ஓசியா 8

Hosea 8
அத்தியாயம் 8

பயனில்லாத அறுவடை

உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான். ஓசி 6:7உபா 28:49எரே 4:13ஓசி 5:8ஆப 1:8எபி 8:8-131 கொரி 15:522இராஜா 18:27 எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர்கள் கூப்பிடுவார்கள். மத் 7:21தீத் 1:161 யோவா 2:42இராஜா 10:162இராஜா 10:29ஓசி 7:13-14ஏசா 48:1-2எரே 7:4 ஆனாலும் இஸ்ரவேலர்கள் நன்மையை வெறுத்தார்கள்; எதிரி அவர்களைத் தொடருவான். புலம் 3:66சங் 81:10-11ஆமோ 1:111 தீமோ 5:12உபா 28:25புலம் 4:19லேவி 26:36சங் 36:3 அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு சிலைகளைச் செய்தார்கள். ஓசி 13:9-102இராஜா 15:10-301 இராஜா 12:16-201 இராஜா 16:31ஓசி 13:2ஓசி 2:8யோவா 10:141 இராஜா 12:28 சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தமடையாமல் இருப்பார்கள்? ஓசி 10:5எரே 13:27நீதி 1:222இராஜா 17:16-182இராஜா 17:21-23அப் 7:41உபா 32:22ஓசி 8:6 அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; கொல்லன் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாகப்போகும். ஆப 2:18ஏசா 44:9-20எரே 10:14எரே 10:3-9சங் 106:19-20சங் 115:4-82 நாளாக 31:12 நாளாக 34:6-7 அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர்கள் அதை விழுங்குவார்கள். நீதி 22:8யோபு 4:8கலா 6:7நாகூ 1:3ஓசி 10:12-13ஓசி 7:9நியாயாதி 6:3-6ஓசி 2:9 இஸ்ரவேலர்கள் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி அந்நிய மக்களுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள். எரே 22:28எரே 51:342 தீமோ 2:20-212இராஜா 17:1-62இராஜா 18:11உபா 28:25உபா 28:64எசேக் 36:3 அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியர்களிடம் போனார்கள்; எப்பிராயீமர்கள் நேசரைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள். எரே 2:24எசேக் 16:33-34ஓசி 5:13ஓசி 7:112இராஜா 15:19ஏசா 30:6எசேக் 23:5-9ஓசி 12:1 அவர்கள் அன்னியமக்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்திற்குள்ளே அகப்படுவார்கள். எசேக் 16:37எசேக் 26:7எசேக் 23:22-26ஆகா 2:6ஓசி 10:10ஏசா 10:8எரே 42:21 நாளாக 5:26 எப்பிராயீம் பாவம் செய்வதற்கேதுவாக பலிபீடங்களைப் பெருகச்செய்தார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவம்செய்வதற்கு ஏதுவாகும். ஓசி 12:11உபா 4:28ஏசா 10:10-11ஓசி 10:1-2ஓசி 10:8எரே 16:13 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள். உபா 4:6-8ரோம 7:122இராஜா 17:15-16எசேக் 20:11ஓசி 4:6ஏசா 30:9எரே 6:16-17நெகே 9:13-14 எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டு சாப்பிடுகிறார்கள்; யெகோவா அவர்கள்மேல் பிரியமாக இருக்கமாட்டார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்களுடைய பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்திற்குத் திரும்பிப்போவார்கள். ஓசி 9:6ஓசி 9:9ஆமோ 5:22ஆமோ 8:7உபா 28:68யாத் 20:3ஓசி 11:5ஓசி 5:6 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கின தேவனை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா பாதுகாப்பான பட்டணங்களைப் பெருகச்செய்கிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரச்செய்வேன்; அது அவைகளின் கோவில்களைச் சுட்டெரிக்கும். உபா 32:18எரே 17:27ஆமோ 2:5ஓசி 13:6ஏசா 17:10ஆமோ 1:10எபே 2:10எரே 2:32