இஸ்ரவேலர்களை முன்வைத்து எச்சரிப்புகள்
இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள். யாத் 14:29நெகே 9:11-12சங் 78:13-14சங் 105:39சங் 106:7-11யாத் 13:21-22யாத் 14:19-221 கொரி 14:38 எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் கடலினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். எபி 3:2-31 கொரி 1:13-16யாத் 14:31ரோம 6:3கலா 3:27யோவா 9:28-29 எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள். உபா 8:3நெகே 9:15யாத் 16:35யாத் 16:4நெகே 9:20யாத் 16:15சங் 105:40சங் 78:23-25 எல்லோரும் ஒரே ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். எப்படியென்றால், அவர்களோடுகூடச்சென்ற ஆவிக்குரிய கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. யாத் 17:6யோவா 7:37ஏசா 48:21யோவா 4:14சங் 105:41யோவா 4:10எண் 20:11சங் 78:15 அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாக இருக்கவில்லை; ஆகவே வனாந்திரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். எபி 3:17யூதா 1:5எண் 26:64-65எண் 14:37எண் 14:11-12எண் 14:28-35சங் 106:26சங் 78:32-34 அவர்கள் இச்சித்ததுபோல நாமும் தீங்கானவைகளை இச்சிக்காதபடிக்கு, இவைகள் நமக்கு அடையாளமாக இருக்கிறது. யூதா 1:71 கொரி 10:112 பேது 2:6எபி 4:11எண் 11:4செப்ப 3:6-7எண் 11:31-34சங் 106:14-15 மக்கள் உட்கார்ந்து உண்ணவும், குடிக்கவும், வேசித்தன எண்ணத்தோடு விளையாடவும் எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரக ஆராதனைக்காரர்களானதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். யாத் 32:6-8சங் 106:19-201 கொரி 6:9உபா 9:121 கொரி 10:14உபா 9:16-211 கொரி 5:111 யோவா 5:21 அவர்களில் சிலர் வேசித்தனம்செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் இறந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்செய்யாதிருப்போமாக. எண் 25:1-91 கொரி 6:18சங் 106:291 கொரி 6:9வெளி 2:14 அவர்களில் சிலர் கர்த்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக. எண் 21:5-6சங் 78:18எபி 3:8-11யாத் 17:2உபா 6:16யாத் 17:7சங் 78:56யாத் 23:20-21 அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காமலிருங்கள். எண் 14:2எண் 16:41எண் 14:37பிலி 2:141 நாளாக 21:152 சாமு 24:16சங் 106:25யாத் 12:23 இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. ரோம 15:4ரோம 13:111 கொரி 9:101 யோவா 2:18பிலி 4:5ரோம 4:23எபி 10:25எபி 10:37 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று நினைக்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ரோம 11:202 பேது 3:17நீதி 16:181 கொரி 8:2மத் 26:40-41மத் 26:33-34நீதி 28:14வெளி 3:17-18 மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார். 2 பேது 2:92 தீமோ 4:182 தெச 3:31 பேது 5:8-9எபி 12:41 தெச 5:24ரோம 8:28-392 கொரி 12:8-10
விக்கிரக விருந்தும், கர்த்தருடைய பந்தியும்
ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள். வெளி 21:81 யோவா 5:211 பேது 2:112 கொரி 7:12 கொரி 6:17வெளி 22:15வெளி 2:141 கொரி 10:20-21 உங்களைப் புத்திமான்களென்று நினைத்துப்பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள். 