அப்போஸ்தலருடைய நடபடிகள் 16

Acts 16
அத்தியாயம் 16

பவுல் மற்றும் சீலாவுடன் தீமோத்தேயு

அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவிற்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீடன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதப்பெண், அவன் தகப்பன் கிரேக்கன். 2 தீமோ 1:51 கொரி 4:171 தெச 3:21 தீமோ 1:22 தீமோ 1:2அப் 17:14அப் 18:52 தெச 1:1 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரர்களாலே நற்சாட்சிப் பெற்றவனாக இருந்தான். 1 தீமோ 5:102 தீமோ 3:151 தீமோ 3:72 தீமோ 3:11அப் 13:51அப் 14:21அப் 16:40அப் 6:3 அவனைப் பவுல் தன்னோடுகூட கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அங்கிருந்த யூதர்களெல்லோருக்கும் தெரிந்திருந்தபடியால், அவர்களின் பொருட்டு அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். கலா 2:31 கொரி 9:20கலா 5:6கலா 5:1-31 கொரி 7:19அப் 15:20அப் 15:40கலா 2:8 அவர்கள் பட்டணங்களுக்குப் போகும்போது, எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொண்டு நடக்கும்படி அவர்களுக்குச் சொன்னார்கள். அப் 15:28-29அப் 15:2அப் 11:30அப் 15:6 அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. அப் 9:31அப் 2:47அப் 6:71 பேது 5:10அப் 15:41எபே 4:13-161 கொரி 15:58அப் 12:24

மக்கெதோனியா மனிதனைக்குறித்த பவுலின் தரிசனம்

அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துச்சென்றபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லவேண்டாமென்று பரிசுத்த ஆவியானவராலே தடைசெய்யப்பட்டு, அப் 18:23அப் 16:7அப் 11:12அப் 13:2-4கலா 1:21 பேது 1:12 தீமோ 4:10அப் 19:10 மீசியா தேசம்வரை வந்து, பித்தினியா நாட்டிற்குப் போக விரும்பினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவிடவில்லை. கலா 4:6பிலி 1:19அப் 8:29ரோம 8:91 பேது 1:11 பேது 1:11 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாகப்போய், துரோவாவிற்கு வந்தார்கள். 2 கொரி 2:122 தீமோ 4:13அப் 16:11அப் 20:5 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டானது; அது என்னவென்றால், மக்கெதோனியா தேசத்தைச் சேர்ந்த ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவிற்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று பவுலை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அப் 18:5அப் 19:21அப் 9:10-12அப் 18:9-10அப் 20:1ரோம 10:14-15ரோம 15:261 தெச 1:7-8 அந்த தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்கு நற்செய்தியைத் தெரிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தார் என்று நாங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டோம். 2 கொரி 2:12-13அப் 14:7அப் 10:29அப் 16:10-17அப் 20:13-15அப் 20:5-8அப் 21:1-18அப் 26:13

லீதியாள் மனந்திரும்புதல்

நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவிற்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்திற்கும் சென்று, அப் 21:1அப் 16:8 அங்கிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ரோமர்கள் குடியேறின பிலிப்பி பட்டணத்திற்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாட்கள் தங்கியிருந்தோம். 1 தெச 2:2பிலி 1:1அப் 20:6அப் 16:21அப் 16:9 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்திற்கு வெளியேபோய் ஆற்றின் அருகே வழக்கமாக ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த பெண்களுக்குப் போதித்தோம். அப் 13:14அப் 18:4அப் 21:5கொலோ 1:23அப் 13:42அப் 16:6அப் 17:2அப் 20:7 அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார். லூக் 24:45எபே 1:17-18ஏசா 50:5யோவா 6:44-45வெளி 3:202 கொரி 3:14-162 கொரி 4:4-6ரோம 9:16 அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றப்பின்பு, அவள் எங்களைப் பார்த்து: நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நீங்கள் நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள். அப் 11:14எபி 13:2அப் 16:33ஆதி 19:3லூக் 24:291 கொரி 1:13-161 பேது 5:123 யோவா 1:5

