யாத்திராகமம் 1

Exodus 1
அத்தியாயம் 1

இஸ்ரவேலர்கள் எகிப்தில் துன்புறுத்தப்படுதல்

எகிப்திற்குப் போன இஸ்ரவேலுடைய மகன்களின் பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, 1 நாளாக 2:1-2ஆதி 46:8-26ஆதி 35:23-261 நாளாக 12:23-40யாத் 6:14-16ஆதி 29:31ஆதி 35:18ஆதி 49:3-27 இசக்கார், செபுலோன், பென்யமீன், ஆதி 35:22 தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே. யாத் 28:20ஆதி 35:23 இவர்கள் யாக்கோபுடன் தங்கள் தங்கள் குடும்பங்களோடு போனார்கள். யோசேப்போ அதற்கு முன்பே எகிப்திற்கு போயிருந்தான். யாக்கோபின் சந்ததியார்கள் எல்லோரும் எழுபது பேர். உபா 10:22ஆதி 46:26-27நியாயாதி 8:30யாத் 1:20 யோசேப்பும் அவனுடைய சகோதரர்கள் அனைவரும், அந்தத் தலைமுறையினர் எல்லோரும் மரணமடைந்தார்கள். ஆதி 50:26அப் 7:14-16ஆதி 50:24 இஸ்ரவேலர்கள் அதிகமாக பலுகி, ஏராளமாகப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. ஆதி 46:3உபா 26:5ஆதி 1:28ஆதி 35:11ஆதி 47:27ஆதி 9:1உபா 10:22ஆதி 12:2

யோசேப்பை அறியாத புதிய ராஜா ஒருவன் எகிப்தில் தோன்றினான். அப் 7:18பிரச 2:18-19பிரச 9:15 அவன் தன்னுடைய மக்களை நோக்கி: “இதோ, இஸ்ரவேலர்களுடைய மக்கள் நம்மைவிட ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாக இருக்கிறார்கள். சங் 105:24-25பிரச 4:4யாக் 3:14-16எண் 22:4-5நீதி 14:28நீதி 27:4தீத் 3:3யாக் 4:5 அவர்கள் பெருகாதபடியும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைவரோடு கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்செய்து, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடியும், நாம் அவர்களைக்குறித்து ஒரு தீர்மானம் செய்யவேண்டும்” என்றான். அப் 7:19சங் 83:3-4நீதி 1:11சங் 105:25சங் 10:21 கொரி 3:18-20அப் 23:12யாக் 3:15-18 அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படி, அவர்கள்மேல் மேற்பார்வையாளர்களை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் சேமிப்புக் கிடங்கு பட்டணங்களைக் கட்டினார்கள். ஆதி 15:13யாத் 2:11யாத் 3:7ஆதி 47:11உபா 26:6சங் 81:61 இராஜா 9:192 நாளாக 8:4 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாக அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேலர்களைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள். சங் 105:24யாத் 1:9ரோம 8:28அப் 5:28-33அப் 4:2-4யோவா 12:19நீதி 27:4எபி 12:6-11 எகிப்தியர்கள் இஸ்ரவேர்களைக் கொடுமையாக வேலைவாங்கினார்கள். உபா 4:20 கலவையும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையாலும், வயலில் செய்யும் எல்லாவித வேலையாலும், அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்த எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாக நடத்தினார்கள். அப் 7:19எண் 20:15யாத் 2:23யாத் 6:9அப் 7:34ஏசா 58:6சங் 81:6உபா 26:6 அதுமட்டுமில்லாமல், எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பெயருடைய எபிரெய மருத்துவச்சிகளுடன் பேசி: “நீங்கள் எபிரெய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பார்த்து, ஆண்பிள்ளையாக இருந்தால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையாக இருந்தால் உயிரோடு இருக்கட்டும்” என்றான். யாத் 1:22மத் 21:38வெளி 12:4 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடு காப்பாற்றினார்கள். அப் 5:29யாத் 1:21பிரச 12:13லூக் 12:5மத் 10:28அப் 4:18-20தானி 3:16-18தானி 6:13 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைத்து: “நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றுகிற காரியம் என்ன” என்று கேட்டான். பிரச 8:42 சாமு 13:28 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் இல்லை, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடம் போவதற்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகிறார்கள்” என்றார்கள். 2 சாமு 17:19-20யோசு 2:4-241 சாமு 21:2 இதினால் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். மக்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள். பிரச 8:12ஏசா 3:10நீதி 11:18யாத் 1:12எபி 6:10சங் 111:5யாத் 1:7லூக் 1:50 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததால், அவர்களுடைய குடும்பங்கள் செழிக்கும்படிச் செய்தார். 1 இராஜா 11:381 சாமு 2:35சங் 37:32 சாமு 7:27-29பிரச 8:121 இராஜா 2:241 சாமு 25:282 சாமு 7:11-13 அப்பொழுது பார்வோன், “எபிரெயருக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடு வைக்கவும்” தன்னுடைய மக்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான். அப் 7:19நீதி 1:16யாத் 1:16நீதி 4:16சங் 105:25வெளி 16:4-6யாத் 7:19-21ஆதி 41:1