1 சாமுவேல் 2

1 Samuel 2
அத்தியாயம் 2

அன்னாளின் ஜெபம்

அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: லூக் 1:46-56சங் 13:5ஏசா 12:2-3பிலி 4:6சங் 92:10சங் 89:17பிலி 4:4சங் 20:5

“என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது;

என்னுடைய பெலன் 1 யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது;

என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்;

உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; 2 சாமு 22:32ஏசா 44:6சங் 86:8யாத் 15:111 பேது 1:16எரே 10:6சங் 89:8ஏசா 57:15

உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை;

எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; 1 இராஜா 8:39நீதி 8:13நீதி 24:12யூதா 1:15-16எபி 4:12நீதி 16:21 சாமு 16:7தானி 4:30-31

அகந்தையான பேச்சு உங்களுடைய வாயிலிருந்து வெளியே வரவேண்டாம்;

யெகோவா ஞானமுள்ள தேவன்;

அவர் செயல்கள் யதார்த்தமல்லவா?

பலவான்களினுடைய வில் முறிந்தது; சங் 37:15சங் 76:3பிலி 4:13சங் 46:92 கொரி 12:9எபி 11:34ஏசா 10:4சங் 37:17

தள்ளாடினவர்களோ பெலத்தினால் வலிமையடைந்தனர்.

திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; எரே 15:9லூக் 1:53சங் 113:9சங் 34:101 சாமு 1:6ஏசா 54:1லூக் 16:251 சாமு 1:20

பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்;

மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்;

அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள்.

யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; உபா 32:39ஏசா 26:192இராஜா 5:7யோபு 5:18யோனா 2:2-6வெளி 1:18யோவா 5:25-29ஓசி 6:1-2

அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர்.

யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்; சங் 75:7உபா 8:17-18யோபு 5:11யாக் 4:10யோபு 1:21யாக் 1:9-10ஏசா 2:12சங் 102:10

அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, சங் 113:7-8தானி 2:48யாக் 2:5தானி 6:31 சாமு 15:17பிரச 4:14வெளி 1:62 சாமு 7:8

எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்;

அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும்,

மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்;

பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்;

அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார்.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; சங் 91:11-12சங் 121:3சங் 33:16-171 பேது 1:5யோபு 5:24சங் 37:28சங் 94:18சங் 97:10

துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்;

பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை.

யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; சங் 2:9சங் 89:24யாத் 15:6சங் 18:13-14சங் 96:131 சாமு 7:10சங் 20:6சங் 21:7-9

வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்;

யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து,

தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து,

தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்” என்று துதித்தாள். பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். 1 சாமு 2:181 சாமு 3:11 சாமு 1:281 சாமு 1:191 சாமு 3:15

