எஸ்றா 8

Ezra 8
அத்தியாயம் 8

எஸ்றாவுடன் திரும்பிவந்த வம்சத்தலைவர்களின் அட்டவணை

அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னுடன் வந்த தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்களும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன: எஸ்றா 7:71 நாளாக 24:311 நாளாக 26:321 நாளாக 4:331 நாளாக 9:11 நாளாக 9:342 நாளாக 26:12எஸ்றா 1:5 பினெகாசின் மகன்களில் கெர்சோம், இத்தாமாரின் மகன்களில் தானியேல், தாவீதின் மகன்களில் அத்தூஸ், 1 நாளாக 3:221 நாளாக 24:1-61 நாளாக 3:11 நாளாக 6:3-15 பாரோஷின் மகன்களில் ஒருவனான செக்கனியாவின் மகன்களில் சகரியாவும், அவனுடன் வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற 150 ஆண்மக்களும், எஸ்றா 2:3நெகே 10:14நெகே 7:8 பாகாத்மோவாபின் மகன்களில் செரகியாவின் மகனாகிய எலியோனாயும், அவனுடன் 200 ஆண்மக்களும், எஸ்றா 2:6நெகே 10:14நெகே 7:11 செக்கனியாவின் மகன்களில் யகசியேலின் மகனும், அவனுடன் 300 ஆண்மக்களும், ஆதீனின் மகன்களில் யோனத்தானின் மகனாகிய ஏபேதும், அவனுடன் 50 ஆண்மக்களும், எஸ்றா 2:15நெகே 10:16நெகே 7:20 ஏலாமின் மகன்களில் அதலியாவின் மகனாகிய எஷாயாவும், அவனுடன் 70 ஆண்மக்களும், எஸ்றா 2:31எஸ்றா 2:7நெகே 7:12நெகே 7:34 செபதியாவின் மகன்களில் மிகாவேலின் மகனாகிய செபத்தியாவும், அவனுடன் 80 ஆண்மக்களும், எஸ்றா 2:4நெகே 11:4நெகே 7:9 யோவாபின் மகன்களில் யெகியேலின் மகனாகிய ஒபதியாவும், அவனுடன் 218 ஆண்மக்களும், எஸ்றா 2:6நெகே 7:11 செலோமித்தின் மகன்களில் யொசிபியாவின் மகனும், அவனுடன் 160 ஆண்மக்களும், பெபாயின் மகன்களில் பெபாயின் மகனாகிய சகரியாவும், அவனுடன் 28 ஆண்மக்களும், எஸ்றா 10:28எஸ்றா 2:11நெகே 7:16 அக்காதின் மகன்களில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனுடன் 110 ஆண்மக்களும், எஸ்றா 2:12நெகே 7:17 அதோனிகாமின் கடைசி புத்திரரான எலிப்பெலேத், ஏயெல், செமாயா என்னும் பெயர்களுள்ளவர்களும், அவர்களுடன் 60 ஆண்மக்களும், எஸ்றா 2:13நெகே 7:18 பிக்வாயின் மகன்களில் ஊத்தாயும், சபூதும், அவர்களுடன் 70 ஆண்மக்களுமே. எஸ்றா 2:14நெகே 10:12நெகே 7:19

