ஆதியாகமம் 39

Genesis 39
அத்தியாயம் 39

யோசேப்பும் போத்திபாரின் மனைவியும்

யோசேப்பு எகிப்திற்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்குத் தலைவனுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அந்த இடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். ஆதி 37:28சங் 105:17ஆதி 37:25ஆதி 37:36அப் 7:9ஆதி 45:4 யெகோவா யோசேப்போடு இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். 1 சாமு 18:14சங் 91:15எரே 15:20ஆதி 26:28அப் 7:9-10ஆதி 21:22ஆதி 26:24ஏசா 43:2 யெகோவா அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்கிற அனைத்தையும் யெகோவா வாய்க்கச்செய்கிறார் என்றும், அவனுடைய எஜமான் கண்டு; சங் 1:31 சாமு 18:142 நாளாக 26:5ஆதி 30:27மத் 5:16ஆதி 21:22ஆதி 26:24ஆதி 26:28 யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு வேலைக்காரனும் தன் வீட்டிற்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான அனைத்தையும் அவனுடைய கையில் ஒப்புவித்தான். ஆதி 39:21-22அப் 20:28ஆதி 19:19ஆதி 24:2ஆதி 39:8நீதி 27:18ஆதி 18:3ஆதி 33:10 அவனைத் தன் வீட்டிற்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, யெகோவா யோசேப்பின்மூலம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் யெகோவாவுடைய ஆசீர்வாதம் இருந்தது. ஆதி 30:272 சாமு 6:11-12அப் 27:24ஆதி 12:2சங் 72:17எபே 1:3சங் 21:6உபா 28:3-6 ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் சாப்பிடுகிற உணவு தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரிக்காமல் இருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். 1 சாமு 16:12ஆதி 29:17லூக் 19:17நீதி 31:11அப் 7:20ஆதி 12:14-15ஆதி 39:23ஆதி 39:4 சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, “என்னோடு உறவுகொள்” என்றாள். 2 பேது 2:142 சாமு 13:11எசேக் 16:341 யோவா 2:16எசேக் 16:32எசேக் 23:12-16எசேக் 23:5-6யோபு 31:1 அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்குச் சம்மதிக்காமல், அவளை நோக்கி: “இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் ஒன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரிக்காமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்னுடைய கையில் ஒப்படைத்திருக்கிறார். நீதி 22:14நீதி 23:26-28நீதி 1:10நீதி 7:5நீதி 9:13-18நீதி 18:24நீதி 2:10நீதி 5:3-8 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாக இருப்பதால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்கும்போது, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி” என்றான். 2 சாமு 12:13ஆதி 20:6ஆதி 42:181 யோவா 3:9கலா 5:19-21லூக் 12:48சங் 51:41 கொரி 4:2 அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. 1 பேது 2:111 கொரி 15:331 கொரி 6:181 தெச 5:222 தீமோ 2:22ஆதி 39:8நீதி 2:16நீதி 1:15 இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதர்களில் ஒருவரும் வீட்டில் இல்லை. எபே 5:12எபே 5:3எரே 23:24யோபு 24:15மல்கி 3:5நீதி 9:17 அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, “என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான். 2 தீமோ 2:22நீதி 7:13-271 பேது 2:11பிரச 7:26நீதி 5:8நீதி 6:51 கொரி 15:33ஆதி 39:10 அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: “பாருங்கள், எபிரெய மனிதன் நம்மை பரியாசம்செய்ய, போத்திபார் அவனை நம்மிடத்தில் கொண்டுவந்தார், அவன் என்னோடு உறவுகொள்வதற்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். 1 பேது 2:201 பேது 3:14-181 பேது 4:14-19ஆதி 10:21ஆதி 14:13ஆதி 39:17ஆதி 39:7ஆதி 40:15 நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான்” என்று சொன்னாள். அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து, சங் 37:32எரே 4:22எரே 9:3-5சங் 37:12தீத் 3:3 அவனை நோக்கி: “நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் தவறான எண்ணத்துடன் என்னிடத்தில் வந்தான். யாத் 23:11 இராஜா 18:171 இராஜா 21:9-13யாத் 20:16ஆதி 39:14மத் 26:65நீதி 12:19நீதி 19:5 அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்” என்றாள். உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவன் கோபமடைந்தான். 2 தெச 2:11அப் 25:16ஆதி 4:5-6யோபு 29:16நீதி 18:17நீதி 29:12நீதி 6:34-35உன்னத 8:7 யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். ஆதி 40:151 பேது 2:192 தீமோ 2:9தானி 3:21-22ஆதி 40:1-3ஆதி 41:9-14ஏசா 53:8சங் 105:18-19 யெகோவாவோ யோசேப்போடு இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கச்செய்தார். ஏசா 41:10யாத் 3:211 பேது 3:17அப் 7:9-10ஏசா 43:2ரோம 8:31-321 பேது 3:13-141 பேது 4:14-16 சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட அனைவரையும் யோசேப்பின் பொறுப்பிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றிற்கும் யோசேப்பு பொறுப்பாயிருந்தான். ஆதி 39:4ஆதி 40:3-41 சாமு 2:30ஆதி 39:6-7ஆதி 39:9சங் 37:11சங் 37:3 யெகோவா அவனோடு இருந்ததினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் யெகோவா வாய்க்கச்செய்ததாலும், அவன் வசமாயிருந்த ஒன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை. ஏசா 43:2சங் 1:3ஆதி 39:2-3தானி 6:221 சாமு 2:30ஆதி 49:23-24சங் 37:3-11ஆதி 40:3-4