கவலையற்றிருப்பவர்களுக்கு ஐயோ
சீயோனிலே கவலையற்றிருப்பவர்களும் சமாரியாவின் மலையை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், தேசத்தின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ, ஏசா 32:9-11யாக் 5:5லூக் 12:17-20ஆமோ 4:1யாத் 19:5-6நியாயாதி 18:7செப்ப 1:12யாக் 1:18 நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள். நாகூ 3:82இராஜா 18:34ஆதி 10:102 நாளாக 26:61 சாமு 17:4ஏசா 10:9-111 இராஜா 8:651 சாமு 17:23 தீங்குநாள் தூரமென்று எண்ணிக் கொடுமையின் இருக்கை கிட்டவரும்படிச் செய்து, ஆமோ 9:10எசேக் 12:27ஏசா 56:121 தெச 5:32 பேது 3:4ஆமோ 3:10எசேக் 12:22மத் 24:48 தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் சவுக்கியமாகப் படுத்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, ஆமோ 3:121 சாமு 25:36-38எசேக் 34:2-3ஏசா 22:13ஏசா 5:11-12யாக் 5:5லூக் 12:19-20லூக் 16:19 தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, ஏசா 5:12ஆமோ 5:23ஆமோ 8:31 நாளாக 15:161 நாளாக 23:51 பேது 4:3பிரச 2:8ஆதி 31:27 பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த வாசனைத்தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்பிற்கு நேரிட்ட ஆபத்திற்குக் கவலைப்படாமல் போகிறார்கள். ஆதி 49:221 கொரி 12:261 தீமோ 5:232இராஜா 15:292இராஜா 17:3-6ஆமோ 2:8எஸ்த 3:15எசேக் 9:4 ஆகையால் அவர்கள் சிறையிருப்பிற்குப் போகிறவர்களின் முதல் வரிசையிலே போவார்கள்; இப்படியே உல்லாசமாகப் படுத்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும். ஆமோ 7:111 இராஜா 20:16-20ஆமோ 5:5தானி 5:4-6ஆமோ 5:27ஆமோ 7:17உபா 28:41எஸ்த 5:12-14
இஸ்ரவேலின் பெருமையை தேவன் வெறுத்தல்
நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரண்மனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். எரே 51:14ஆமோ 4:2ஆமோ 8:7எரே 22:5சங் 47:4ஆமோ 3:11சங் 106:40உபா 32:19 ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாக இருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள். ஆமோ 5:31 சாமு 2:33எஸ்த 5:11எஸ்த 9:10ஏசா 14:21யோபு 1:19யோபு 1:2யோபு 20:28 அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தை எறிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படி, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராவது உண்டோ என்று கேட்பான், அவன் இல்லை என்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாக இரு; யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லக்கூடாது என்பான். 1 சாமு 31:12ஆமோ 8:3ஆமோ 5:13எசேக் 20:39எசேக் 24:21எரே 16:6எரே 44:26எண் 17:12 இதோ, யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை விரிசல்கள் உண்டாகவும் அடிப்பார். ஆமோ 3:15ஏசா 55:112இராஜா 25:9ஆமோ 6:8ஆமோ 9:9லூக் 19:44நாகூ 1:14சகரி 14:2 கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை விஷமாகவும், நீதியின் கனியைக் கசப்பாகவும் மாற்றினீர்கள். ஆமோ 5:7ஓசி 10:4ஆமோ 5:11-12ஏசா 59:13-141 இராஜா 21:7-13ஏசா 48:4சங் 94:20-21அப் 7:51-52 நாங்கள் எங்களுடைய லோதேபார் பட்டணத்தினாலே எங்களுக்குக் கர்னாயிம் பட்டணத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள். ஏசா 28:14-15லூக் 12:19-202இராஜா 14:25யாக் 4:161 சாமு 4:52 நாளாக 28:6-82இராஜா 13:252இராஜா 14:12-14 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு தேசத்தை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் நுழைகிற வழி தொடங்கிச் சமமான நாட்டின் ஆறுவரைக்கும் உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். 1 இராஜா 8:652இராஜா 14:25எரே 5:15-172இராஜா 15:292இராஜா 17:6எசேக் 47:15-17ஓசி 10:5ஏசா 7:20