2 இராஜாக்கள் 6

2 Kings 6
அத்தியாயம் 6

கோடரி தண்ணீரில் மிதத்தல்

தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. 2இராஜா 2:3ஏசா 54:2-31 இராஜா 20:351 சாமு 19:202இராஜா 4:1ஏசா 49:19-20யோசு 17:14யோசு 19:47 நாங்கள் யோர்தான்வரை சென்று அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான். 1 கொரி 9:61 தெச 2:91 தீமோ 6:62 தெச 3:8அப் 18:3அப் 20:34-35யோவா 21:3 அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி, 2இராஜா 5:23நியாயாதி 19:6நியாயாதி 4:8யோபு 6:28 அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகில் வந்தபோது மரங்களை வெட்டினார்கள். உபா 19:5உபா 29:11 ஒருவன் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும்போது கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று சத்தமிட்டான். 2இராஜா 3:102இராஜா 6:15பிரச 10:10சங் 37:21வெளி 18:102இராஜா 4:7வெளி 18:16வெளி 18:19 தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து, 2இராஜா 2:212இராஜா 4:41யாத் 15:25மாற் 8:23-25யோவா 9:6-7மாற் 7:33-34 அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான். 2இராஜா 4:362இராஜா 4:7யாத் 4:4அப் 9:41லூக் 7:15

கண்மயக்கம் ஏற்பட்ட சீரியர்களை எலிசா சிறைபிடித்தல்

அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான். 2இராஜா 6:24நீதி 20:18நீதி 21:301 இராஜா 22:31ஏசா 7:5-7ஏசா 8:10யோபு 5:12-131 இராஜா 20:1 ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான். ஆமோ 3:71 இராஜா 20:131 இராஜா 20:282இராஜா 3:17-192இராஜா 4:272இராஜா 6:12வெளி 1:1 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனிதன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன இடத்திற்கு மனிதர்களை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேக முறை தன்னைக் காத்துக்கொண்டான். 1 இராஜா 20:152 நாளாக 20:202இராஜா 13:142இராஜா 2:122இராஜா 5:14அப் 27:24ஆமோ 7:1-6யாத் 9:20-21 இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். 1 சாமு 22:81 சாமு 28:21ஏசா 57:20-21யோபு 18:7-11மத் 2:3-12சங் 48:4-5 அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான். ஆமோ 3:7தானி 2:28-302இராஜா 6:9-10தானி 2:22-23பிரச 10:202இராஜா 5:13-152இராஜா 5:3தானி 2:47 அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. ஆதி 37:17யோவா 11:47-531 சாமு 23:22-23அப் 23:12-27எரே 36:26மத் 2:4-8சங் 10:8-10சங் 37:12-14 அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள். 1 சாமு 23:261 சாமு 24:22இராஜா 18:17யோவா 18:3-6மத் 26:47மத் 26:552இராஜா 1:9-13 தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். மத் 8:262 நாளாக 20:12யாத் 24:13சங் 53:51 இராஜா 19:212இராஜா 3:112இராஜா 5:202இராஜா 5:27 அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான். ரோம 8:31ஏசா 41:10-141 யோவா 4:42 நாளாக 32:7-8அப் 18:9-10யாத் 14:13சங் 55:18ஏசா 8:10 அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: யெகோவாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே யெகோவா அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். சங் 68:17சங் 34:7சகரி 6:1-7அப் 26:18எபி 1:142இராஜா 2:11ஏசா 42:7மத் 26:53 அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார். அப் 13:11யோவா 12:40ஆதி 19:11யோவா 9:39உபா 28:28யோபு 5:14ரோம 11:7சகரி 12:4 அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான். 2 சாமு 16:18-19லூக் 24:16லூக் 9:23மத் 16:24மாற் 8:34 அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: யெகோவாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் யெகோவா அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். 2இராஜா 6:17நியாயாதி 20:40-42லூக் 16:23லூக் 24:31 இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான். 2இராஜா 5:132இராஜா 8:92இராஜா 2:121 சாமு 24:191 சாமு 24:41 சாமு 26:82இராஜா 13:14லூக் 22:49 அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான். ஆதி 48:22ரோம 12:20-212 நாளாக 28:8-15உபா 20:11-16ஓசி 2:18ஓசி 1:7யோசு 24:12மத் 5:44 அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை. 2இராஜா 5:22இராஜா 24:22இராஜா 6:8-9லூக் 10:29-37லூக் 6:352 நாளாக 28:15மத் 5:47நீதி 25:21-22

முற்றுகையிடப்பட்ட சமாரியாவில் ஏற்பட்ட பஞ்சம்

இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான். 1 இராஜா 20:11 இராஜா 22:312இராஜா 17:5உபா 28:52பிரச 9:142இராஜா 18:92இராஜா 25:1 அதனால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்வரை அதை முற்றுகையிட்டார்கள். 2இராஜா 6:28-29எரே 14:13-15எரே 14:18எரே 52:6எரே 32:241 இராஜா 18:22இராஜா 25:32இராஜா 7:4 இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள். 2 சாமு 14:4அப் 21:28ஏசா 10:3லூக் 18:3 அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி, சங் 118:8-9சங் 124:1-3எரே 17:5சங் 127:1சங் 146:3சங் 60:11சங் 62:8ஏசா 2:2 ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள். 2 சாமு 14:5நியாயாதி 18:23புலம் 4:10லேவி 26:29லூக் 23:291 சாமு 1:8உபா 28:53-57எசேக் 5:10 அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள். உபா 28:53லேவி 26:291 இராஜா 3:26உபா 28:57ஏசா 49:15ஏசா 66:13 அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள். 1 இராஜா 21:272இராஜா 19:12இராஜா 5:7ஏசா 58:5-7 அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான். ரூத் 1:171 இராஜா 19:21 இராஜா 18:171 இராஜா 2:231 இராஜா 22:81 சாமு 14:441 சாமு 25:221 சாமு 3:17 எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான். 1 இராஜா 18:4எசேக் 14:1எசேக் 20:1எசேக் 8:11 இராஜா 18:13-141 இராஜா 21:101 இராஜா 14:61 இராஜா 21:13 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான். யோபு 2:9ஏசா 8:211 சாமு 28:6-81 சாமு 31:42 கொரி 2:112 கொரி 2:7யாத் 16:6-8ஆதி 4:13