சனை பேசுகின்றன. மத் 9:36எரே 27:9எசேக் 34:5ஆதி 31:19எசேக் 34:8ஆப 2:18ஓசி 3:41 இராஜா 22:17

குறிசொல்கிறவர்கள் பொய்யான காட்சிகளைக் காண்கிறார்கள்.

உண்மையற்ற கனவுகளைக் கூறுகிறார்கள்.

அவர்கள் கொடுக்கும் ஆறுதலும் பயனற்றது.

ஆகவே மக்கள் செம்மறியாடுகளைப்போல் வழிதப்பி,

மேய்ப்பன் இல்லாதபடியால் ஒடுக்கப்படுகிறார்கள்.

“மேய்ப்பர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது, எசேக் 34:7-10எசேக் 34:2எசேக் 34:16-17எசேக் 34:20-21எரே 23:1-2எரே 25:34சகரி 11:17செப்ப 2:7

தலைவர்களை நான் தண்டிப்பேன்;

சேனைகளின் யெகோவா,

யூதா குடும்பத்தாராகிய தமது மந்தையைப் பராமரிப்பார்,

அவர்களை யுத்த களத்தின் கம்பீரமான குதிரையைப் போலாக்குவார்.

மூலைக்கல்லும் கூடாரத்திற்கான முளையும், சகரி 9:10எஸ்றா 9:8எண் 24:17வெளி 19:13-15சகரி 9:81 சாமு 14:382 கொரி 10:4-52 தீமோ 2:4

யுத்த வில்லும்,

யூதாவிலிருந்தே தோன்றும்.

யூதாவிலிருந்தே எல்லா ஆளுநர்களும் தோன்றுவார்கள்.

யுத்தத்தில் வீதிகளின் சேற்றில் எதிரியை மிதிக்கும் வலிமையான மனிதர்போல், ஆகா 2:22சங் 20:7ரோம 8:31-37சகரி 12:8சகரி 9:131 சாமு 16:182 கொரி 10:42 சாமு 22:43

அவர்கள் ஒன்றுசேர்ந்திருப்பார்கள்.

யெகோவா அவர்களோடிருப்பதால் அவர்கள் போரிட்டு,

குதிரைவீரரையும் முறியடிப்பார்கள்.

“நான் யூதா குடும்பத்தாரைப் பெலப்படுத்துவேன். சகரி 10:12சகரி 13:9செப்ப 3:19-20எரே 3:18ஏசா 41:10எசேக் 36:37ஓசி 1:11சகரி 8:11

யோசேப்பு குடும்பத்தாரைக் காப்பாற்றுவேன்.

நான் அவர்கள்மேல் இரக்கங்கொண்டபடியால்,

நான் அவர்களை

முந்திய நிலைக்குக் கொண்டுவருவேன்.

அவர்கள் என்னால் புறக்கணிக்கப்படாதவர்கள்போல் இருப்பார்கள்.

ஏனெனில் அவர்களின் இறைவனாகிய யெகோவா நானே.

நான் அவர்களின் வேண்டுதலுக்கு விடையளிப்பேன்.

எப்பிராயீமியர் வலிமைமிக்க மனிதரைப் போலாவார்கள். சகரி 9:151 பேது 1:8லூக் 1:47பிலி 4:41 சாமு 2:1அப் 2:13-18அப் 2:26ஆதி 18:19

திராட்சை இரசம் குடித்தவர்களைப்போல் அவர்கள் உள்ளத்தில் மகிழ்வார்கள்.

அவர்களுடைய பிள்ளைகள் அதைக்கண்டு களிகூருவார்கள்;

அவர்களின் உள்ளம் யெகோவாவிடம் மகிழும்.

நான் சைகை காட்டி ஏசா 5:26ஏசா 7:18எரே 33:22எசேக் 36:10-11ஓசி 1:10ஏசா 55:1-3எரே 31:10-11மத் 11:28

அவர்களை ஒன்றுகூட்டுவேன்.

நிச்சயமாய் நான் அவர்களை மீட்பேன்.

அவர்கள் முன்போல் எண்ணற்றவர்களாய் இருப்பார்கள்.

மக்கள் கூட்டங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், எசேக் 6:9ஏசா 65:23நெகே 1:91 இராஜா 8:47-48எஸ்த 8:17ஓசி 2:23ஏசா 65:9எரே 31:27

தூரதேசங்களிலும் இன்னும் அவர்கள் என்னை நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் தப்பிப் பிழைப்பார்கள்.

அவர்கள் திரும்பி வருவார்கள்.

அவர்களை நான் எகிப்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்து, ஓசி 11:11ஏசா 49:19-21எரே 50:19மீகா 7:14சகரி 8:7எசேக் 47:18-21ஏசா 11:11-16ஏசா 19:23-25

அசீரியாவிலிருந்த அவர்களை ஒன்றுகூட்டி,

கீலேயாத், லெபனோன் நாடுகளுக்குக் கொண்டுவருவேன்.

அவர்களுக்கு அங்கே போதுமான இடம் இருக்காது.

தொல்லை என்னும் கடலைக் கடந்து செல்வார்கள்; எசேக் 30:13ஏசா 43:2மீகா 5:5-6யாத் 14:21-22ஏசா 11:15-16ஏசா 51:10சங் 114:3சங் 66:10-12

ஏனெனில் கொந்தளிக்கும் கடல் அமைதியாக்கப்படும்.

நைல் நதியின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்;

அசீரியாவின் அகந்தை தாழ்த்தப்படும்.

எகிப்தின் செங்கோலும் அதைவிட்டு எடுபடும்.

நான் அவர்களை யெகோவாவிடம் பெலப்படுத்துவேன்” ஏசா 41:10ஏசா 2:5மீகா 4:5சகரி 10:62 தீமோ 2:1கொலோ 2:6கொலோ 3:17பிலி 4:13

அவருடைய பெயரில் அவர்கள் நடப்பார்கள்

என்று யெகோவா அறிவிக்கிறார்.