எசேக்கியா தேவாலயத்தைத் தூய்மைப்படுத்துதல்
எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அபியாள். 2இராஜா 18:1-31 நாளாக 3:132 நாளாக 26:5ஓசி 1:1ஏசா 1:1ஏசா 8:2மத் 1:9-10மீகா 1:1 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான். 2 நாளாக 28:12 நாளாக 34:2 அவன் தன் அரசாட்சியின் முதலாம் வருடம் முதலாம் மாதத்தில் யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து, 2 நாளாக 28:242 நாளாக 29:7மத் 6:332 நாளாக 34:32இராஜா 16:14-18பிரச 9:10கலா 1:16சங் 101:3 ஆசாரியர்களையும் லேவியர்களையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து, 2 நாளாக 32:6எரே 19:2நெகே 3:29 அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்: நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, உங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைப் பரிசுத்தம்செய்து, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள். 2 நாளாக 35:61 கொரி 3:16-171 நாளாக 15:122 நாளாக 34:3-8எசேக் 8:9-182 நாளாக 29:15-162 நாளாக 29:342 கொரி 7:1 நம்முடைய முன்னோர்கள் துரோகம்செய்து, நம்முடைய தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரைவிட்டு விலகி, தங்கள் முகங்களைக் யெகோவாவுடைய வாசஸ்தலத்தைவிட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள். எசேக் 8:16எரே 2:272 நாளாக 28:2-42 நாளாக 28:23-252 நாளாக 34:21தானி 9:16எஸ்றா 5:12எஸ்றா 9:7 அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்கு சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள். 2 நாளாக 28:24லேவி 24:2-82 நாளாக 29:32இராஜா 16:17-18மல்கி 1:10 ஆகையால் யெகோவாவுடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் பார்க்கிறபடி, துயரத்திற்கும், திகைப்பிற்கும், கேலிக்கும் ஒப்புக்கொடுத்தார். எரே 25:18எரே 25:92 நாளாக 24:18உபா 28:25எரே 19:8எரே 29:181 இராஜா 9:82 நாளாக 34:24-25 இதினிமித்தம் நம்முடைய முன்னோர்கள் பட்டயத்தால் விழுந்து, நம்முடைய மகன்களும், மகள்களும், மனைவிகளும் சிறையிருப்பில் பிடிபட்டார்கள். 2 நாளாக 28:172 நாளாக 28:5-8புலம் 5:7லேவி 26:17 இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடு உடன்படிக்கைசெய்ய என் மனதிலே தீர்மானித்துக்கொண்டேன். எரே 50:52 நாளாக 23:16எஸ்றா 10:32 நாளாக 15:12-132 நாளாக 34:30-322 நாளாக 6:7-82 கொரி 8:52இராஜா 23:26 என் மகன்களே, இப்பொழுது அசதியாக இருக்கவேண்டாம்; நீங்கள் யெகோவாவுக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியம்செய்கிறவர்களும் தூபம்காட்டுகிறவர்களுமாக இருக்கவும் உங்களை அவர் தெரிந்து கொண்டார் என்றான். உபா 10:8எண் 8:6-14எண் 18:2-7எண் 3:6-9கலா 6:7-8எண் 16:35-40
அப்பொழுது கோகாத் வம்சத்தாரில் அமாசாயின் மகன் மாகாத்தும், அசரியாவின் மகன் யோவேலும், மெராரியின் வம்சத்தாரில் அப்தியின் மகன் கீசும், எகலேலின் மகன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் மகன் யோவாகும், யோவாகின் மகன் ஏதேனும், 1 நாளாக 15:5-71 நாளாக 23:7-231 நாளாக 6:16-211 நாளாக 6:442 நாளாக 31:13யாத் 6:16-25எண் 3:17எண் 3:19-20 எலிசாபான் வம்சத்தாரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் வம்சத்தாரில் சகரியாவும், மத்தனியாவும், 1 நாளாக 6:391 நாளாக 15:81 நாளாக 15:171 நாளாக 25:2லேவி 10:4 ஏமானின் வம்சத்தாரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் வம்சத்தாரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர்கள் எழும்பி, 1 நாளாக 6:331 நாளாக 15:191 நாளாக 25:11 நாளாக 25:31 நாளாக 25:6 தங்கள் சகோதரர்களைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்செய்துகொண்டு, யெகோவாவுடைய வசனங்களுக்கு ஏற்ற ராஜாவினுடைய கற்பனையின்படியே யெகோவாவுடைய ஆலயத்தை சுத்திகரிக்க வந்தார்கள். 1 நாளாக 23:282 நாளாக 30:122 நாளாக 29:5 ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்தை சுத்திகரிப்பதற்காக உள்ளே பிரவேசித்து, யெகோவாவுடைய ஆலயத்தில் கண்ட அனைத்து அசுத்தத்தையும் வெளியே யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டு வந்தார்கள்; அப்பொழுது லேவியர்கள் அதை எடுத்து வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டு போனார்கள். 2 நாளாக 15:161 இராஜா 6:19-202 நாளாக 3:82 நாளாக 5:72இராஜா 23:4-62 சாமு 15:23யாத் 26:33-34எசேக் 36:29 முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம் செய்யத்தொடங்கி, எட்டாம் தேதியிலே யெகோவாவுடைய மண்டபத்திலே பிரவேசித்து, யெகோவாவுடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்செய்து, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள். 1 நாளாக 28:111 இராஜா 6:32 நாளாக 29:32 நாளாக 29:72 நாளாக 3:4யாத் 12:2-8 அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவிடம் போய்: நாங்கள் யெகோவாவின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதனுடைய அனைத்து தட்டுமுட்டுகளையும், சமுகத்து அப்பங்களின் மேஜையையும், அதின் அனைத்து தட்டுமுட்டுகளையும் தூய்மைப்படுத்தி, 2 நாளாக 13:112 நாளாக 4:12 நாளாக 4:7-8 ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தால் எறிந்துபோட்ட அனைத்து தட்டுமுட்டுகளையும் ஒழுங்குபடுத்திப் பரிசுத்தம்செய்தோம்; இதோ, அவைகள் யெகோவாவின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள். 2 நாளாக 28:24
அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலையிலேயே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, யெகோவாவின் ஆலயத்திற்குப் போனான். யாத் 24:4ஆதி 22:3எரே 25:4யோசு 6:12 அப்பொழுது அரசாட்சிக்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் சந்ததியான மகன்களுக்குச் சொன்னான். லேவி 4:3-14எசேக் 45:23யோபு 42:81 நாளாக 15:26எஸ்றா 8:35எண் 23:1எண் 23:14எண் 23:29 அப்படியே ஆசாரியர்கள் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்து பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள். லேவி 4:18லேவி 8:19லேவி 8:24எபி 9:21-22லேவி 1:5லேவி 4:34லேவி 4:7லேவி 8:14-15 பிறகு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள். லேவி 4:15லேவி 1:4லேவி 4:24 இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர்கள் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பரிகாரம் செய்தார்கள். 2 கொரி 5:18-21கொலோ 1:20-21தானி 9:24எசேக் 45:15எசேக் 45:17எபி 2:17லேவி 14:20லேவி 4:13-35 அவன், தாவீதும், ராஜாவின் தரிசனம் காண்கிறவனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியர்களைக் யெகோவாவுடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படி செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது. 2 நாளாக 8:141 நாளாக 23:51 நாளாக 15:16-221 நாளாக 16:4-51 நாளாக 16:421 நாளாக 25:1-71 நாளாக 9:332 நாளாக 35:15 அப்படியே லேவியர்கள் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர்கள் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள். 1 நாளாக 23:51 நாளாக 15:24ஆமோ 6:51 நாளாக 16:62 நாளாக 5:12-13ஏசா 38:20யோசு 6:4-9எண் 10:10 அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதை செலுத்த ஆரம்பித்த நேரத்தில் யெகோவாவை துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது. 2 நாளாக 23:182 நாளாக 20:212 நாளாக 7:3சங் 136:1சங் 137:3-4 பாடலைப் பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கும்போது, சர்வாங்க தகனபலியைச் செலுத்தி முடியும்வரை சபையார் எல்லோரும் பணிந்துகொண்டிருந்தார்கள். சங் 68:24-26சங் 89:15வெளி 5:8-14 பலியிட்டு முடிந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள். 2 நாளாக 20:181 நாளாக 29:20பிலி 2:10-11சங் 72:11ரோம 14:11 பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியர்களை நோக்கி: நீங்கள் தாவீதும் தரிசனம் காண்கிறவனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளால் யெகோவாவை துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடு துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள். பிலி 4:4சங் 32:11சங் 95:1-21 நாளாக 16:7-36சங் 100:1-2சங் 149:22 சாமு 23:1-2சங் 95:6 அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்செய்தீர்கள்; ஆகையால் அருகில் வந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்கு தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையாரில் விருப்பமுள்ளவர்கள் சர்வாங்க தகனபலிகளையும் மற்றவர்கள் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவந்தார்கள். 2 நாளாக 13:9யாத் 35:22யாத் 35:5எஸ்றா 1:4லேவி 1:1-3லேவி 23:38லேவி 7:12 சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் யெகோவாவுக்கு சர்வாங்க தகனமாயின. 1 நாளாக 29:211 இராஜா 3:41 இராஜா 8:63எஸ்றா 6:17 அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனாலும் ஆசாரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர்களால் அந்த சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாமலிருந்தது; அதனால் அந்த வேலை முடியும்வரைக்கும், மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தம்செய்யும்வரைக்கும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்கள் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ள லேவியர்கள் ஆசாரியர்களைவிட மன உற்சாகமுள்ளவர்களாக இருந்தார்கள். 2 நாளாக 35:112 நாளாக 30:31 நாளாக 29:172 நாளாக 29:52 நாளாக 30:16-17எண் 18:3எண் 18:6-7எண் 8:15 சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்கதகனங்களுக்குரிய பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இந்தவிதமாக யெகோவாவுடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் செய்யப்பட்டது. யாத் 29:13எண் 15:5-101 நாளாக 16:37-42ஆதி 35:14லேவி 23:13லேவி 3:15-161 கொரி 14:40எஸ்றா 6:18 தேவன் மக்களை ஆயத்தப்படுத்தியதைக்குறித்து எசேக்கியாவும் மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தை செய்வதற்கான யோசனை உடனடியாக உண்டானது. 1 நாளாக 29:91 தெச 3:8-9அப் 2:41எஸ்றா 6:22நீதி 16:1சங் 10:171 நாளாக 29:17-182 நாளாக 30:12