1 இராஜாக்கள் 15

1 Kings 15
அத்தியாயம் 15

யூதாவின் ராஜாவாகிய அபியாம்

நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் 18 ஆம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி, 1 இராஜா 14:312 நாளாக 13:1-22 மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள். 2 நாளாக 13:21 இராஜா 15:132 நாளாக 11:20-22 தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை. 1 இராஜா 11:4சங் 119:801 இராஜா 11:331 இராஜா 14:21-221 இராஜா 3:142 நாளாக 31:20-212இராஜா 20:32 நாளாக 25:2 ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய யெகோவா, அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார். 1 இராஜா 11:362 நாளாக 21:71 இராஜா 11:121 இராஜா 11:322 சாமு 7:12-16ஆதி 12:2ஏசா 37:35சங் 132:17 தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான். 1 இராஜா 14:82 சாமு 11:15-171 இராஜா 15:32 நாளாக 34:2சங் 51:12 சாமு 11:3-42 சாமு 12:9-10அப் 13:22 ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 1 இராஜா 14:30 அபியாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளெல்லாம் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 2 நாளாக 13:2-221 இராஜா 14:29 அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான். 2 நாளாக 14:11 இராஜா 14:311 நாளாக 3:91 இராஜா 14:1மத் 1:7-8

யூதாவின் ராஜாவாகிய ஆசா

இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி, 41 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள். 1 இராஜா 15:21 இராஜா 15:132 நாளாக 11:20-212 நாளாக 13:2 ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 2 நாளாக 14:22 நாளாக 15:171 இராஜா 15:32 நாளாக 14:112 நாளாக 16:7-10 அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி, 1 இராஜா 22:461 இராஜா 14:23-241 இராஜா 11:7-81 பேது 1:182 நாளாக 14:2-5யூதா 1:7ரோம 1:26-271 இராஜா 15:3 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான். யாத் 32:201 இராஜா 15:101 இராஜா 15:22 நாளாக 15:15-192 நாளாக 34:42 கொரி 5:162இராஜா 18:42இராஜா 23:12-15 மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது. 1 இராஜா 22:431 இராஜா 15:31 இராஜா 8:612இராஜா 12:32 நாளாக 14:32 நாளாக 14:52 நாளாக 15:17-182இராஜா 14:4 தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான். 1 இராஜா 7:511 நாளாக 26:26-282 நாளாக 14:132 நாளாக 15:18 ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 1 இராஜா 15:321 இராஜா 14:301 இராஜா 15:6-72 நாளாக 16:1-6 ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடம் போக்குவரத்தாக இல்லாதபடி, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான். 1 இராஜா 12:272 நாளாக 16:1-6யோசு 18:251 இராஜா 15:21-221 இராஜா 15:271 சாமு 15:342 நாளாக 11:13-17எரே 31:15 அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி: 1 இராஜா 14:262இராஜா 12:181 இராஜா 11:23-241 இராஜா 15:15ஆதி 14:151 இராஜா 20:1-51 இராஜா 20:33-342 நாளாக 15:18 எனக்கும் உமக்கும் என்னுடைய தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான். ரோம 1:312 நாளாக 16:32 நாளாக 16:72 நாளாக 19:22 சாமு 21:2எசேக் 17:13-16ஏசா 31:1ரோம 3:8 பெனாதாத், ராஜாவாகிய ஆசாவின் சொல்லைக்கேட்டு, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழு தேசத்தையும் தோற்கடித்தான். 2இராஜா 15:29நியாயாதி 18:29யோசு 11:21 இராஜா 12:292 சாமு 20:14-15யோசு 12:3ஆதி 14:14 பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான். 1 இராஜா 14:171 இராஜா 16:15-181 இராஜா 15:172 நாளாக 16:5உன்னத 6:4 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான். யோசு 21:17யோசு 18:242 நாளாக 16:6யோசு 18:261 சாமு 7:5எரே 40:10எரே 40:6 ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது. 1 இராஜா 14:29-311 இராஜா 15:7-82 நாளாக 16:11-14சங் 90:10 ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான். மத் 1:81 இராஜா 22:41-432 நாளாக 17:1-9

இஸ்ரவேலின் ராஜாவாகிய நாதாப்

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருடம் இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்தான். 1 இராஜா 14:201 இராஜா 14:12 அவன் யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான். 1 இராஜா 14:161 இராஜா 15:301 இராஜா 15:341 இராஜா 12:28-331 இராஜா 13:33-341 கொரி 8:10-131 இராஜா 16:191 இராஜா 16:25-26 இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான். 1 இராஜா 14:14யோசு 19:44யோசு 21:231 இராஜா 16:151 இராஜா 15:16-171 இராஜா 16:171 இராஜா 16:92இராஜா 12:20 பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான். உபா 32:35 அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கின கோபத்தினாலும், யெகோவா சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, 1 இராஜா 14:9-162இராஜா 10:10-112இராஜா 10:312இராஜா 19:252இராஜா 9:36-372இராஜா 9:7-10 அவன் ராஜாவானபின்பு அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை. 1 இராஜா 15:261 இராஜா 14:221 இராஜா 14:9-16 நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. 1 இராஜா 14:191 இராஜா 16:141 இராஜா 16:201 இராஜா 16:271 இராஜா 16:5 ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 1 இராஜா 15:16

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருட அரசாட்சியிலே அகியாவின் மகனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி 24 வருடங்கள் ஆண்டு, 1 இராஜா 16:8 யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான். 1 இராஜா 15:261 இராஜா 12:28-291 இராஜா 14:161 இராஜா 13:33-34ஏசா 1:4