எரேமியா சிறையில் அடைக்கப்படுதல்
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய மகனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யோசியாவின் மகனாகிய சிதேக்கியா வந்து ஆட்சிசெய்தான். எரே 22:242இராஜா 24:172இராஜா 24:121 நாளாக 3:15-162 நாளாக 36:9-10எசேக் 17:12-21எரே 22:28எரே 24:1 யெகோவா எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் மக்களாகிலும் கேட்கவில்லை. 1 தெச 4:82 நாளாக 36:12-162இராஜா 24:19-20நீதி 29:121 இராஜா 14:181 இராஜா 16:72 சாமு 10:22 சாமு 12:25 சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் மகனாகிய யூகாலையும், மாசெயாவின் மகனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்று சொல்லச் சொன்னான். எரே 21:1-21 இராஜா 13:6எரே 2:27எரே 29:25எரே 42:2-4எரே 42:20எரே 52:241 சாமு 12:19 அப்பொழுது எரேமியா மக்களின் நடுவே போக்கும் வரத்துமாக இருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை. எரே 37:15எரே 32:2-3 பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றுகைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள். எசேக் 17:152இராஜா 24:7எரே 34:21எரே 37:11எரே 37:7 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்திற்குத் திரும்பிப்போகும். புலம் 4:172இராஜா 22:18எசேக் 17:17ஏசா 31:1-3எரே 21:2எரே 37:3எசேக் 29:16எசேக் 29:6-7 கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்திற்கு விரோதமாகப் போர்செய்து, அதைப் பிடித்து, நெருப்பினால் சுட்டெரிப்பார்கள். எரே 38:23எரே 39:2-8எரே 32:29எரே 34:21-22 கல்தேயர் நம்மைவிட்டு கண்டிப்பாகப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம் போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை. ஒபதி 1:32 தெச 2:3கலா 6:3கலா 6:7யாக் 1:22எரே 29:8மத் 24:4-5எபே 5:6 உங்களுடன் போர்செய்கிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் தோற்கடித்தாலும், மீந்தவர்கள் எல்லோரும் காயம்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லுங்கள் என்றார். ஏசா 30:17எரே 50:45யோவே 2:11லேவி 26:36-38ஏசா 10:4ஏசா 13:15ஏசா 14:19எரே 21:4-7 பார்வோனின் படை வருகிறதென்று, கல்தேயருடைய படை எருசலேமைவிட்டுப் போனபோது, எரே 37:5 எரேமியா அவ்விடத்தைவிட்டு, மக்களின் நடுவில் விலகிப்போகிறவன் போல, பென்யமீன் தேசத்திற்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான். எரே 1:11 நாளாக 6:601 இராஜா 19:31 இராஜா 19:9எரே 32:8-9யோசு 21:17-18மத் 10:23நெகே 6:11 அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்காரர்களின் அதிபதியாகிய யெரியா என்னும் பெயருள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் மகனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்றுசொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான். எரே 38:7சகரி 14:10அப் 24:13அப் 24:5-9அப் 6:11எரே 18:18எரே 20:10எரே 21:9 அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான். எரே 40:4-6மத் 5:11-12சங் 27:12சங் 52:1-21 பேது 3:161 பேது 4:14-16லூக் 6:22-23லூக் 6:26 அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள். எரே 38:262 நாளாக 16:102 நாளாக 18:26அப் 5:18ஆதி 39:20எரே 20:1-3எரே 26:16மத் 21:35 அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் நுழைந்து, அங்கே அநேக நாட்கள் இருந்தான். எரே 38:6எரே 38:10-13ஆதி 40:15புலம் 3:53புலம் 3:55 பின்பு சிதேக்கியா ராஜா அவனை வரவழைத்து: யெகோவாவால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டில் இரகசியமாகக் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான். எரே 21:71 இராஜா 14:1-41 இராஜா 22:16எசேக் 12:12-13எரே 21:1-2எரே 24:8எரே 37:3எரே 38:14-16 பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டில் அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த மக்களுக்கும் விரோதமாக என்ன குற்றம்செய்தேன்? அப் 25:8யோவா 10:32அப் 25:11அப் 25:25தானி 6:221 சாமு 24:9-151 சாமு 26:18-21அப் 23:1 பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்திற்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே? எரே 2:28எரே 28:10-172இராஜா 3:13எரே 14:13-15எரே 23:17எரே 27:14-18எரே 28:1-5எரே 29:31 இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குக் காதுகொடுத்து, என் விண்ணப்பத்திற்குத் தயைசெய்து, என்னைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான். எரே 36:7அப் 23:16-22அப் 25:10-11அப் 28:18-19எரே 26:15எரே 38:26எரே 38:6-9 அப்பொழுது எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்தில் காக்கவும், நகரத்தில் அப்பம் இருக்குவரை அப்பம் சுடுகிறவர்களின் வீதியில் தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான். எரே 38:13எரே 38:28எரே 32:2எரே 38:9எரே 52:62இராஜா 25:3ஏசா 33:16யோபு 5:20