யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் மகனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் மகனாகிய ஓசியாவிற்கு கிடைத்த யெகோவாவுடைய வசனம். ரோம 9:25ஏசா 1:1மீகா 1:1ஆமோ 1:12 நாளாக 26:1-232 பேது 1:212இராஜா 16:1-202இராஜா 18:1-37
ஓசியாவின் மனைவியும் பிள்ளைகளும்
யெகோவா ஓசியாவைக்கொண்டு சொல்லத் தொடங்கினபோது, யெகோவா ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு விபச்சாரியையும் அவளுடைய பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் யெகோவாவைவிட்டு விலகி கெட்டுப்போனது என்றார். ஓசி 2:4-5ஓசி 3:1உபா 31:16சங் 106:392 பேது 2:14யாத் 34:15-16எசேக் 23:1-49எசேக் 6:9 அவன் போய், திப்லாயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பமடைந்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். ஏசா 8:1-3 அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் 1 என்னும் பெயரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் யெகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவேன். 2இராஜா 10:7-82இராஜா 10:10-11எசேக் 23:10எரே 3:81 நாளாக 5:25-262இராஜா 10:172இராஜா 10:29-312இராஜா 15:10-12 அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார். நியாயாதி 6:33யோசு 17:16எரே 51:56சங் 37:152இராஜா 15:29ஓசி 2:18எரே 49:34-35சங் 46:9 அவள் மறுபடியும் கர்ப்பமடைந்து, ஒரு மகளைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பெயரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். 1 பேது 2:10ஓசி 2:232இராஜா 17:6ஓசி 2:4ஏசா 27:112இராஜா 17:23-41ஓசி 9:15-17 யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கம் செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், போரினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரர்களினாலும் நான் அவர்களை காப்பாற்றாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை காப்பாற்றுவேன் என்றார். சகரி 4:6ஏசா 12:22இராஜா 19:35சங் 44:3-6ஓசி 11:12ஏசா 7:14சகரி 2:6-11எரே 23:5-6 அவள் லோருகாமாவை 2 பால்மறக்கச்செய்தபிறகு, கர்ப்பமடைந்து ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ 3 என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை. எரே 15:1 என்றாலும், இஸ்ரவேல் மக்களின் தொகையை அளக்கவும் எண்ணமுடியாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் மக்களல்ல என்று அவர்களுக்குச் சொல்லுவதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். 2 கொரி 6:18கலா 4:6-7யோவா 1:12ரோம 9:25-281 பேது 2:9-101 யோவா 3:1-2ரோம 8:14-17ஏசா 43:6 அப்பொழுது யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் ஒன்றாகக் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு 4 வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாக இருக்கும். ஓசி 3:5ஏசா 11:12-13எரே 50:4-5எசேக் 37:16-25எரே 23:5-8எரே 31:33எரே 3:18-19மீகா 2:12-13