சகரியா 12

Zechariah 12

எருசலேமின் பகைவர்கள் அழிக்கப்படுதல்

இஸ்ரயேலைக் குறித்துக் கிடைத்த யெகோவாவின் வார்த்தை இதுவே. ஏசா 42:5எரே 51:15ஏசா 57:16எபி 1:10-12எபி 12:9ஏசா 44:24ஏசா 48:13சங் 102:25-26

வானங்களை விரிக்கிறவரும், பூமியின் அஸ்திபாரத்தைப் போடுகிறவரும், மனிதனின் ஆவியை அவனுக்குள் உருவாக்குகிறவருமாகிய யெகோவா அறிவிக்கிறதாவது: “நான் எருசலேமை, ஒரு பாத்திரமாக்குவேன்; அது எருசலேமையும் யூதாவையும் முற்றுகையிடப் பண்ணுகிற தன்னைச் சுற்றிலுமுள்ள மக்கள் கூட்டங்களைத் தள்ளாடி விழப்பண்ணும். சங் 75:8சகரி 14:14ஏசா 51:22-23ஏசா 51:17ஆப 2:16எரே 25:15எரே 25:17எரே 49:12 அந்நாளில் பூமியிலுள்ள நாடுகள் யாவும், அதற்கெதிராக ஒன்றுகூடும்போது, நான் எருசலேமை எல்லா நாடுகளுக்கும் அசைக்க முடியாத கற்பாறையாக்குவேன். அதை அசைக்க முயலும் நாடுகள் தம்மைத்தாமே காயப்படுத்திக் கொள்வார்கள். மத் 21:44சகரி 14:2-4தானி 2:34-35லூக் 20:18எசேக் 38:1-23ஏசா 66:14-16சகரி 13:1சகரி 14:6 அந்த நாளில் குதிரைகளையெல்லாம் திகிலடையவும், அவற்றில் ஏறிவரும் வீரர்களையெல்லாம் புத்தி பேதலிக்கவும் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “யூதா வீட்டார்மேல் நான் கண்ணோக்கமாய் இருப்பேன். ஆனால் நாடுகளின் குதிரைகளையோ குருடாக்குவேன். உபா 28:28சகரி 12:3அப் 17:30சகரி 12:61 இராஜா 8:292 நாளாக 6:202 நாளாக 6:402 நாளாக 7:15 அப்பொழுது யூதாவின் தலைவர்கள், ‘எருசலேம் மக்கள் வலிமை வாய்ந்தவர்கள், ஏனெனில் சேனைகளின் யெகோவாவே அவர்களின் இறைவனாயிருக்கிறார்’ என தங்கள் உள்ளங்களில் சொல்லிக்கொள்வார்கள். யோவே 3:16சங் 18:32சகரி 10:12சங் 144:1சங் 18:392 கொரி 12:9-10ஏசா 28:6ஏசா 41:10-16

“அந்த நாளில் யூதாவின் தலைவர்களை விறகுகளின் குவியலுக்குள் வைக்கப்பட்ட தீச்சட்டியைப்போலவும், கதிர்க்கட்டுக்குள் வைக்கப்பட்ட எரியும் தீப்பந்தத்தைப் போலவும் ஆக்குவேன். அப்பொழுது அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டங்களை வலது புறமும், இடது புறமுமாக எரித்துப் போடுவார்கள். ஆனால் எருசலேமின் குடிகளோ, தங்கள் சொந்த இடங்களிலேயே சேதமின்றி இருப்பார்கள். ஒபதி 1:18தானி 2:44-45மீகா 5:5-8சங் 149:6-9சகரி 2:4தானி 2:34-35எசேக் 48:30-35ஏசா 10:16-18

“யெகோவா முதலாவதாக யூதாவின் குடிகளைப் பாதுகாப்பார். இதனால் தாவீது வீட்டாரின் மேன்மையும், எருசலேம் குடிகளின் மேன்மையும், யூதாவின் மேன்மையைவிட பெரியதாக இருக்காது. எரே 30:18ஆமோ 9:11சங் 35:26சங் 55:12ரோம 3:27ஏசா 2:11-17ஏசா 23:9யாக் 2:5 அந்நாளிலே யெகோவா எருசலேமில் வாழும் மக்களைப் பாதுகாப்பார்; அப்பொழுது அவர்களில் பெலன் மிகக்குறைந்தவனும் தாவீது அரசனைப்போல் இருப்பான். தாவீதின் குடும்பத்தினர் இறைவனைப்போல, அதாவது அவர்கள் முன்செல்லும் யெகோவாவின் தூதனைப்போல் இருப்பார்கள். மீகா 5:2-4யோவே 3:10யோவே 3:16-17மீகா 7:16மீகா 7:8சகரி 2:5சகரி 9:8யாத் 23:20-21 அந்த நாளிலே எருசலேமை தாக்குகிற எல்லா நாடுகளையும் அழிப்பதற்கு நான் புறப்படுவேன். ஏசா 54:17சகரி 14:2-3ஆகா 2:22சகரி 12:2

குத்தப்பட்டவனுக்குப் புலம்பல்

“நான் தாவீதின் குடும்பத்துக்கும், எருசலேமில் வசிப்பவர்களுக்கும் தயவின் உள்ளத்தையும், மன்றாடும் மனநிலையையும் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தியவரான என்னை நோக்கிப் பார்ப்பார்கள். ஒருவன் தன் ஒரே பிள்ளைக்காகப் புலம்புவதைப் போலவும், ஒருவன் தன் தலைப்பிள்ளை இறந்துபோனதால் மனங்கசந்து துயரப்படுவதைப்போலவும், அவர்கள் எனக்காக மனங்கசந்து அழுது புலம்புவார்கள். வெளி 1:7எசேக் 39:29யோவா 19:34-37யோவே 2:28-29எரே 6:26அப் 2:33ரோம 8:26ஆமோ 8:10 அந்த நாளில் எருசலேமில் எழும்பும் புலம்பல் பெரிதாயிருக்கும். அது மெகிதோ சமவெளியிலுள்ள அதாத்ரிம்மோன் பட்டணத்தில் ஏற்பட்ட புலம்பலைப்போல இருக்கும். 2 நாளாக 35:242இராஜா 23:29 நாடு துக்கங்கொண்டாடும், ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாக புலம்பும், அவர்களுடைய மனைவிமாரும் புறம்பாயிருந்து புலம்புவார்கள். தாவீதின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், நாத்தானின் குடும்பத்தின் வம்சமும் அவர்கள் மனைவிமாரும், வெளி 1:71 கொரி 7:52 சாமு 5:14யாத் 12:30எரே 31:18லூக் 3:31மத் 24:30சகரி 7:3 லேவியின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், சீமேயின் வம்சமும் அவர்களின் மனைவியரும், 1 நாளாக 23:101 நாளாக 23:71 நாளாக 3:191 நாளாக 4:271 இராஜா 1:82 நாளாக 29:142 சாமு 16:5யாத் 6:16-26 மீதமுள்ள எல்லா வம்சங்களும் அவர்களின் மனைவியரும் புலம்புவார்கள். நீதி 9:12