பரிசுத்த ஆசரிப்புக்கூடாரத்திற்கான காணிக்கைகள் (யாத்திராகமம் 39:4-9.)
யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாக உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடம் எனக்குக் காணிக்கையை வாங்கிக்கொள். 2 கொரி 9:7நெகே 11:2எஸ்றா 2:68எஸ்றா 1:6எஸ்றா 7:16எஸ்றா 3:51 நாளாக 29:1-30சங் 110:3 நீங்கள் அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், உபா 8:9யோபு 28:2 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு முடியும், வெளி 19:8எசேக் 16:10ஆதி 41:42 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும் 1, சீத்திம் மரமும், யாத் 26:14-15யாத் 26:26யாத் 26:37யாத் 36:20 விளக்கெண்ணெயும், அபிஷேகத் தைலத்திற்குப் பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமண வாசனைப் பொருட்களும், யாத் 27:20யாத் 25:37யாத் 30:23-38யாத் 40:24-25 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே. யாத் 28:4யாத் 28:6-30 அவர்கள் நடுவிலே நான் தங்கியிருக்க, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள். 2 கொரி 6:16வெளி 21:31 இராஜா 6:13யாத் 29:45எபி 9:1-2சகரி 2:10எபி 3:6ஏசா 12:6 நான் உனக்குக் காண்பிக்கும் ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாப்பொருட்களின் மாதிரியின்படியும் அதைச் செய்யுங்கள். யாத் 25:40எபி 8:5அப் 7:44எபி 9:91 நாளாக 28:11-19
உடன்படிக்கையின் பெட்டி
“சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும் 2, அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும். எபி 9:4யாத் 37:1-3உபா 10:1-3வெளி 11:192 நாளாக 8:11 அதை எங்கும் சுத்தப்பொன் தகட்டால் மூடு; நீ அதனுடைய உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதனால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் விளிம்பு உண்டாக்கி, யாத் 25:241 இராஜா 6:202 நாளாக 3:4யாத் 30:3 அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து, யாத் 25:15யாத் 37:5யாத் 25:26யாத் 26:29யாத் 27:7யாத் 38:7 சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, 1 நாளாக 15:15யாத் 25:28யாத் 27:6யாத் 30:5யாத் 37:4யாத் 40:20எண் 4:11எண் 4:14 அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சு. அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். 1 இராஜா 8:82 நாளாக 5:9 நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை அந்தப் பெட்டியிலே வைக்கவேண்டும். 1 இராஜா 8:9உபா 31:26எபி 9:4யாத் 16:342 நாளாக 34:14-152இராஜா 11:12அப் 7:44உபா 10:2-5 “சுத்தப்பொன்னினாலே கிருபாசனத்தைச் செய்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக 3இருக்கட்டும். யாத் 37:6எபி 9:5ரோம 3:251 நாளாக 28:11யாத் 40:20எபி 4:16லேவி 16:12-151 யோவா 2:2 பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும். எசேக் 10:20எபி 9:51 நாளாக 28:181 இராஜா 8:6-7எசேக் 10:21 இராஜா 6:23-281 சாமு 4:4யாத் 37:7-9 ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும். அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாக இருக்கட்டும்; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாக இருப்பதாக. 1 நாளாக 28:181 இராஜா 8:7எபி 9:51 கொரி 11:101 கொரி 4:91 பேது 1:121 பேது 3:222 நாளாக 3:10 கிருபாசனத்தைப் பெட்டியின்மீது வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை வைப்பாயாக. யாத் 26:34ரோம 10:4யாத் 25:16-17 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன். யாத் 29:42-43எண் 7:89ஏசா 37:162இராஜா 19:15சங் 80:11 சாமு 4:4லேவி 16:2எண் 17:4
பரிசுத்த அப்பத்தின் மேஜை
“சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் செய்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாக 4இருக்கட்டும். யாத் 37:10-16எபி 9:21 இராஜா 7:482 நாளாக 4:81 நாளாக 28:162 நாளாக 4:19யாத் 40:22-23எசேக் 40:41-42 அதைச் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் விளிம்பை உண்டாக்கி, யாத் 25:111 இராஜா 6:20-22 சுற்றிலும் அதற்கு நான்கு விரலளவு 5 உள்ள சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் விளிம்பையும் உண்டாக்கி, யாத் 30:3யாத் 37:2 அதற்கு நான்கு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் நீ தைக்கவேண்டும். அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்கள் உண்டாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும். யாத் 25:14யாத் 25:28 அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடு; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும். அப் 9:15யாத் 25:14யாத் 25:27எண் 10:17 அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலிக்கான கிண்ணங்களையும் செய்யக்கடவாய்; அவைகளைப் சுத்தப்பொன்னினால் செய். எண் 4:7யாத் 37:16வெளி 3:201 இராஜா 7:502 நாளாக 4:22எஸ்றா 1:9-11எரே 52:18-19லேவி 24:5-9 மேஜையின்மேல் எப்போதும் என்னுடைய சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கவேண்டும். லேவி 24:5-9மத் 12:4யாத் 39:361 நாளாக 23:291 நாளாக 9:321 சாமு 21:62 நாளாக 13:11யாத் 35:13
விளக்குத்தண்டு (யாத்திராகமம் 37:17-22)
“சுத்தப்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்கு; அது பொன்னினால் அடிப்பு வேலையாகச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும், பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும். 1 இராஜா 7:49யாத் 37:17-24சகரி 4:2எபி 9:2வெளி 1:12யாத் 35:14வெளி 1:201 இராஜா 6:18 ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும். யாத் 37:19-20எரே 1:11-12எண் 17:4-8சகரி 4:3 விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருக்கட்டும்; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும். அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாக இருக்கட்டும்; அவையெல்லாம் தகடாக அடித்த சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாக இருக்கவேண்டும். 1 இராஜா 10:16-172 நாளாக 9:15யாத் 25:18எண் 8:4 அதில் ஏழு அகல்களைச் செய்; அதற்கு நேர் எதிராக எரியும்படி அவைகள் ஏற்றப்படவேண்டும். எண் 8:2வெளி 1:202 நாளாக 13:11யாத் 27:21லேவி 24:2-4வெளி 1:12சகரி 4:2அப் 26:18 அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் சுத்தப்பொன்னினால் செய்யப்படுவதாக. 1 இராஜா 7:502 நாளாக 4:212இராஜா 12:132இராஜா 25:14யாத் 37:23ஏசா 6:6எரே 52:18எண் 4:9 அதையும், அதற்குரிய பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து 6 சுத்தப்பொன்னினால் செய்யவேண்டும். மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி அவைகளைச் செய்ய எச்சரிக்கையாக இரு. அப் 7:44யாத் 26:30எபி 8:5யாத் 25:9எண் 8:41 நாளாக 28:191 நாளாக 28:11யாத் 39:42-43