ஆதியாகமம் 13

Genesis 13
அத்தியாயம் 13

ஆபிராமும் லோத்தும் பிரிந்து செல்லுதல்

ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள். 2 சாமு 24:7ஆதி 12:9-20யோசு 10:401 சாமு 27:10ஆதி 20:1ஆதி 21:33யோசு 18:5 ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான். ஆதி 24:35சங் 112:1-3ஆதி 26:12-13யோபு 22:21-25நீதி 10:22உபா 8:18யோபு 1:10யோபு 1:3 அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், ஆதி 12:6ஆதி 12:8-9 தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான இடம்வரைக்கும் போனான்; அங்கே ஆபிராம் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். எரே 29:12எபே 6:18-19ஆதி 12:7-8ஏசா 58:9சங் 116:2சங் 65:1-2செப்ப 3:91 கொரி 1:2 ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள் 1. ஆதி 25:27ஆதி 4:20எரே 49:29 அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது. ஆதி 36:6-71 தீமோ 6:9பிரச 5:10-11லூக் 12:17-18 ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள். ஆதி 26:20ஆதி 12:6யாக் 3:161 பேது 2:12கலா 5:20ஆதி 34:30யாக் 4:11 கொரி 3:3 ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். 1 கொரி 6:6-7அப் 7:26சங் 133:11 யோவா 2:9-111 யோவா 3:14-191 யோவா 4:20-211 பேது 3:81 பேது 4:8 இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான். 1 பேது 3:8-12ஆதி 20:15ஆதி 34:10எபி 12:141 கொரி 6:7சங் 120:7ரோம 12:18யாக் 3:13-18 அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது யெகோவாவுடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. உபா 34:3ஏசா 51:3ஆதி 14:8ஆதி 2:8-10எசேக் 28:13ஆதி 14:2யோவே 2:31 யோவா 2:15-16 அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆதி 13:91 பேது 2:17எபி 10:25நீதி 27:10சங் 119:63ஆதி 13:14சங் 16:3ஆதி 19:17 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான். ஆதி 19:29ஆதி 14:12ஆதி 19:11 கொரி 15:332 பேது 2:7-8ஆதி 19:25சங் 26:5 சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் யெகோவாவுக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள். 2 பேது 2:102 பேது 2:6-8யூதா 1:7ஏசா 3:8-9எரே 23:24ரோம 1:27எசேக் 16:46-50ஆதி 18:20

ஆபிராம் எபிரோனுக்கு போனான்

லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, யெகோவா ஆபிராமை நோக்கி: “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். உபா 3:27ஆதி 28:14ஏசா 49:18ஏசா 60:4ஆதி 13:10 நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து, 2 நாளாக 20:7ஆதி 12:7ஆதி 15:18அப் 7:5ஆதி 35:12சங் 37:22நெகே 9:7-8சங் 105:9-12 உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும். ஆதி 28:14எண் 23:10யாத் 32:13ஆதி 22:17ஆதி 32:121 இராஜா 3:8ரோம 4:16-18ஆதி 15:5 நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எதுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என்றார். ஆதி 13:15எண் 13:17-24 அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆதி 14:13ஆதி 18:1ஆதி 35:27ஆதி 8:20ஆதி 12:7-8சங் 16:81 தீமோ 2:8ஆதி 13:4