எருசலேமில் உள்ள மக்கள்
இஸ்ரவேல் எல்லோரும் தங்கள் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யப்பட்டார்கள்; இவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார்கள் தங்களுடைய துரோகத்தினால், பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள். 1 நாளாக 5:25-26நெகே 7:64நெகே 7:5எஸ்றா 2:59எஸ்றா 2:62-63எரே 52:14-15தானி 1:2மத் 1:1-16 தங்களுடைய சொந்த நிலங்களிலும் தங்களுடைய பட்டணங்களிலும் முன்பு குடியிருந்தவர்கள் இஸ்ரவேலர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப்பணியாளர்களுமே. நெகே 7:73எஸ்றா 2:58எஸ்றா 2:70எஸ்றா 8:20எஸ்றா 2:43நெகே 7:60யோசு 9:21-27நெகே 11:3-22 யூதா சந்ததிகளிலும், பென்யமீன் சந்ததிகளிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் சந்ததிகளிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால், நெகே 11:1நெகே 11:4-92 நாளாக 11:162 நாளாக 30:11 யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய். 1 நாளாக 2:5ஆதி 46:12எண் 26:201 நாளாக 4:1நெகே 10:13நெகே 11:4நெகே 11:6நெகே 8:7 சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும், நெகே 11:5எண் 26:20 சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே. 1 நாளாக 2:41 நாளாக 2:6ஆதி 38:30எண் 26:20 பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஒதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு. நெகே 11:7நெகே 10:20நெகே 8:4 எரோகாமின் மகன் இப்னெயா; மிக்கிரியின் மகனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்; தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள். நெகே 11:8
ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின். நெகே 11:10-24நெகே 12:19 அகிதூபின் மகனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் மகனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்காரன். நெகே 11:111 நாளாக 24:51 நாளாக 6:8-152இராஜா 23:42இராஜா 25:18அப் 5:24அப் 5:26எரே 20:1 மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும், 1 நாளாக 24:14எஸ்றா 2:37நெகே 11:12-13நெகே 7:40 அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். 1 நாளாக 26:301 நாளாக 26:321 நாளாக 26:6நெகே 11:14 லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா, 1 நாளாக 6:191 நாளாக 6:291 நாளாக 6:63நெகே 10:11நெகே 11:15-19நெகே 12:24எண் 26:57 பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மீகாவின் மகன் மத்தனியா, நெகே 11:221 நாளாக 11:171 நாளாக 12:251 நாளாக 12:351 நாளாக 25:2நெகே 10:12நெகே 11:17 எதுத்தூனின் மகனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் மகனாகிய ஆசாவின் மகன் பெரகியா, நெகே 12:28-301 நாளாக 12:251 நாளாக 2:541 நாளாக 25:11 நாளாக 25:31 நாளாக 25:62 நாளாக 35:15நெகே 11:17 வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான் என்பவர்களும், இவர்கள் சகோதரர்களுமே; இவர்கள் தலைவன் சல்லூம். 1 நாளாக 26:1-321 நாளாக 23:5நெகே 11:19 லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள். எசேக் 46:1-21 நாளாக 26:12-191 இராஜா 10:52இராஜா 11:19அப் 3:11எசேக் 44:2-3 கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் யெகோவாவுடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள். எண் 26:9-111 நாளாக 26:13-191 நாளாக 26:7-81 நாளாக 6:22-232 நாளாக 23:4-102இராஜா 11:152இராஜா 11:9சங் 42:1 எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே யெகோவா இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான். எண் 25:7-131 சாமு 16:18அப் 7:9-10எண் 3:32எண் 31:6எண் 4:16எண் 4:28எண் 4:33 மெசெல்மியாவின் மகனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாக இருந்தான். 1 நாளாக 26:141 நாளாக 26:2 வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள். 1 சாமு 9:91 நாளாக 23:1-321 நாளாக 28:131 நாளாக 9:311 நாளாக 25:1-261 நாளாக 26:1-21 நாளாக 28:211 நாளாக 9:16 அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள். எசேக் 44:141 நாளாக 23:322 நாளாக 23:19எசேக் 44:10-11நெகே 12:45 ஆலயத்தின் வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள். 1 நாளாக 26:14-18 அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள். 2இராஜா 11:52 நாளாக 23:82இராஜா 11:7 தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூல அறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1 நாளாக 26:20-272 நாளாக 31:5-12நெகே 10:38-39நெகே 13:5 காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள். 1 நாளாக 23:30-321 சாமு 3:15மல்கி 1:10ரோம 12:7 அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள். நெகே 12:44நெகே 13:4-51 நாளாக 26:22-26எஸ்றா 8:25-30எண் 23:25-27 அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள். 1 நாளாக 23:29யாத் 27:20யாத் 30:23-38 ஆசாரியர்களின் மகன்களில் சிலர் நறுமணப் பொருட்களால் பரிமளதைலம் இறக்குவார்கள். யாத் 30:23-25யாத் 37:29யாத் 30:33யாத் 30:35-38 லேவியர்களில் கோராகியனான சல்லூமின் மூத்த மகனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. 1 நாளாக 9:191 நாளாக 9:221 நாளாக 9:171 நாளாக 9:26லேவி 2:5லேவி 2:7லேவி 6:21 அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது. லேவி 24:5-81 நாளாக 6:33-48யாத் 25:30 இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள். 1 நாளாக 6:31-331 நாளாக 16:4-61 நாளாக 25:1-31சங் 134:1-21 நாளாக 15:16-22எஸ்றா 7:24நெகே 11:17நெகே 11:22-23 லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள். 1 நாளாக 9:13நெகே 11:1-15
சவுலின் வம்ச வரலாறு
கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள். 1 நாளாக 2:23-241 நாளாக 2:451 நாளாக 2:50-521 நாளாக 8:29-40 அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், 1 நாளாக 8:331 நாளாக 9:39 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே. 1 நாளாக 8:31 மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள். 1 நாளாக 8:32 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். 1 சாமு 13:221 நாளாக 10:21 நாளாக 8:33-381 சாமு 14:11 சாமு 14:49-511 சாமு 31:2 யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான். 1 நாளாக 8:34-362 சாமு 4:4 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். 1 நாளாக 8:35 ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். 1 நாளாக 8:36 மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல். 1 நாளாக 8:37 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.