ஏலியின் துன்மார்க்க மகன்கள்

ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை அறியவில்லை. ரோம 1:28-30எரே 2:82 கொரி 6:15நியாயாதி 2:10ரோம 1:21ஓசி 4:6-9யோவா 17:3யோவா 16:3 அந்த ஆசாரியர்கள் மக்களை நடத்தினவிதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்தும் காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று முனை கூருள்ள ஒரு ஆயுதத்தைத் தன்னுடைய கையிலே பிடித்துவந்து, லேவி 7:29-34 அதினாலே, உலோகத்தட்டிலோ, பானையிலோ, மரத்தொட்டியிலோ, சட்டியிலோ குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதை ஆசாரியன் எடுத்துக்கொள்வான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலர்களுக்கு எல்லாம் செய்தார்கள். 1 சாமு 2:29யாத் 29:27-28ஏசா 56:112 பேது 2:13-15லேவி 7:34மல்கி 1:10 கொழுப்பைத் தகனம் செய்வதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனிதனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், வேக வைத்ததை உன்னுடைய கையிலே வாங்கமாட்டேன் என்பான். லேவி 3:16லேவி 3:3-5பிலி 3:19ரோம 16:18யூதா 1:12 அதற்கு அந்த மனிதன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனம் செய்யட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன் என்பான். லேவி 7:23-25லேவி 3:161 பேது 5:2-3நியாயாதி 18:25மீகா 2:1-2மீகா 3:5நெகே 5:15 ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் யெகோவாவுக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் யெகோவாவுடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள். மல்கி 2:7-9ஆதி 13:13ஆதி 6:11மல்கி 2:132இராஜா 21:6ஆதி 10:9ஏசா 3:8மத் 18:7 சாமுவேல் என்னும் பிள்ளை சணல்நூல் ஏபோத்தை அணிந்தவனாகக் யெகோவாவுக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். 1 சாமு 3:1யாத் 28:41 சாமு 2:112 சாமு 6:141 சாமு 22:181 நாளாக 15:271 சாமு 2:28லேவி 8:7 அவனுடைய தாய் ஒவ்வொரு வருடந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன்னுடைய கணவனோடு வரும்போதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள். 1 சாமு 1:31 சாமு 1:21யாத் 23:14 ஏலி எல்க்கானாவையும் அவனுடைய மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த பெண் யெகோவாவுக்கென்று ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக் யெகோவா உனக்கு அவளாலே அனேகம் பிள்ளைகளைக் கொடுப்பாராக என்றான்; அவர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள். 1 சாமு 1:27-28லூக் 2:34ஆதி 14:19ஆதி 27:27-29எண் 6:23-27ரூத் 2:12ரூத் 4:111 சாமு 1:11 அப்படியே யெகோவா அன்னாளுக்கு உதவிசெய்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளை யெகோவாவுக்கு முன்பாக வளர்ந்தான். லூக் 2:401 சாமு 3:19ஆதி 21:11 சாமு 2:26நியாயாதி 13:24லூக் 1:80லூக் 1:681 சாமு 1:19-20

ஏலியும் துன்மார்க்க மகன்களும்

ஏலி மிகுந்த வயதானவனாக இருந்தான்; அவன் தன்னுடைய மகன்கள் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூடுகிற பெண்களோடு தகாதஉறவு கொள்வதையும் கேள்விப்பட்டு, யாத் 38:81 சாமு 2:13-17எரே 7:9-101 சாமு 8:1எசேக் 22:26ஓசி 4:9-11 அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த மக்கள் எல்லோரும் உங்கள் தீய செய்கைகளைச் சொல்லக்கேட்கிறேன். 1 இராஜா 1:6அப் 14:15அப் 9:4ஏசா 3:9எரே 3:3எரே 8:12பிலி 3:19 என்னுடைய மகன்களே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; யெகோவாவுடைய மக்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாக இருக்கிறீர்களே. 1 இராஜா 13:18-211 இராஜா 15:301 சாமு 2:171 சாமு 2:221 தீமோ 3:72 கொரி 6:82இராஜா 10:312 பேது 2:18 மனிதனுக்கு விரோதமாக மனிதன் பாவம்செய்தால், நியாயாதிபதிகள் 2அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், அவனுக்காக விண்ணப்பம் செய்கிறவன் யார் என்றான்; அவர்களோ தங்களுடைய தகப்பனுடைய சொல்லைக்கேட்காமல் போனார்கள்; அவர்களைக் கொலைசெய்வதற்கு யெகோவா சித்தமாக இருந்தார். 1 சாமு 3:14எபி 10:26யோசு 11:20எண் 15:301 தீமோ 2:5நீதி 15:10எபி 7:252 நாளாக 25:16 பிள்ளையாகிய சாமுவேல், பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதனுக்கும் பிரியமாக நடந்துகொண்டான். லூக் 2:52லூக் 2:401 சாமு 2:21அப் 2:47லூக் 1:80ரோம 14:18நீதி 3:3

