ஆபிரகாம் சோதிக்கப்படுதல்
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான். எபி 11:17உபா 8:2யாக் 2:21யாக் 1:12-141 கொரி 10:131 பேது 1:7நீதி 17:3ஆதி 22:11 அப்பொழுது அவர்: “உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார். யோவா 3:16ரோம 8:32எபி 11:171 யோவா 4:9-10ஆதி 17:19ஆதி 22:12ஆதி 22:162இராஜா 3:27 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரர்களில் இரண்டுபேரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டு, தேவன் தனக்குக் குறித்திருந்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். சங் 119:60மத் 10:37லூக் 14:26பிரச 9:10கலா 1:16ஆதி 17:23ஆதி 21:14எபி 11:17-19 மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். 1 கொரி 15:4ஓசி 6:2லூக் 13:32மத் 17:231 சாமு 26:132இராஜா 20:5எஸ்த 5:1யாத் 15:22 அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரர்களை நோக்கி: “நீங்கள் கழுதையுடன் இங்கே காத்திருங்கள், நானும் சிறுவனும் அந்த இடத்திற்குப் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பி வருவோம்” என்றான். எபி 11:19எபி 12:1 ஆபிரகாம் தகனபலிக்கு விறகுகளை எடுத்து, தன் மகனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; அவர்கள் இருவரும் சேர்ந்துபோனார்கள். யோவா 19:171 பேது 2:24ஏசா 53:6மத் 8:17லூக் 24:26-27 அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “என் மகனே, இதோ, இருக்கிறேன்” என்றான்; அப்பொழுது அவன்: “இதோ, நெருப்பும் விறகும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்”. ரோம 8:15யாத் 12:3ஆதி 4:2-4ஆதி 8:20யோவா 18:11மத் 26:39மத் 26:42 அதற்கு ஆபிரகாம்: “என் மகனே, தேவன் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை அவரே கொடுப்பார்” என்றான்; அப்புறம் இருவரும் சேர்ந்துபோய், யோவா 1:36யோவா 1:29வெளி 5:12வெளி 13:8ஆதி 18:14மத் 19:26வெளி 7:141 பேது 1:19-20 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, தன் மகனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய விறகுகளின்மேல் அவனைப் படுக்கவைத்தான். யாக் 2:21எபி 11:17-19பிலி 2:7-81 பேது 2:24அப் 8:32எபே 5:2கலா 3:13ஆதி 12:7 பின்பு ஆபிரகாம் தன் மகனை வெட்டுவதற்காக தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். எபி 11:17-19யாக் 2:21-23ஏசா 53:6-12 அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். யாத் 3:4ஆதி 21:17ஆதி 16:9-10ஆதி 22:161 சாமு 3:10அப் 26:14அப் 9:4ஆதி 16:7 அப்பொழுது அவர்: “சிறுவன்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் மகன் என்றும், உனது ஒரே மகன் என்றும் பார்க்காமல் எனக்காக ஒப்புக்கொடுத்ததால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன்” என்றார். யாக் 2:21-22யாக் 2:181 சாமு 15:22மத் 10:37-38ரோம 8:321 கொரி 10:13ஆதி 22:2மத் 19:29 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, தனக்குப் பின்புறமாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் மகனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். 1 கொரி 10:132 கொரி 1:9-10சங் 40:6-81 கொரி 5:7-81 பேது 1:19-20ஆதி 22:8ஏசா 30:21சங் 89:19-20 ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே 1 என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. ஆதி 22:13யாத் 17:15நியாயாதி 6:24ஆதி 22:8ஆதி 16:13-14சங் 22:4-51 சாமு 7:121 தீமோ 3:16 யெகோவாவுடைய தூதனானவர் இரண்டாவது முறை வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: “நீ உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்ததால்; எபி 6:13-14லூக் 1:73சங் 105:9எரே 51:14எரே 49:13ரோம 4:13-14ஏசா 45:23ஆதி 12:2 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும், ஆதி 15:5ஆதி 24:60எரே 33:22ஆதி 26:4ஆதி 13:16எண் 24:17-19சங் 2:8-9சங் 72:8-9 நீ என்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். அப் 3:25கலா 3:16ஆதி 12:3ஆதி 26:4-5கலா 3:8-9ஆதி 18:18எரே 7:23சங் 72:17 ஆபிரகாம் தன் வேலைக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஒன்றுசேர்ந்து பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான். ஆதி 21:31நியாயாதி 20:1யோசு 15:28
நாகோரின் மகன்கள்
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: “மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்; ஆதி 11:29ஆதி 24:24ஆதி 11:26ஆதி 24:10ஆதி 24:15ஆதி 31:53நீதி 25:25 அவர்கள் யாரென்றால், முதற்பிறந்தவனான ஊத்ஸ், அவனுடைய தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல், யோபு 1:1ஆதி 24:10யோபு 32:2எண் 23:7சங் 60:1-12 கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றெடுத்தான்” என்று அறிவித்தான். அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றெடுத்தாள். ஆதி 24:15ஆதி 24:24ஆதி 24:47ஆதி 24:51ஆதி 24:60ஆதி 24:67ஆதி 25:20ஆதி 28:2 ரேயுமாள் என்று பெயர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றெடுத்தாள். ஆதி 16:3ஆதி 25:6நீதி 15:25