ஆதியாகமம் 15

Genesis 15
அத்தியாயம் 15

ஆபிராமோடு தேவன் உடன்படிக்கை செய்தல்

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார். ஏசா 41:10சங் 119:114சங் 84:11எபி 13:5-6ஆதி 26:24ஏசா 41:14உபா 33:26-29புலம் 3:24 அதற்கு ஆபிராம்: “யெகோவா ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே” என்றான். ஆதி 25:211 சாமு 1:11அப் 7:5ஆதி 12:1-3ஆதி 24:10ஆதி 24:2ஆதி 43:19ஆதி 44:1 பின்னும் ஆபிராம்: “தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான்” என்றான். ஆதி 14:14நீதி 29:21பிரச 2:7எபி 10:35-36எரே 12:1ஆதி 12:2ஆதி 13:16நீதி 13:12 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: “இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான்” என்று சொல்லி, ஆதி 17:162 சாமு 7:12கலா 4:28ஆதி 21:122 நாளாக 32:21பிலே 1:122 சாமு 16:11 அவர் அவனை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும்” என்றார். எபி 11:12ரோம 4:18உபா 1:10யாத் 32:13ஆதி 22:17உபா 10:22எரே 33:221 நாளாக 27:23 அவன் யெகோவாவை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார். 1 யாக் 2:23கலா 3:6-14ரோம 4:9ரோம 4:20-25ரோம 4:3-6எபி 11:8சங் 106:31ரோம 4:11 பின்னும் அவர் அவனை நோக்கி: “இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானே” என்றார். ஆதி 12:1அப் 7:2-4ஆதி 13:15-17நெகே 9:7-8சங் 105:42சங் 105:44ரோம 4:13ஆதி 12:7 அதற்கு அவன்: “யெகோவா ஆண்டவரே, நான் அதைச் சொந்தமாக்கிக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். லூக் 1:18லூக் 1:342இராஜா 20:8ஏசா 7:11நியாயாதி 6:17-24நியாயாதி 6:36-40சங் 86:171 சாமு 14:9-10 அதற்கு அவர்: “மூன்றுவயது இளங்கன்றையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா” என்றார். லேவி 14:22லேவி 14:30லூக் 2:24லேவி 1:14லேவி 3:1லேவி 3:6லேவி 9:2ஆதி 22:13 அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை. எரே 34:18-19லேவி 1:17ஆதி 15:172 தீமோ 2:15 பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான். மத் 13:4சங் 119:13எசேக் 17:3எசேக் 17:7 சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது. ஆதி 2:21யோபு 33:15தானி 10:8-91 சாமு 26:12அப் 9:8-9யோபு 4:13-14சங் 4:3-5அப் 20:9 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும். அப் 7:6-7யாத் 1:11யாத் 12:40-41அப் 7:17யாத் 1:1-2கலா 3:17லேவி 19:34யாத் 23:9 இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள். நெகே 9:9-11யாத் 6:5-6யாத் 12:32-38யோசு 24:4-71 சாமு 12:8உபா 4:20யாத் 7:1-14சங் 135:14 நீ சமாதானத்தோடு உன் முன்னோர்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்செய்யப்படுவாய். யோபு 5:26ஆதி 25:7-92 நாளாக 34:28எண் 27:13தானி 12:131 நாளாக 29:28அப் 13:36பிரச 12:7 நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார். 1 இராஜா 21:26தானி 8:23யாத் 12:40மத் 23:32-351 தெச 2:162 பேது 3:8-9சகரி 5:5-11 சூரியன் மறைந்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டுகளின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின. எரே 34:18-19நியாயாதி 6:21எரே 11:41 நாளாக 21:26யாத் 3:2-32 சாமு 22:9உபா 4:20ஏசா 62:1 அந்த நாளிலே யெகோவா ஆபிராமோடு உடன்படிக்கைசெய்து, “எகிப்தின் நதிதுவங்கி ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரை உள்ளதும், யோசு 1:3-4ஆதி 12:7ஆதி 24:7ஆதி 13:15உபா 11:24யாத் 23:27-31ஏசா 27:12நெகே 9:8 கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், எண் 24:21-22 ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், ஆதி 14:5ஏசா 17:5 எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்த தேசத்தை உன்னுடைய சந்ததிக்குக் கொடுத்தேன்” என்றார். உபா 7:1யாத் 23:23-28யாத் 33:2யாத் 34:11ஆதி 10:15-19மத் 8:28