அப்போஸ்தலனின் உரிமைகள்
நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா? அப் 9:171 கொரி 3:61 கொரி 9:191 தீமோ 2:7அப் 23:11அப் 9:32 தீமோ 1:11கலா 1:15-17 நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே. 2 கொரி 12:122 கொரி 3:1-3யோவா 6:27 என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறுமொழி என்னவென்றால்: 1 கொரி 14:372 கொரி 10:7-82 கொரி 12:16-192 கொரி 13:102 கொரி 13:32 கொரி 13:52 தீமோ 4:16அப் 22:1 புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா? 1 தெச 2:62 தெச 3:8-9லூக் 10:71 கொரி 9:7-141 தெச 2:9கலா 6:6மத் 10:101 தீமோ 5:17-18 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா? யோவா 1:421 கொரி 7:391 கொரி 7:7அப் 1:14கலா 1:19எபி 13:4மத் 8:141 கொரி 1:12 அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை? 2 தெச 3:7-9அப் 13:1-21 தெச 2:9அப் 18:3அப் 4:361 கொரி 4:11-12அப் 11:22அப் 14:12 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்? நீதி 27:18உபா 20:62 தீமோ 2:3-41 கொரி 3:6-81 தீமோ 1:18அப் 20:28எரே 23:2-3நீதி 27:27 இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? 1 கொரி 14:341 கொரி 7:401 தெச 2:131 தெச 4:8ஏசா 8:20ரோம 3:31ரோம 6:19 போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ? உபா 25:41 தீமோ 5:18சங் 104:27யோனா 4:11சங் 145:15-16உபா 22:1-4உபா 5:14லூக் 12:24-28 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது. 2 தீமோ 2:6ரோம 15:4ரோம 4:23-241 கொரி 3:92 கொரி 4:15யோவா 4:35-38லூக் 17:7-8மத் 24:22 நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? ரோம 15:27கலா 6:62 கொரி 11:15மத் 10:102இராஜா 5:13மல்கி 3:8-9 மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம். 1 கொரி 9:151 கொரி 9:182 கொரி 11:121 தெச 2:6-92 கொரி 11:7-101 கொரி 9:21 கொரி 4:11-121 கொரி 4:14-15 ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா? லேவி 6:26எண் 18:8-20எண் 5:9-101 கொரி 10:181 சாமு 2:28உபா 18:1-5உபா 10:9லேவி 6:16-18 அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். மத் 10:101 தீமோ 5:17-181 கொரி 9:4கலா 6:6லூக் 10:7 அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டுதலை ஒருவன் மனவேதனையாக்குகிறதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும். 1 தெச 2:92 தெச 3:81 கொரி 9:122 கொரி 11:9-12அப் 18:3அப் 20:24அப் 20:341 கொரி 4:12 நற்செய்தியை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது; நற்செய்தியை நான் பிரசங்கிக்காமல் இருந்தால், எனக்கு ஐயோ. ரோம 1:14எரே 20:9கொலோ 4:17லூக் 9:62அப் 26:16-20அப் 4:20ஆமோ 3:8அப் 9:15 நான் உற்சாகமாக அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகம் இல்லாதவனாகச் செய்தாலும், மேற்பார்வையாளர் பதவி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. கலா 2:71 கொரி 3:81 நாளாக 28:9கொலோ 1:25மத் 10:411 நாளாக 29:51 நாளாக 29:91 கொரி 3:14 ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்தியைச் செலவில்லாமல் பிரசங்கிப்பதே எனக்குப் பலன். 2 கொரி 11:7-91 கொரி 10:331 கொரி 8:91 தெச 2:62 தெச 3:8-92 கொரி 12:13-181 கொரி 7:311 கொரி 9:6-7 நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். கலா 5:13மத் 18:151 கொரி 10:33யாக் 5:19-201 தீமோ 4:16மத் 20:26-281 கொரி 9:20-222 தீமோ 2:10 யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன். அப் 16:3கலா 5:18அப் 21:20-26அப் 17:2-3அப் 18:18கலா 4:21கலா 4:5ரோம 11:14 நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவும் ஆனேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறேன். ரோம 2:12கலா 3:2ரோம 2:141 கொரி 7:19-22மத் 5:17-20கலா 5:13-14தீத் 2:2-121 தெச 4:1-2 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். 1 கொரி 10:33ரோம 15:11 கொரி 9:19ரோம 11:14கலா 6:11 கொரி 8:131 கொரி 7:162 கொரி 11:29 நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன். 2 தீமோ 2:101 கொரி 9:25-27மாற் 8:351 யோவா 1:3கலா 2:5எபி 3:142 கொரி 2:41 கொரி 9:12 பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பிலி 3:14எபி 12:12 தீமோ 4:7-8வெளி 3:11பிலி 2:161 கொரி 9:26கலா 5:7எரே 12:5 பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். 2 தீமோ 2:5வெளி 2:101 தீமோ 6:122 தீமோ 4:7-8யாக் 1:12வெளி 3:112 பேது 1:61 பேது 1:4 ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடமாட்டேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணமாட்டேன். 2 பேது 1:102 தீமோ 2:5பிலி 1:21கொலோ 1:292 தீமோ 1:12லூக் 13:241 பேது 5:1எபே 6:12 மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன். ரோம 8:131 கொரி 9:25கொலோ 3:52 கொரி 13:5-61 பேது 2:111 கொரி 6:12-132 கொரி 6:4-51 கொரி 8:13