யோபுவின் வார்த்தைகள்
அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக:
“தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்; மத் 19:26மாற் 10:27ஆதி 18:14எபி 4:12-13எரே 32:17ஏசா 46:10எபே 1:11நீதி 19:21
நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? யோபு 38:2சங் 131:1சங் 139:6சங் 40:5நீதி 30:2-4
ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும்,
என் புத்திக்கு எட்டாததையும்,
நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன்.
நீர் நான் சொல்வதைக் கேளும், யோபு 40:7யோபு 38:3ஆதி 18:30-32ஆதி 18:27
அப்பொழுது நான் பேசுவேன்;
நான் உம்மைக் கேள்வி கேட்பேன்,
நீர் எனக்கு பதில் சொல்லும்.
என் காதால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; எபே 1:17-18ரோம 10:17யோவா 12:45ஏசா 6:1ஏசா 6:5யோவா 12:41யோபு 26:14யோவா 1:18
இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
ஆகையால் நான் என்னை வெறுத்து, எஸ்றா 9:61 தீமோ 1:13-16யாக் 4:7-10யோபு 40:3-4தானி 9:3யோபு 30:191 கொரி 15:8-9எஸ்த 4:1-3
தூளிலும் சாம்பலிலும் இருந்து மனவேதனைப்படுகிறேன்” என்றான்.
முடிவுரை
யெகோவா இந்த வார்த்தைகளை யோபுடன் பேசினபின், யெகோவா தேமானியனான எலிப்பாசை நோக்கி: “உன்மேலும் உன் இரண்டு நண்பர்கள்மேலும் எனக்குக் கோபம் வருகிறது; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை. யோபு 11:5-6யோபு 32:2-3யோபு 32:5யோபு 2:11யோபு 4:1சங் 51:4யோபு 8:1யோபு 11:1 ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவனுடைய முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்திற்கு ஏற்றவிதத்தில் நடத்தாதிருப்பேன்; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை” என்றார். எண் 23:1யாக் 5:161 நாளாக 15:26ஆதி 20:17யோபு 22:30சங் 103:10எசேக் 14:142 நாளாக 29:21 அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும்போய், யெகோவா தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது யெகோவா யோபின் முகத்தைப் பார்த்தார். எபி 11:8அப் 9:6பிரச 9:7மத் 7:24நீதி 3:11-12அப் 10:33ஏசா 60:14யோவா 2:5 யோபு தன் நண்பனுக்காக வேண்டுதல் செய்தபோது, யெகோவா அவனுடைய சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைவிட இரண்டுமடங்காகக் யெகோவா அவனுக்குத் தந்தருளினார். உபா 30:3யோபு 8:6-7நீதி 22:4ஏசா 40:2ஏசா 61:7சங் 14:7சங் 126:1அப் 7:50 அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன்பு அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனுடன் உணவருந்தி, யெகோவா அவன்மேல் வரச்செய்த எல்லா பாதிப்பினால் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள். யோபு 19:13-14யோபு 2:11ஆதி 24:22நீதி 16:7எபி 12:12ரோம 12:151 கொரி 12:261 சாமு 10:27 யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு இருந்தது. யோபு 8:7பிரச 7:8நீதி 10:22ஆதி 24:35சங் 144:13-15ஆதி 26:12-14யோபு 1:31 தீமோ 6:17 ஏழு மகன்களும் மூன்று மகள்களும் அவனுக்குப் பிறந்தார்கள். யோபு 1:2ஏசா 49:20சங் 107:41சங் 127:3 மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பெயரிட்டான். தேசத்தில் எங்கும் யோபின் மகள்களைப்போல அழகான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தான். எண் 27:7சங் 144:12அப் 7:20யோசு 18:4யோசு 15:18-19 இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிருடன் இருந்து, நான்கு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். நீதி 17:6ஆதி 50:23சங் 128:6ஆதி 25:7ஆதி 47:28ஆதி 50:26யோசு 24:29ஆதி 11:32 யோபு அதிக நாட்கள் இருந்து, பூரண வயதுள்ளவனாய் இறந்தான். ஆதி 25:8ஆதி 15:15யோபு 5:26உபா 6:2சங் 91:16நீதி 3:16