எருசலேமுக்குத் திரும்புதல்

இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதிக்கு அருகில் கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்தோம்; நான் மக்களையும் ஆசாரியர்களையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை. எஸ்றா 7:7எஸ்றா 8:21எஸ்றா 8:31எசேக் 3:15எஸ்றா 8:2சங் 137:1அப் 16:13எசேக் 1:1 ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மெசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து, 1 நாளாக 12:321 நாளாக 26:141 யோவா 5:201 இராஜா 3:112 நாளாக 2:122 தீமோ 2:7தானி 2:21எஸ்றா 10:21 கசிப்பியா என்னும் இடத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரர்களை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி, அவர்கள் கசிப்பியா என்னும் இடத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியர்களுக்கும் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன். எஸ்றா 2:431 நாளாக 23:26-321 நாளாக 23:3-62 சாமு 14:192 சாமு 14:3உபா 18:18யாத் 4:15எஸ்றா 2:58 அவர்கள் எங்கள்மேல் இருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் மகனாகிய மகேலியின் மகன்களில் புத்தியுள்ள மனிதனாகிய செரெபியாவும் அவனுடைய மகன்களும் சகோதரர்களுமான பதினெட்டுப்பேரையும், எஸ்றா 7:28எரே 3:15நெகே 2:81 நாளாக 6:19தானி 1:20எஸ்றா 7:6எஸ்றா 8:221 கொரி 14:20 மெராரியரின் மகன்களில் எஷாயாவும் அவனுடன் அஷபியாவும் அவனுடைய சகோதரர்களும் அவர்கள் மகன்களுமான இருபதுபேரையும், 1 நாளாக 6:11 நாளாக 6:161 நாளாக 6:19நெகே 10:11நெகே 3:17 தாவீதும் பிரபுக்களும் லேவியர்களுக்குப் பணிவிடைக்காரர்களாக வைத்த நிதனீமியரில் 220 பேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லோருடைய பெயர்களும் குறிக்கப்பட்டன. எஸ்றா 2:43எஸ்றா 7:71 நாளாக 9:2எஸ்றா 8:17பிலி 4:3 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் அனைத்து பொருட்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதிக்கு அருகில் உபவாசத்தை அறிவித்தேன். 2 நாளாக 20:3யோவே 1:141 சாமு 7:6ஏசா 30:21யோனா 3:5லேவி 16:29லேவி 23:29சங் 107:2-8 வழியிலே எதிரியை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படி, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரர்களையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிற எல்லோர்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லோர்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம். 1 பேது 3:12சங் 33:18-192 நாளாக 16:9சங் 34:15-16புலம் 3:252 நாளாக 15:2சங் 34:22ரோம 8:28 அப்படியே நாங்கள் உபவாசம்செய்து, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார். எரே 29:12-13மத் 7:7-82 நாளாக 33:12-13எஸ்றா 8:31உபா 4:291 நாளாக 5:20எஸ்த 4:16ஏசா 19:22 பின்பு நான் ஆசாரியர்களின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷபியாவையும், அவர்களுடைய சகோதரர்களிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து, எஸ்றா 8:18-19 ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரர்களும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த அனைத்து இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பொருட்களையும் அவர்களிடத்தில் எடைபோட்டுக் கொடுத்தேன். எஸ்றா 7:14-16எஸ்றா 8:33எஸ்றா 1:82 கொரி 8:20-21பிலி 4:8 அவர்கள் கையிலே நான் 650 தாலந்து வெள்ளியையும், 100 தாலந்து நிறையான வெள்ளிப் பொருட்களையும், 100 தாலந்து பொன்னையும், எஸ்றா 1:9-11 1,000 தங்கக்காசு பெறுமான 20 பொற்கிண்ணங்களையும் 1, பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்களையும் எடைபோட்டுக்கொடுத்து, புலம் 4:2 அவர்களை நோக்கி: நீங்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமானவர்கள்; இந்தப் பொருட்களும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு மனஉற்சாகமாகச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள். லேவி 22:2-3லேவி 21:6-81 நாளாக 23:281 இராஜா 7:48-512 நாளாக 24:14உபா 33:8எஸ்றா 1:7-11ஏசா 52:11 நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர்கள் லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக எடைபோட்டு ஒப்புவிக்கும்வரை விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன். எஸ்றா 8:33-341 நாளாக 26:20-262 தீமோ 4:5அப் 20:31மாற் 13:34-35 அப்படியே அந்த ஆசாரியர்களும் லேவியர்களும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பொருட்களையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோகும்படிக்கு, எடைபோட்டுகொண்டார்கள். 1 நாளாக 29:2-3எஸ்றா 8:22ஏசா 60:13சங் 122:9

நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே எதிரியின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது. எஸ்றா 7:9எஸ்றா 8:15எஸ்றா 8:21-22அப் 26:22ஏசா 41:10-14எஸ்றா 7:28சங் 91:9-14யோபு 5:19-24 நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு, நெகே 2:11எஸ்றா 7:8-9 நான்காம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பொருட்களும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் மகன் மெரெமோத்தின் கையிலும், பினெகாசின் மகன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் எடைபோட்டு, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் மகன் யோசபாத்தும், பின்னூயின் மகன் நொவதியாவும் என்கிற லேவியர்களும் அவர்களுடன் இருந்தார்கள். நெகே 3:4எஸ்றா 8:30நெகே 3:211 நாளாக 28:14-182 கொரி 8:20-21எஸ்றா 8:26நெகே 10:5நெகே 10:9 அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது. சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் 12 காளைகளையும், 96 ஆட்டுக்கடாக்களையும், 77 ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் 12 வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவையெல்லாம் யெகோவாவுக்கு சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள். எஸ்றா 6:172 நாளாக 29:31-32எஸ்றா 2:1லேவி 1:1-7லூக் 1:74-75எண் 7:27சங் 116:12-19சங் 66:10-15 பின்பு ராஜாவின் ஆணைகளை நதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் மக்களுக்கும் தேவனுடைய ஆலயத்திற்கும் உதவியாக இருந்தார்கள். எஸ்றா 7:21-24அப் 18:27எஸ்றா 4:7-23எஸ்றா 5:6-17எஸ்றா 6:13ஏசா 56:6-7வெளி 12:16எஸ்த 9:3