சிறைச்சாலையில் பவுலும் சீலாவும்

நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள். லேவி 19:31உபா 18:9-11ஏசா 8:191 நாளாக 10:131 சாமு 28:71 தீமோ 6:10கலா 5:20அப் 16:18 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியை நமக்குத் தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாக சொன்னாள். யோவா 14:61 பேது 2:16மாற் 5:7தானி 6:20தானி 3:26தானி 3:28யோனா 1:9லூக் 1:79 அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது. மாற் 16:17லூக் 10:17-19அப் 19:12-17அப் 3:6அப் 9:34மாற் 1:34மாற் 9:25-26கொலோ 2:15 அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். அப் 17:6அப் 21:302 கொரி 6:5அப் 16:16அப் 18:12-13அப் 8:3அப் 14:19அப் 14:5 அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி, யாக் 4:4அப் 28:22யோவா 15:18-20ரோம 12:21 இராஜா 18:17-18அப் 17:6-8அப் 18:2அப் 19:34 ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர். எஸ்த 3:8அப் 16:12அப் 26:3எரே 10:3 அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; 1 தெச 2:22 கொரி 6:52 கொரி 11:23-25அப் 22:22-26எபி 11:361 பேது 2:24அப் 16:37அப் 17:5 அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள். வெளி 2:102 தீமோ 2:91 சாமு 23:22-23மத் 27:63-66அப் 12:18அப் 12:4அப் 16:27அப் 16:36 அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான். யோபு 13:27யோபு 33:11எரே 29:26எரே 38:261 இராஜா 22:272 நாளாக 16:10எரே 20:2-3எரே 37:15-16 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1 தெச 5:16-18சங் 119:62யாக் 1:2ரோம 5:31 பேது 1:6-8பிலி 4:4-7சங் 77:6எபி 5:7 திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது. அப் 4:31அப் 5:19அப் 12:10அப் 12:7சங் 146:7மத் 28:2ஏசா 42:7சங் 102:20 சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான். அப் 12:191 இராஜா 16:181 சாமு 31:4-52 சாமு 17:23நியாயாதி 9:54மத் 27:5அப் 16:23-24 அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு எந்தத் தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான். 1 தெச 5:15லூக் 23:34லூக் 6:27-28பிரச 7:17யாத் 20:13லூக் 10:32-37மத் 5:44லேவி 19:18 அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து, வெளி 3:9தானி 6:26எரே 10:10அப் 24:25அப் 9:5-6ஏசா 60:14ஏசா 66:2ஏசா 66:5 அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான். அப் 2:37யோவா 6:27-29அப் 22:10லூக் 3:10அப் 14:15ஏசா 58:9யாக் 2:13மத் 3:8 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, யோவா 1:12யோவா 3:36அப் 2:38-39ரோம 10:9-10அப் 11:13-14மாற் 16:16கலா 3:26ஏசா 45:22 அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். கொலோ 1:27-28ரோம 1:161 தெச 2:81 தீமோ 1:13-16அப் 10:33-43எபே 3:8மாற் 16:15ரோம 1:14 மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். 1 கொரி 1:16அப் 16:15அப் 16:25லூக் 10:33-34அப் 16:23கலா 5:13கலா 5:6ஏசா 11:6-9 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான். ரோம 15:13அப் 2:46அப் 11:14அப் 8:39ஏசா 12:1-3ஏசா 55:12ஏசா 58:7-11ஏசா 61:10 பொழுதுவிடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள். அப் 5:40அப் 4:21எரே 5:22சங் 76:10 சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலைசெய்யும்படி அதிகாரிகள் கட்டளைக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்; எனவே நீங்கள் இப்பொழுது புறப்பட்டு சமாதானத்தோடு போங்கள் என்றான். அப் 15:33யோவா 14:271 சாமு 1:171 சாமு 20:421 சாமு 25:351 சாமு 29:72இராஜா 5:19அப் 16:27 அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரிக்காமல், வெளிப்படையாக அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாக எங்களை விடுதலை செய்கிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை விடுதலைசெய்து வெளியே அனுப்பிவிடட்டும் என்றான். அப் 22:25-29அப் 16:20-24தானி 3:25-26மத் 10:16நீதி 28:1சங் 58:1-2சங் 94:20தானி 6:18-19 காவலர்கள் இந்த வார்த்தைகளைச் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ரோமர்கள் என்று அதிகாரிகள் கேட்டபொழுது பயந்துவந்து, அப் 22:29மத் 14:5மத் 21:46 அவர்களோடு தயவாகப்பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள். மத் 8:34தானி 6:23மாற் 5:17தானி 6:16யாத் 11:8ஏசா 45:14ஏசா 49:23ஏசா 60:14 அப்படியே அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளின் வீட்டிற்குப்போய், சகோதரர்களைப் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டுப்போனார்கள். 1 தெச 3:2-3அப் 14:22அப் 16:142 கொரி 1:3-72 கொரி 4:16-182 கொரி 4:8-12அப் 12:12-17அப் 4:23