ஏலியின் குடும்பத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம்

தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: யெகோவா சொல்கிறது என்னவென்றால், உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்கள் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கும்போது, நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, நியாயாதி 13:61 இராஜா 13:1உபா 33:1யாத் 4:14-16யாத் 4:271 சாமு 9:41 தீமோ 6:112 பேது 1:21 என்னுடைய பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபம் காட்டவும், என்னுடைய சமுகத்தில் ஏபோத்தை அணிந்துகொள்ளவும், இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களுக்கு இஸ்ரவேல் மக்களுடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா? யாத் 28:1லேவி 8:7-8எண் 18:19யாத் 28:4லேவி 10:14-15லேவி 2:10லேவி 2:3லேவி 6:16 நான் தங்குமிடத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என்னுடைய பலியையும், என்னுடைய காணிக்கையையும், நீங்கள் ஏன் உதைக்கிறீர்கள் 3? என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளில் எல்லாம் சிறந்தவைகளைக்கொண்டு உங்களைக் கொழுக்கச்செய்ய, நீ என்னைவிட உன்னுடைய மகன்களை ஏன் மதிக்கிறாய் என்கிறார். மத் 10:371 சாமு 2:13-17உபா 32:15எசேக் 34:2லூக் 14:26மல்கி 1:12-13உபா 12:5-6மீகா 3:5 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். யோவா 12:26எரே 18:9-10நீதி 3:9-10மல்கி 1:62 நாளாக 15:2ஏசா 29:13சங் 50:23சங் 91:14 உன்னுடைய வீட்டில் ஒரு முதிர்வயதானவனும் இல்லாதபடி உன்னுடைய பெலனையும் உன்னுடைய தகப்பனுடைய வீட்டின் பெலனையும் நான் வெட்டிப்போடும் நாட்கள் வரும். 1 சாமு 22:17-201 இராஜா 2:26-271 இராஜா 2:351 சாமு 14:31 சாமு 4:11-201 சாமு 4:2எசேக் 30:21-24எசேக் 44:10 இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் எல்லா நன்மைக்கும் மாறாக நான் தங்குமிடத்திலே உபத்திரவத்தைப் பார்ப்பாய்; ஒருபோதும் உன்னுடைய வீட்டில் ஒரு முதிர்வயதானவனும் இருப்பதில்லை. சகரி 8:41 சாமு 4:11சங் 78:59-641 இராஜா 2:26-271 சாமு 4:221 சாமு 4:4 என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன்னுடைய சந்ததியில் நான் அழிக்காதவர்களோ, உன்னுடைய கண்களைப் பூத்துப்போகச்செய்யவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன்னுடைய வம்சத்திலுள்ள எல்லோரும் இளவயதிலே இறப்பார்கள். 1 இராஜா 2:26-271 இராஜா 1:191 இராஜா 1:71 சாமு 22:21-23மத் 2:16-18 ஒப்னி பினெகாஸ் என்னும் உன்னுடைய இரண்டு மகன்களின்மேல் வருவதே உனக்கு அடையாளமாக இருக்கும்; அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள். 1 சாமு 4:111 இராஜா 13:31 சாமு 4:171 இராஜா 14:121 சாமு 3:12 நான் என்னுடைய உள்ளத்திற்கும் என்னுடைய சித்தத்திற்கும் தகுந்தபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பச்செய்து, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் செய்யப்பட்டவனுக்கு முன்பாக எல்லா நாட்களும் நடந்துகொள்வான். 2 சாமு 7:271 இராஜா 11:382 சாமு 7:111 சாமு 25:28எபி 7:26-28சங் 18:501 நாளாக 29:221 நாளாக 6:8-15 அப்பொழுது உன்னுடைய வீட்டார்களில் மீதியாக இருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப் பணத்திற்காகவும் ஒரு அப்பத்துண்டுக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட ஏதாவது ஒரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்கிறார் என்றான். 1 இராஜா 2:271 சாமு 2:29-30எசேக் 44:10-12மல்கி 1:13