பேதுருவும் கொர்நேலியுவும்
இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான். அப் 27:1அப் 8:40மத் 27:27அப் 27:43மத் 8:5-13அப் 25:1யோவா 18:3மத் 27:54 அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். மத் 7:7-8அப் 10:4அப் 10:22அப் 10:35அப் 13:16அப் 10:7அப் 8:2ஏசா 58:7-8 பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு, தானி 9:20-21அப் 3:1அப் 5:19அப் 10:17அப் 10:19அப் 10:30அப் 9:10அப் 9:4 அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. பிலி 4:6எபி 6:10அப் 10:31மல்கி 3:16சங் 141:2வெளி 8:4எபி 13:16லூக் 1:12-13 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்திற்கு மனிதர்களை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு. அப் 10:32அப் 15:7அப் 16:9அப் 9:36அப் 9:38யோவா 1:42மாற் 3:16 அவன் தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான். அப் 9:43அப் 11:13-14அப் 9:6எபே 4:8-12யோவா 7:17ரோம 10:14-17 கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதர்களில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலைசெய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து, 1 சாமு 14:6-7நியாயாதி 7:10லூக் 3:14மத் 8:9-10பிலே 1:161 தீமோ 6:2அப் 10:1-2ஆதி 24:1-10 எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான். அப் 10:33அப் 26:19அப் 9:36பிரச 9:10கலா 1:16சங் 119:59-60
பேதுருவின் தரிசனம்
மறுநாளிலே அவர்கள் பயணப்பட்டு, அந்தப் பட்டணத்திற்கு அருகில் வரும்போது, பேதுரு மதியம் பன்னிரண்டு மணியளவிலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான். செப்ப 1:5சங் 55:171 சாமு 9:25அப் 10:8-32அப் 11:5-14அப் 6:4தானி 6:10எரே 19:13 அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணும்போது, அவன் தரிசனத்தில், அப் 22:172 கொரி 12:2-4எசேக் 11:24எசேக் 40:2எசேக் 8:1-3மத் 12:1-3மத் 21:18மத் 4:2 வானம் திறந்திருக்கிறதாகவும், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், எபே 3:6யோவா 1:51ரோம 16:25-26அப் 7:56கொலோ 3:11எபே 1:10எசேக் 1:1கலா 2:15 அதிலே பூமியிலுள்ள எல்லாவிதமான நான்குகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். ஆதி 7:8-91 கொரி 6:9-11ஏசா 11:6-9ஏசா 65:25யோவா 7:37 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது. யோவா 4:31-34எரே 35:2-5அப் 10:10 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான். லேவி 20:25எசேக் 4:14தானி 1:8உபா 14:1-29லேவி 11:1-25அப் 10:28அப் 9:5யாத் 10:11 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது. 1 கொரி 10:25மத் 15:11தீத் 1:15மாற் 7:191 தீமோ 4:3-5ரோம 14:14அப் 10:28அப் 11:9 மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆதி 41:32யோவா 21:172 கொரி 13:1 அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படும்போது, இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்துநின்று: 1 பேது 1:11அப் 10:3அப் 10:7-19அப் 2:12அப் 25:20அப் 5:24அப் 9:43யோவா 13:12 பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள். அப் 10:5-6அப் 11:11 பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள். அப் 8:29அப் 11:12அப் 13:2அப் 21:41 கொரி 12:111 தீமோ 4:1யோவா 16:13அப் 16:6-7 நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார். அப் 15:7-9சகரி 2:9-11அப் 13:4அப் 8:26அப் 9:15அப் 9:17ஏசா 48:16மாற் 16:15 அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான். அப் 10:29யோவா 1:38-39மாற் 10:51யோவா 18:4-8 அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள். அப் 11:143 யோவா 1:12அப் 10:2அப் 22:121 தீமோ 3:72 கொரி 5:182 பேது 3:2அப் 10:33
கொர்நெலியுவின் வீட்டில் பேதுரு
அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள். அப் 10:45அப் 11:121 பேது 4:9எபி 13:22 கொரி 8:21அப் 10:29அப் 10:33அப் 9:38 மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். அப் 8:40ஏசா 2:3யோவா 1:1-3யோவா 1:41-49யோவா 4:28-29லூக் 5:29மத் 9:9-10மீகா 4:2 பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். வெளி 19:10வெளி 22:8-9தானி 2:46மத் 8:2அப் 14:11-13தானி 2:30மத் 14:33 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான். வெளி 19:10வெளி 22:8-9அப் 14:14-15மத் 4:10ஏசா 42:8ஏசா 48:132 தெச 2:3-4வெளி 13:8 அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, 2 கொரி 2:12அப் 10:24யோவா 4:351 கொரி 16:9அப் 14:27கொலோ 4:3 அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார். யோவா 4:9எபே 3:6-7கலா 2:12-14அப் 11:9ஏசா 65:5யோவா 18:28யோவா 4:27அப் 10:34-35 ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். சங் 119:601 பேது 3:15அப் 10:19-20 அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: அப் 10:3தானி 9:20-21நெகே 9:1-3எஸ்றா 9:4-5அப் 1:10அப் 10:23-24லூக் 24:4மத் 28:3 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது. அப் 10:4தானி 9:23லூக் 1:13தானி 10:12ஏசா 38:5வெளி 8:3-4லேவி 2:9வெளி 5:8 யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். கலா 4:14யாக் 1:191 கொரி 3:181 பேது 2:1-21 தெச 2:132 நாளாக 30:12அப் 17:11-12அப் 28:28 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், ரோம 2:112 நாளாக 19:7உபா 10:17கொலோ 3:25யோபு 34:191 பேது 1:17எபே 6:9லூக் 20:21 எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன். 1 யோவா 2:29அப் 10:2ரோம 10:12-13அப் 15:9கொலோ 3:112 கொரி 7:1பிரச 12:13ஏசா 56:3-8 எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே. அப் 2:36மத் 28:18வெளி 17:141 கொரி 15:271 பேது 3:22வெளி 1:182 கொரி 5:18-21எபே 1:20-23 யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே. லூக் 4:14அப் 2:22அப் 28:22அப் 1:22அப் 13:24-25அப் 26:26யோவா 4:1-3லூக் 23:5 நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார். லூக் 4:18ஏசா 61:1-3அப் 2:22ஏசா 11:2யோவா 3:34எபி 1:9சங் 45:7யோவா 3:2 யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். லூக் 24:48அப் 1:8அப் 10:411 பேது 2:24அப் 2:32அப் 1:22அப் 13:27-29அப் 13:31 மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார். 1 பேது 1:21அப் 13:30-311 கொரி 15:3-42 கொரி 4:14அப் 2:241 கொரி 15:12-20அப் 17:31எபி 13:20 என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச்செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடு சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்கள் காணும்படிச்செய்தார். யோவா 14:22அப் 10:39அப் 1:2-3அப் 13:31யோவா 14:17யோவா 21:13அப் 1:22யோவா 15:16 அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 2 கொரி 5:101 பேது 4:52 தீமோ 4:1ரோம 14:9-10அப் 17:31மத் 28:19-20வெளி 20:11-15வெளி 22:12 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். சகரி 13:1அப் 2:38ஏசா 53:11எரே 31:34ரோம 10:11அப் 13:38-39யோவா 3:14-171 பேது 1:11 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப் 11:15அப் 19:6அப் 15:8அப் 4:31அப் 2:2-4அப் 8:15-17 அவர்கள் பலவிதமான மொழிகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழ்வதையும், அப் 10:23அப் 2:38கலா 3:13-14கொலோ 2:13-14அப் 11:15-18அப் 2:33எபே 2:11கலா 2:15 பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம்பண்ணப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள். அப் 19:6அப் 2:4மாற் 16:171 கொரி 14:20-25அப் 2:11 அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி, அப் 8:36அப் 11:15-17ரோம 10:12அப் 15:8-9ஆதி 17:24-26அப் 2:4அப் 8:12ரோம 4:11 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள். அப் 2:38அப் 8:16கலா 3:271 கொரி 1:13-17அப் 19:5அப் 8:12யோவா 4:2யோவா 4:40