இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். மத் 12:9-14லூக் 6:6-11மாற் 1:211 இராஜா 13:4யோவா 5:3 அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சங் 37:32லூக் 14:1லூக் 6:7லூக் 20:20தானி 6:4லூக் 11:53-54ஏசா 29:20-21எரே 20:10 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி; பிலி 1:28-301 கொரி 15:581 பேது 4:1தானி 6:10கலா 6:9ஏசா 42:4யோவா 9:4லூக் 6:8 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள். லூக் 6:9மத் 12:10-12லூக் 14:1-5ஓசி 6:6லூக் 13:13-17மாற் 2:27-28மாற் 9:34 அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது. லூக் 6:10எபே 4:181 இராஜா 13:6ரோம 11:25மத் 12:13மத் 13:14-15ரோம 11:7-102 கொரி 3:14 உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள். மத் 22:16மாற் 12:13மத் 12:14யோவா 11:53லூக் 20:19-20லூக் 6:11மாற் 8:15சங் 109:3-4
மக்கள்கூட்டம் இயேசுவைப் பின்தொடருதல்
இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார். லூக் 6:17மத் 4:25மத் 12:15யோவா 11:53-54யோசு 20:7லூக் 23:5லூக் 6:12மத் 10:23 கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள். எசேக் 35:15எசேக் 36:5ஏசா 34:5மத் 11:21எசேக் 26:1-21ஏசா 23:1-18யோசு 13:8-14யோசு 19:28-29 அவர் அநேகரைச் சுகமாக்கினார். நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள். யோவா 6:15மாற் 5:30 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக, தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று, தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். மத் 14:36மாற் 6:56அப் 19:11-12மத் 4:23அப் 5:15லூக் 7:2ஆதி 12:17எபி 12:6 அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. லூக் 4:41லூக் 8:28மாற் 1:23-24யாக் 2:19மத் 4:3மத் 8:29அப் 16:17மத் 4:6 தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். மத் 12:16மாற் 1:25மாற் 1:34மத் 8:4அப் 16:18
பன்னிரண்டு அப்போஸ்தலர்களை நியமித்தல்
பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள். லூக் 6:12-16லூக் 9:1மத் 10:1-4மத் 5:1மாற் 6:7 அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும், அப் 1:8யோவா 15:16லூக் 9:1-6அப் 1:24-25கலா 1:1லூக் 10:1-11கலா 1:15-20லூக் 24:47 வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார். யோவா 1:42அப் 1:131 கொரி 1:121 கொரி 3:221 கொரி 9:52 பேது 1:1கலா 2:7-9மத் 10:2-4 செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், எபி 4:12எரே 23:29மாற் 14:33மாற் 5:37அப் 12:1ஏசா 58:1யோவா 21:2யோவா 21:20-25 அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அப் 1:13மாற் 2:14யாக் 1:1மத் 9:91 கொரி 15:71 கொரி 9:5அப் 15:13அப் 21:18 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. அப் 1:16-25யோவா 12:4-6யோவா 13:2யோவா 13:26-30யோவா 6:64யோவா 6:71மத் 26:14-16மத் 26:47
இயேசுவும் பெயெல்செபூலும்
பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது. மாற் 6:31யோவா 4:31-34லூக் 6:17மாற் 3:7மாற் 3:9மாற் 7:17மாற் 9:28 அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். அப் 26:24யோவா 10:20யோவா 7:3-10மாற் 3:312 கொரி 5:132இராஜா 9:11ஓசி 9:7எரே 29:26 எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். மத் 10:25மத் 15:1மத் 12:24மத் 9:34யோவா 7:20யோவா 8:48யோவா 8:52லூக் 11:15 அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? லூக் 11:17-23மத் 12:25-30மத் 13:34மத் 4:10மாற் 4:2சங் 49:4 ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே. சகரி 11:141 கொரி 1:10-132 சாமு 20:12 சாமு 20:6எசேக் 37:22ஏசா 19:2-31 இராஜா 12:16-20எபே 4:3-6 ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே. யாக் 3:16கலா 5:15சங் 133:1ஆதி 37:4ஆதி 13:7-8 சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே. பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும். ஏசா 49:24-26மத் 12:29லூக் 11:21-23எபே 6:10-13வெளி 20:1-31 யோவா 4:4ஏசா 53:12ஏசா 27:1 உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; லூக் 12:10மத் 12:31-321 யோவா 5:16மாற் 3:28-30எபி 6:4-8எபி 10:26-31 ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். லூக் 12:10மத் 12:31-322 தெச 1:9மத் 25:46யூதா 1:13மாற் 12:40யூதா 1:7 இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார். யோவா 10:20மாற் 3:22
இயேசுவின் தாயாரும் சகோதரர்களும்
அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். லூக் 8:19-21மத் 12:46-50 அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி; உபா 33:9மாற் 3:21மாற் 6:32 கொரி 5:16யோவா 2:4யோவா 7:3-5லூக் 2:49 தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! மத் 12:49-50லூக் 11:27-28ரோம 8:29மத் 25:40-45எபி 2:11-12யோவா 20:17மத் 28:10சங் 22:22 தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார். 1 யோவா 2:17மத் 7:211 யோவா 3:22-23யோவா 7:17யாக் 1:25