அப்போஸ்தலருடைய நடபடிகள் 6

Acts 6
அத்தியாயம் 6

ஏழு நபர்களைத் தேர்ந்தெடுத்தல்

அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கர்களானவர்கள், தங்களுடைய விதவைகள் அன்றாட பராமரிப்பில் சரியாக பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். அப் 2:41அப் 4:35யாக் 5:9அப் 2:47அப் 6:7அப் 9:39எபி 13:1அப் 11:20 அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல. உபா 1:9-14யாத் 18:17-262 தீமோ 2:4நெகே 6:3எண் 11:11-13அப் 21:22அப் 25:27அப் 4:19 ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம். 1 தீமோ 3:7-15உபா 1:13யாக் 3:17-181 தீமோ 5:10எண் 27:18-19அப் 13:2-33 யோவா 1:12ஆதி 41:38-39 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் உறுதியாகத் தரித்திருப்போம் என்றார்கள். அப் 1:141 தீமோ 4:13-16பிலி 1:9-11அப் 2:422 தீமோ 4:2அப் 13:2-3கொலோ 1:9-13எபே 3:14-21 இந்த யோசனை சபையாரெல்லோருக்கும் பிரியமாக இருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தைச் சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, அப் 11:24அப் 21:8அப் 8:5-40அப் 6:3அப் 6:8அப் 7:1அப் 11:19அப் 13:1 அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள். 2 தீமோ 1:6எண் 8:10அப் 1:241 தீமோ 4:14அப் 8:17அப் 13:3அப் 9:171 தீமோ 5:22 தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள். அப் 19:20அப் 12:24கொலோ 1:6எபி 5:9ரோம 16:26அப் 14:22யோவா 12:42ரோம 1:5

ஸ்தேவானுக்கு எதிராக யூதர்கள்

ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். அப் 4:29-30அப் 6:5அப் 7:551 தீமோ 3:13அப் 6:10அப் 2:17-18அப் 6:15அப் 6:3 அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள். அப் 15:23அப் 15:41அப் 22:3அப் 23:34மத் 27:32அப் 16:6அப் 18:24அப் 19:10 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது. லூக் 21:151 கொரி 2:4மத் 10:19-20யோவா 7:46லூக் 12:11-12யோபு 32:8யாத் 4:12எசேக் 3:27 அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு; மத் 26:59-601 இராஜா 21:10-131 தீமோ 1:13அப் 15:21அப் 18:6அப் 21:20-22அப் 21:28அப் 23:12-15 மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; நீதி 15:18அப் 14:2மத் 26:57அப் 13:50அப் 16:19-21அப் 17:13அப் 17:5-6அப் 21:27 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்; அப் 6:11அப் 21:28அப் 25:8அப் 7:58மத் 24:15சங் 27:12சங் 35:11சங் 56:5 எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள். அப் 21:21தானி 9:26எபி 12:26-28அப் 15:1அப் 28:17கலா 3:19கலா 3:23கலா 4:3-5 ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள். மத் 13:43பிரச 8:1யாத் 34:29-35மத் 17:22 கொரி 3:182 கொரி 3:7-8மத் 5:22