பெதஸ்தா குளத்தில் சுகமாக்குதல்
இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். உபா 16:16யாத் 23:14-17லேவி 23:2-4யாத் 34:23யோவா 2:13கலா 4:4மத் 3:15 எபிரெய மொழியிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு. நெகே 12:39நெகே 3:1ஏசா 22:11நெகே 3:32அப் 21:40ஏசா 22:9யோவா 19:13யோவா 19:17 அவைகளிலே குருடர்கள், முடவர்கள், வாதநோய் உள்ளவர்கள் முதலான வியாதி உள்ளவர்கள் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். மாற் 3:1-4லூக் 7:22மத் 15:30சகரி 11:17புலம் 3:26யாக் 5:71 இராஜா 13:4நீதி 8:34 ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான். முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். அப் 3:2லூக் 8:43மாற் 9:21அப் 14:8லூக் 13:16அப் 9:33யோவா 5:14யோவா 9:1 படுத்திருந்த அவனை இயேசு பார்த்து, அவன் அநேக நாளாக வியாதி உள்ளவன் என்று அறிந்து, அவனைப் பார்த்து: சுகமாகவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார். லூக் 18:41எபி 4:15எபி 4:13ஏசா 65:1யோவா 21:17சங் 142:3எரே 13:27 அதற்கு வியாதியுள்ளவன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குமுன் வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான். சங் 72:121 கொரி 9:24உபா 32:36சங் 142:42 கொரி 1:8-10ரோம 5:6யோவா 5:3 இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். லூக் 5:24மத் 9:6மாற் 2:11அப் 9:34 உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. அப் 3:7-8யோவா 9:14மாற் 3:2-4லூக் 13:10-16மத் 12:10-13மாற் 1:31மாற் 1:42மாற் 10:52 ஆதலால் யூதர்கள் சுகமாக்கப்பட்டவனைப் பார்த்து: இது ஓய்வுநாளாக இருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். எரே 17:21யோவா 9:16லூக் 6:2லூக் 13:14மாற் 3:4மாற் 2:24நெகே 13:15-21யோவா 5:16 அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான். மாற் 2:9-11யோவா 9:16 அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உன்னுடனே சொன்ன மனிதன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். மத் 21:23நியாயாதி 6:29ரோம 10:21 சாமு 14:38 சுகமாக்கப்பட்டவனுக்கு அவர் யார் என்று தெரியவில்லை; அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். லூக் 24:31லூக் 4:30யோவா 14:9யோவா 8:59 அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார். யோவா 8:11லேவி 26:23-24சங் 118:18மத் 12:45நெகே 9:28சங் 107:20-22வெளி 2:21-23ஏசா 38:20 அந்த மனிதன்போய், தன்னைச் சுகமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். யோவா 4:29யோவா 9:11-12யோவா 9:25மாற் 1:45யோவா 1:19யோவா 5:12யோவா 9:15யோவா 9:30
குமாரன் மூலமாக நித்தியஜீவன்
இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்திக் கொலைசெய்ய வகைதேடினார்கள். அப் 9:4-5யோவா 10:39யோவா 15:20யோவா 5:13யோவா 7:19-20யோவா 7:25லூக் 6:11மத் 12:13 இயேசு அவர்களைப் பார்த்து: என் பிதா இதுவரைக்கும் செயல்களைச் செய்துவருகிறார், நானும் செயல்களைச் செய்துவருகிறேன் என்றார். யோவா 14:10யோவா 9:41 கொரி 12:6கொலோ 1:16எபி 1:3ஆதி 2:1-2ஏசா 40:26அப் 14:17 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதும் அல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றும் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாக வகைதேடினார்கள். யோவா 10:30யோவா 10:33யோவா 19:7யோவா 8:58யோவா 14:23யோவா 5:23யோவா 7:1யோவா 7:19 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் பார்க்கிறது எதுவோ, அதையே அன்றி, வேறு ஒன்றையும் தாமாக செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். யோவா 12:49யோவா 8:28யோவா 14:10யோவா 10:18யோவா 5:28-30ரோம 8:11யோவா 14:16-23லூக் 21:15 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாக இருந்து, தாம் செய்கிறவைகளை எல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைவிட பெரிதான செயல்களையும் அவருக்குக் காண்பிப்பார். யோவா 3:35மத் 3:17நீதி 8:22-312 பேது 1:17யோவா 15:15யோவா 17:26யோவா 1:18யோவா 10:32 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்கு விருப்பமானவர்களை உயிர்ப்பிக்கிறார். ரோம 8:11உபா 32:39யோவா 11:25அப் 26:8லூக் 7:14-15யோவா 17:2யோவா 11:43-44லூக் 8:54-55 அன்றியும் பிதாவைக் மதிப்பதுபோல எல்லோரும் குமாரனையும் மதிக்கும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவரையும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். யோவா 5:27அப் 17:312 கொரி 5:10மத் 28:18அப் 10:42யோவா 9:392 தீமோ 4:1ரோம 2:16 குமாரனைக் மதிக்காதவன் அவரை அனுப்பின பிதாவையும் மதிக்காதவனாக இருக்கிறான். 