ஆதியாகமம் 5

Genesis 5
அத்தியாயம் 5

ஆதாமின் வம்சவரலாறு

1 நாளா 1:1-4

ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார். எபே 4:24கொலோ 3:10ஆதி 1:26-27எபி 1:31 கொரி 11:7பிரச 12:1பிரச 7:29எபி 12:9 அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார். மத் 19:4மாற் 10:6ஆதி 2:23ஆதி 1:27மல்கி 2:15அப் 17:26ஆதி 2:15 ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். ஆதி 4:251 கொரி 15:39எபே 2:3யோவா 3:6யோபு 14:4யோபு 15:14-16யோபு 25:4லூக் 1:35 ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 1 நாளாக 1:1-3லூக் 3:36-38ஆதி 5:10ஆதி 5:13ஆதி 5:19ஆதி 5:22ஆதி 5:26ஆதி 5:30 ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான். ஆதி 5:11ஆதி 5:82 சாமு 14:14ஆதி 3:191 கொரி 15:21-22பிரச 12:5பிரச 12:7பிரச 9:5

சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான். ஆதி 4:26 சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான். ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். லூக் 3:371 நாளாக 1:2 ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான். கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் 1 பெற்றெடுத்தான். லூக் 3:37 கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான். மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான். 1 நாளாக 1:2 மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான். யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான். யூதா 1:14-151 நாளாக 1:3ஆதி 4:17லூக் 3:37 யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான். ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான். லூக் 3:37 ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். 1 தெச 2:12ஆதி 17:1ஆதி 6:9லூக் 1:6மல்கி 2:61 யோவா 1:7மீகா 6:8சங் 116:9 ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள். ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். எபி 11:5-61 யோவா 1:7ஆதி 5:22லூக் 23:432இராஜா 2:11ஆதி 42:36ஆதி 37:30எரே 31:15 மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான். ஆதி 4:18 மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான். லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து, “யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். மத் 24:372 பேது 2:5எபி 11:7எசேக் 14:14எசேக் 14:20ஆதி 9:24ஏசா 54:91 பேது 3:20 லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.

நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான். ஆதி 10:21ஆதி 6:101 நாளாக 1:4-28ஆதி 10:1ஆதி 10:32ஆதி 7:13ஆதி 9:18-19ஆதி 9:22-27