1 தெச 5:211 கொரி 8:11 கொரி 11:131 கொரி 14:201 கொரி 4:101 கொரி 6:5யோபு 34:2-3 நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? மத் 26:26-281 கொரி 11:23-29அப் 2:42எபி 3:141 யோவா 1:7யோவா 6:53-58லூக் 22:19-201 யோவா 1:3 அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லோரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாக இருக்கிறோம். ரோம 12:5கொலோ 3:151 கொரி 12:121 கொரி 12:27எபே 4:12-13எபே 4:16எபே 4:25எபே 4:4 மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியமாக இருக்கிறார்களல்லவா? எபே 2:11-12கலா 6:16லேவி 3:11லேவி 7:6பிலி 3:3-51 கொரி 9:132 கொரி 11:18-22லேவி 3:3-5 இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? 1 கொரி 8:41 கொரி 1:281 கொரி 13:21 கொரி 3:7உபா 32:21ஏசா 40:17ஏசா 41:292 கொரி 12:11 பிறமார்க்கத்தார்கள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு இல்லை, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடு ஐக்கியமாக இருக்க எனக்கு மனதில்லை. வெளி 9:20சங் 106:37-39உபா 32:16-172 கொரி 4:4லேவி 17:72 நாளாக 11:15 நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய உணவு பந்திக்கும் பேய்களுடைய உணவு பந்திக்கும் பங்குள்ளவர்களாக இருக்கக்கூடாதே. மத் 6:241 இராஜா 18:212 கொரி 6:15-17ஏசா 65:111 கொரி 10:16உபா 32:37-381 கொரி 8:10 நாம் கர்த்தருக்கு எரிச்சலைத் தூண்டலாமா? அவரைவிட நாம் பலவான்களா? உபா 32:21உபா 32:16எபி 10:31உபா 4:24உபா 6:15பிரச 6:10யாத் 20:5யாத் 34:14
விசுவாசியின் சுதந்திரம்
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் பக்திவளர்ச்சியை உண்டாக்காது. 1 கொரி 6:121 கொரி 8:9எபே 4:29ரோம 14:19-201 தெச 5:11ரோம 15:1-2ரோம 14:151 கொரி 14:17 ஒவ்வொருவனும் தன் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், மற்றவர்களுடைய ஆதாயத்தைத் தேடவேண்டும். ரோம 15:1-2பிலி 2:4-51 கொரி 10:33பிலி 2:211 கொரி 9:19-231 கொரி 13:52 கொரி 12:14 கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிச்சாப்பிடுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. 1 தீமோ 4:41 கொரி 8:7தீத் 1:15ரோம 14:141 கொரி 10:27-29அப் 10:15ரோம 13:5 பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. சங் 24:1சங் 50:12யாத் 19:5உபா 10:14யோபு 41:111 தீமோ 6:171 கொரி 10:28 அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். 1 கொரி 10:25லூக் 10:7-81 கொரி 5:9-112 கொரி 1:132 கொரி 4:22 கொரி 5:11லூக் 15:23லூக் 19:7 ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் சாப்பிடாமலிருங்கள்; பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. 1 கொரி 8:10-131 கொரி 8:7ரோம 14:151 கொரி 10:26எரே 27:5-6மத் 6:31-32சங் 115:16உபா 10:14 உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாக நினைக்கவேண்டியதென்ன? 1 கொரி 9:19ரோம 14:15-211 கொரி 8:9-131 கொரி 10:322 கொரி 8:211 தெச 5:22 மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்? ரோம 14:61 தீமோ 4:3-4 ஆகவே, நீங்கள், சாப்பிட்டாலும் குடித்தாலும், எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். கொலோ 3:17கொலோ 3:231 பேது 4:11உபா 12:7உபா 12:18சகரி 7:5-6உபா 12:12லூக் 11:41 நான் என் சொந்தப் பிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லோருக்கும் பிரியமாக நடக்கிறதுபோல; அப் 20:281 கொரி 10:33ரோம 14:131 கொரி 8:132 கொரி 6:3அப் 24:161 கொரி 11:221 தீமோ 3:15 நீங்களும் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், தேவனுடைய சபைக்கும் இடறல் இல்லாதவர்களாக இருங்கள். 1 கொரி 10:24கலா 1:101 கொரி 9:19-23ரோம 15:2-32 கொரி 12:19ரோம 11:142 கொரி 11:28-29