1 யோவா 2:23லூக் 10:162 யோவா 1:9மத் 11:27யோவா 15:23-24எரே 17:5-7லூக் 12:8-91 தெச 3:11-13 என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவா 3:36யோவா 6:401 யோவா 5:11-13யோவா 3:18ரோம 8:1யோவா 11:26யோவா 6:47யோவா 10:27-30 மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவா 5:28எபே 5:14எபே 2:5யோவா 4:23கொலோ 2:13யோவா 8:47வெளி 3:1ரோம 6:4 ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார். யோவா 1:4யோவா 11:26யாத் 3:14யோவா 14:6யோவா 17:2-31 கொரி 15:451 தீமோ 1:17எரே 10:10 அவர் மனிதகுமாரனாக இருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். அப் 10:42அப் 17:31யோவா 5:221 கொரி 15:251 பேது 3:22தானி 7:13-14எபே 1:20-23எபி 2:7-9 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; வெளி 20:121 தெச 4:14-17ஏசா 26:19யோவா 11:24-251 கொரி 15:42-54யோபு 19:25-261 கொரி 15:22யோவா 6:39-40 அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். தானி 12:2-3ரோம 2:6-10அப் 24:15லூக் 14:14மத் 25:31-46கலா 6:8-101 தீமோ 6:18எபி 13:16 நான் தானாக ஒன்றும் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்கு விருப்பமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவிற்கு விருப்பமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாக இருக்கிறது. யோவா 6:38யோவா 5:19யோவா 4:34யோவா 14:10மத் 26:39யோவா 8:28சங் 40:7-8யோவா 8:15-16
இயேசுவைக்குறித்த சாட்சிகள்
என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி உண்மையாக இருக்காது. நீதி 27:2யோவா 8:54யோவா 8:13-14வெளி 3:14 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி உண்மையான சாட்சி என்று அறிந்திருக்கிறேன். 1 யோவா 5:6-9யோவா 1:33யோவா 12:28-30யோவா 12:50யோவா 5:36-37யோவா 8:17-18மத் 17:5மத் 3:17 நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தான். யோவா 1:15-27யோவா 1:29-34யோவா 1:6-8யோவா 3:26-36 நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனிதர்களுடைய சாட்சி இல்லை, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். 1 யோவா 5:91 தீமோ 4:16யோவா 20:31லூக் 19:41-421 கொரி 9:221 தீமோ 2:3-4யோவா 5:41ரோம 10:1 அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்; நீங்களும் சிலநேரம் அவன் வெளிச்சத்திலே மகிழ்ச்சியாக இருக்க விருப்பமாக இருந்தீர்கள். 2 பேது 1:19யோவா 1:7-8மத் 11:11லூக் 1:76-77மத் 3:5-7யோவா 6:66லூக் 1:15-17லூக் 7:28 யோவானுடைய சாட்சியைவிட மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அது என்னவென்றால், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான செயல்களே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. யோவா 10:25யோவா 10:37-38யோவா 15:24யோவா 2:231 யோவா 5:9யோவா 9:30-33யோவா 3:21 யோவா 5:11-12 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருபோதும் அவர் சத்தத்தைக் கேட்டதும் இல்லை, அவர் உருவத்தைப் பார்த்ததும் இல்லை. யோவா 8:18யோவா 1:18மத் 3:171 தீமோ 1:171 யோவா 4:121 யோவா 4:201 தீமோ 6:161 யோவா 1:1-2 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிக்காதபடியால் அவருடைய வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதும் இல்லை. 1 யோவா 2:14உபா 6:6-9யோவா 12:44-48ஏசா 53:1-3யாக் 1:21-22நீதி 7:1-2ஏசா 49:7யோவா 1:11 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. லூக் 24:27லூக் 24:442 பேது 1:19-21அப் 26:22-23நீதி 8:33-34மத் 22:291 பேது 1:10-112 தீமோ 3:14-17 அப்படி இருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. யோவா 3:19யோவா 1:11யோவா 6:37சங் 81:111 யோவா 5:11-13ஏசா 49:7ஏசா 50:2யோவா 6:40 நான் மனிதர்களால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதும் இல்லை. யோவா 7:18யோவா 8:501 தெச 2:6யோவா 5:34யோவா 5:44யோவா 8:541 பேது 2:21யோவா 6:15 உங்களில் தேவஅன்பு இல்லை என்று உங்களை அறிந்திருக்கிறேன். 1 யோவா 4:201 யோவா 2:151 யோவா 3:17யோவா 2:25ரோம 8:7யோவா 8:47எபி 4:12-13யோவா 1:47-49 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சொந்த பெயரினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள். மத் 24:5யோவா 10:25யோவா 17:4-6எபி 5:4-5யோவா 8:28-29யோவா 6:38மத் 24:24யோவா 12:28 தேவனாலேமட்டும் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவருக்கு ஒருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? யோவா 12:43ரோம 2:29பிலி 2:3மத் 23:5ரோம 8:7-81 பேது 1:71 சாமு 2:30ரோம 2:10 பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினைக்காதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். கலா 3:10ரோம 3:19-202 கொரி 3:7-11ரோம 2:12யோவா 9:28-29ரோம 10:5-10யோவா 7:19மத் 19:7-8 நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. உபா 18:15உபா 18:18-19யோவா 1:45லூக் 24:27எண் 24:17-18அப் 26:22ஆதி 49:10ஆதி 22:18 அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார். லூக் 16:31லூக் 16:29