யோவான் 16

John 16
அத்தியாயம் 16

நீங்கள் இடறல் அடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 1 பேது 2:8மத் 13:21மத் 26:31-33யோவா 15:18-27மத் 24:10யோவா 16:4ரோம 14:21மத் 11:6 அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்கு புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்கு ஊழியம் செய்கிறவன் என்று நினைக்கும் காலம் வரும். யோவா 9:22அப் 26:9-11ரோம 10:2-3அப் 22:3-4மத் 10:28யோவா 12:42வெளி 6:9அப் 22:19-23 அவர்கள் பிதாவையும், என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். யோவா 15:21யோவா 17:252 தெச 1:82 தெச 2:10-12யோவா 8:19யோவா 8:551 யோவா 3:1யோவா 17:3 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேன் என்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்; நான் உங்களோடு இருந்ததினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை. யோவா 14:29மாற் 13:23யோவா 13:19யோவா 17:12-13மத் 9:15அப் 9:16மத் 24:252 பேது 1:14

பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்

இப்பொழுது நான் என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீர் என்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. யோவா 13:36யோவா 7:33யோவா 16:28எபே 4:7-11எபி 1:3யோவா 14:4-6யோவா 16:10யோவா 17:4 ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. யோவா 16:20-22யோவா 20:11-15லூக் 22:45லூக் 24:17யோவா 14:1யோவா 14:27-28 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவா 14:26யோவா 14:16-17யோவா 15:26அப் 2:33அப் 1:4-5யோவா 7:39லூக் 24:49ரோம 8:28 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யூதா 1:15அப் 2:37சகரி 12:10அப் 16:29-301 கொரி 14:24யோவா 8:9யோவா 8:46 அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும், யோவா 15:22-25யோவா 12:47-48யோவா 8:23-24எபி 3:12மாற் 16:16அப் 2:22-38யோவா 8:42-47அப் 3:14-19 நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 2 கொரி 5:211 பேது 3:18ரோம 10:3-41 கொரி 1:301 தீமோ 3:16அப் 3:14எரே 23:5-6பிலி 3:7-9 இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். யோவா 12:311 யோவா 3:8கொலோ 2:15எபி 2:142 கொரி 4:4யோவா 14:30ஏசா 49:24-26வெளி 12:7-10 இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாக இருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். மாற் 4:33யோவா 15:151 கொரி 3:1-2அப் 1:3எபி 5:11-14யோவா 14:30 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார். யோவா 14:261 கொரி 2:10-13யோவா 14:17யோவா 15:261 யோவா 2:271 யோவா 2:20அப் 2:17-18யோவா 12:49 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 1 யோவா 4:13-142 கொரி 3:14-18யோவா 15:26வெளி 19:101 கொரி 12:31 பேது 1:10-121 கொரி 2:8-101 யோவா 3:23 பிதாவினுடையவைகள் அனைத்தும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்குத் தெரிவிப்பார் என்றேன். யோவா 17:10மத் 11:27யோவா 3:35லூக் 10:22கொலோ 1:19மத் 28:18யோவா 10:29-30யோவா 13:3 நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மீண்டும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். யோவா 7:33அப் 1:3அப் 10:40-41யோவா 14:18-24யோவா 16:22யோவா 16:28எபி 12:2யோவா 13:3

துக்கம் சந்தோஷமாக மாறும்

அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதும் அல்லாமல்: யோவா 16:16யோவா 16:5மாற் 9:32யோவா 14:5யோவா 16:19யோவா 12:16லூக் 18:34மாற் 9:10 கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது என்ன என்று நமக்குப் புரியவில்லையே என்றார்கள். லூக் 24:25எபி 5:12மத் 16:9-11 அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களைப் பார்த்து: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ? யோவா 14:19யோவா 16:16யோவா 16:30எபி 4:13யோவா 13:33யோவா 2:24-25யோவா 7:33யோவா 21:17 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறும். யாக் 1:2மத் 5:4சங் 126:5-6வெளி 7:14-17மாற் 16:101 பேது 1:6-82 கொரி 6:10எரே 31:25 பெண்ணானவளுக்குப் பிரசவநேரம் வரும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால் பின்பு உபத்திரவத்தை நினைக்கமாட்டாள். ஏசா 13:8சங் 113:91 தெச 5:3எரே 30:6-7ஓசி 13:13-14ஏசா 26:16-18மீகா 4:10வெளி 12:2-5 அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்து இருக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்களுடைய இருதயம் சந்தோஷப்படும், உங்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துப்போடுவதில்லை. 1 பேது 1:8அப் 13:52யோவா 16:62 தெச 2:161 பேது 4:13-14அப் 16:25ஏசா 25:9சங் 146:2 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். யோவா 15:7யோவா 14:13-14மத் 21:221 யோவா 5:14-16ஏசா 65:24மத் 7:7யோவா 16:26யோவா 14:20 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள். மத் 7:7-8யாக் 4:2-3யோவா 15:112 தெச 2:16-17யோவா 16:231 யோவா 1:3-42 யோவா 1:12எபே 1:16-17 இவைகளை நான் உவமைகளாக உங்களோடு பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாக உங்களோடு பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். யோவா 16:12யோவா 10:6யோவா 16:28-29மத் 13:34-35மாற் 4:13மத் 13:10-11சங் 49:4சங் 78:2 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே கேட்டுக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேன் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ரோம 8:34யோவா 17:19யோவா 17:24யோவா 17:9யோவா 14:16யோவா 16:23 நீங்கள் என்னை நேசித்தத்தினால், நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களை நேசிக்கிறார். யோவா 14:21யோவா 14:23யோவா 17:23யோவா 8:421 யோவா 4:191 கொரி 16:221 பேது 1:82 கொரி 5:14 நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். யோவா 13:1யோவா 13:3யோவா 8:14யோவா 14:28யோவா 16:5யோவா 17:5அப் 1:9-11யோவா 16:16 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: இதோ, இப்பொழுது நீர் உவமையாகப் பேசாமல், வெளிப்படையாக பேசுகிறீர். யோவா 16:25 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை கேள்வி கேட்க தேவை இல்லை என்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்று விசுவாசிக்கிறோம் என்றார்கள். யோவா 21:17யோவா 17:8எபி 4:13யோவா 16:17யோவா 16:27-28யோவா 5:20 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். லூக் 9:44-45யோவா 13:38 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்திற்குப்போய், என்னைத் தனியே விட்டு விடும் காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனிமையாக இருக்கமாட்டேன், பிதா என்னோடு இருக்கிறார். சகரி 13:7மத் 26:31யோவா 8:29மாற் 14:27யோவா 8:16மத் 26:56ஏசா 50:6-9மாற் 14:50 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார். யோவா 14:271 யோவா 5:42 தெச 3:161 யோவா 4:4பிலி 4:7யோவா 14:11 பேது 5:92 தீமோ 3:12