எசேக்கியேல் 41

Ezekiel 41
அத்தியாயம் 41

ஆலயத்தின் பகுதிகள்

பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாயிலின் அகல அளவு. எசேக் 40:17எசேக் 40:2-3எசேக் 41:231 இராஜா 6:21 பேது 2:5எபே 2:20-22எசேக் 40:9எசேக் 41:21 வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்பக்கத்தில் ஐந்து முழமும் அந்தப்பக்கத்தில் ஐந்து முழமுமாக இருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார். 1 இராஜா 6:171 இராஜா 6:22 நாளாக 3:31 இராஜா 6:31-352 நாளாக 29:72 நாளாக 3:7யாத் 26:36யாத் 36:37 பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் நிலைத்தூண்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார். எசேக் 40:16 பின்பு அவர் தேவாலயத்தின் முன்பக்கத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார். 1 இராஜா 6:20எபி 9:3-82 நாளாக 3:8யாத் 26:33-341 இராஜா 6:161 இராஜா 6:5வெளி 21:16 பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுசுவரின் அகலத்தை நான்குமுழமாகவும் அளந்தார். 1 இராஜா 6:5-6எசேக் 41:6-9எசேக் 42:3-14 இந்தப் பக்கஅறைகள் அருகருகே, வரிசைகளாக முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் இணைந்திருக்காமல், பக்கஅறைகளுக்காகச் சுற்றிலும் அவைகள் இணையும்படி ஆலயத்திற்கு பக்கத்தில் இருந்த ஒட்டுச்சுவரிலே இணைந்திருந்தது. 1 இராஜா 6:101 இராஜா 6:5-61 பேது 1:5எசேக் 40:17 உயர உயரச் சுற்றிலும் பக்கஅறைளுக்கு அகலம் அதிகமாக இருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாக இருந்தது; ஆதலால் இப்படியாக கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாக மேல்நிலைக்கு ஏறும் வழி இருந்தது. 1 இராஜா 6:8எபி 6:1மத் 13:32 மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், பக்கஅறைகளின் அஸ்திபாரங்கள் ஆறுபெரிய முழம்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாக இருந்தது. எசேக் 40:5வெளி 21:16 வெளியே பக்கஅறைகளுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாக இருந்தது; ஆலயத்திற்கு இருக்கும் பக்கஅறைகளின் மாளிகையிலே வெறுமையாக விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது. எசேக் 41:11எசேக் 42:1எசேக் 42:4 ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த அகலம் இருபது முழமாக இருந்தது. எசேக் 40:17 பக்கஅறைகளினுடைய வாசல்நடைகள், வெறுமையாக விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாக விட்டிருந்த இடங்களின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமாக இருந்தது. எசேக் 41:9எசேக் 42:4 மேற்கு திசையிலே தனிப்பட்ட இடத்திற்கு முன்பாக இருந்த மாளிகைவரை அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாக இருந்தது. எசேக் 41:13-15எசேக் 42:1எசேக் 42:10எசேக் 42:13வெளி 21:27வெளி 22:14-15 அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், தனிப்பட்ட இடத்தையும் மாளிகையையும், அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார். எசேக் 40:47 ஆலயத்தின் முன்பக்கமும் கிழக்குக்கு எதிரான தனிப்பட்ட இடமும் இருந்த அகலம் நூறு முழமாக இருந்தது. தனிப்பட்ட இடத்தின் பின்பக்கமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் இருந்த நடையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாக இருந்தது. எசேக் 42:3எசேக் 42:1எசேக் 41:12எசேக் 41:17எசேக் 42:15எசேக் 42:5உன்னத 1:17உன்னத 7:5 வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைபந்தல்களும் சுற்றிலும் தரை துவங்கி ஜன்னல்கள் வரை பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது. 1 இராஜா 6:41 இராஜா 6:15எசேக் 40:16எசேக் 40:251 கொரி 13:122 நாளாக 3:5எசேக் 41:25-26எசேக் 42:3 வாசலின் மேலேதுவங்கி ஆலயத்தின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் சுற்றிலும் சுவரின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் எல்லாம் அளவிட்டிருந்தது. எசேக் 42:15 கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; ஒரு கேருபீனுக்கும் மற்றொரு கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது. 1 இராஜா 7:36எசேக் 40:162 நாளாக 3:7எசேக் 10:21எசேக் 40:221 இராஜா 6:29-321 இராஜா 6:352 நாளாக 3:5 பேரீச்சமரத்திற்கு இந்தபக்கத்தில் மனிதமுகமும், பேரீச்சமரத்திற்கு அந்த பக்கத்தில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது. எசேக் 10:14எசேக் 1:10 தரை துவங்கி வாசலின் மேல்பக்கம்வரை, தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது. எசேக் 41:18 தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்திற்குச் சரியாக இருந்தது. எசேக் 41:11 இராஜா 6:33எசேக் 40:14 மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாக இருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும், அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார். எசேக் 23:41எசேக் 44:16மல்கி 1:12மல்கி 1:71 இராஜா 6:20யாத் 30:1-3லேவி 24:6வெளி 8:3 தேவாலயத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இரண்டு வாசல்களும், 1 இராஜா 6:31-352 நாளாக 4:22எசேக் 41:1 வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது. 1 இராஜா 6:34எசேக் 40:48 சுவர்களில் செதுக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; வெளியே மண்டபத்தின் முன்பாக மர கூரை வைத்திருந்தது. எசேக் 41:18 மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், ஆலயத்தின் பக்கஅறைகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது. எசேக் 41:16எசேக் 40:16எசேக் 41:5