இஸ்ரவேலின் அண்டை தேசத்தார்களுக்கான நியாயத்தீர்ப்பு
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள். சகரி 14:52 நாளாக 26:1-231 இராஜா 19:192 நாளாக 11:62 நாளாக 20:202 சாமு 14:2ஆமோ 7:141 கொரி 1:27 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பர்களின் பசும்புல்நிலம் துக்கம் கொண்டாடும்; கர்மேலின் உச்சியும் காய்ந்துபோகும். யோவே 3:16எரே 25:30ஏசா 42:13ஆமோ 9:3எரே 12:4நாகூ 1:4ஆமோ 3:7-8ஆமோ 4:7-8 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இரும்புக் கருவிகளினால் போரடித்தார்களே. 2இராஜா 10:32-332இராஜா 8:12ஆமோ 1:9ஆமோ 2:6ஏசா 8:4எரே 49:23-27ஆமோ 1:13ஆமோ 1:6 ஆசகேலின் வீட்டை தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரண்மனைகளை அழித்துவிடும். 2இராஜா 13:252இராஜா 13:32இராஜா 8:7-15எரே 49:272இராஜா 6:24எரே 17:271 இராஜா 19:151 இராஜா 20:1-22 நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை 1 ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 2இராஜா 16:9ஆமோ 9:7எரே 51:30ஏசா 43:14புலம் 2:9எரே 50:36நாகூ 3:13 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே. 2 நாளாக 28:18ஆமோ 1:11ஒபதி 1:111 சாமு 6:17ஆமோ 1:9எசேக் 35:5ஏசா 14:29-31எரே 47:4-5 காசாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரண்மனைகளை அழித்துவிடும். செப்ப 2:42இராஜா 18:8எரே 47:12 நாளாக 26:6ஆமோ 1:4உபா 32:35உபா 32:41-43எரே 25:18-20 நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் பிடித்திருக்கிறவனை அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து, பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி என்னுடைய கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 25:16ஏசா 14:29-31எரே 47:4-5செப்ப 2:4-72 நாளாக 26:6ஏசா 20:1சங் 81:14சகரி 9:6 மேலும்: தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்களுடைய சகோதர்களின் உடன்படிக்கையை நினைக்காமல், சிறைப்பட்டவர்களை முழுவதும் ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே. 1 இராஜா 9:11-14ஏசா 23:1-18யோவே 3:4-8சகரி 9:2-42 நாளாக 2:8-162 சாமு 5:11எசேக் 26:1-211 இராஜா 5:1-11 தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார். சகரி 9:4ஆமோ 1:7ஆமோ 1:4எசேக் 26:12 மேலும்: ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. எசேக் 25:12-142 நாளாக 28:17எண் 20:14-21யோவே 3:19மல்கி 1:4எரே 49:7-22சங் 137:7எசேக் 35:1-15 தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 49:7ஒபதி 1:9-10எரே 49:13எரே 49:20எரே 49:22ஆதி 36:11ஆதி 36:33ஏசா 34:6 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே. எசேக் 25:2-7ஓசி 13:16எரே 49:1-6எசேக் 35:10ஏசா 5:8செப்ப 2:8-91 சாமு 11:1-22 நாளாக 20:1 ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புயலாகவும் அதின் அரண்மனைகளை அழிக்கும். ஆமோ 2:2உபா 3:11எரே 49:22 சாமு 12:26ஏசா 30:30தானி 11:40எசேக் 25:5ஏசா 9:5 அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 49:3