வடதிசை இராஜாக்கள் முறியடிக்கப்படுதல்
ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடமும், சிம்ரோனின் ராஜாவிடமும், அக்சாபின் ராஜாவிடமும், யோசு 11:10ஏசா 43:5-7நியாயாதி 4:2யோசு 10:3-4சங் 2:1-4ஏசா 26:11ஏசா 43:2நியாயாதி 4:17 வடக்கே இருக்கிற மலைகளிலும் கின்னரேத்திற்குத் தெற்கே இருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடமும், நியாயாதி 1:27யோசு 12:3யோசு 17:11எண் 34:111 இராஜா 4:11யோசு 12:23யோசு 10:40யோசு 10:6 கிழக்கேயும், மேற்கேயும் இருக்கிற கானானியர்களிடமும், மலைகளில் இருக்கிற எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்களிடமும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா தேசத்தில் இருக்கிற ஏவியர்களிடமும் ஆள் அனுப்பினான். நியாயாதி 3:3ஆதி 31:49யோசு 18:26யோசு 13:11யோசு 15:631 இராஜா 15:221 இராஜா 9:201 சாமு 10:17 அவர்கள் கடற்கரை மணலைப்போல ஏராளமான மக்களாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள். நியாயாதி 7:121 சாமு 13:5ஆதி 22:17ஆதி 32:121 இராஜா 4:202 சாமு 17:11 இந்த ராஜாக்கள் எல்லோரும் கூடி, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்ய வந்து, மேரோம் என்கிற ஏரியின் அருகில் ஏகமாக முகாமிட்டார்கள். ஏசா 8:9சங் 118:10-12சங் 3:1வெளி 16:14 அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; நாளை இந்த நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டப்பட்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாய் என்றார். யோசு 10:82 சாமு 8:41 சாமு 11:9நியாயாதி 20:28யோசு 11:92 நாளாக 20:16ஓசி 14:3ஏசா 30:16 யோசுவாவும், அவனோடு யுத்த மக்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியின் அருகே இருக்கிற எதிரிகளிடம் வந்து, அவர்களைத் தாக்கினார்கள். யோசு 10:91 தெச 5:2-3 யெகோவா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்து, பெரிய சீதோன்வரைக்கும் மிஸ்ரபோத்மாயீம்வரைக்கும், கிழக்கே இருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குவரைக்கும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியில்லாதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள். யோசு 13:6யோசு 19:28ஆதி 10:15ஆதி 49:13யோசு 11:3யோசு 21:44சகரி 9:2 யோசுவா யெகோவா தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான். யோசு 11:6எசேக் 39:9-10 அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாக இருந்தது. நியாயாதி 4:2யோசு 11:1 அதில் இருந்த உயிரினங்களையெல்லாம் பட்டயத்தினால் வெட்டி, அழித்துப்போட்டான்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான். யோசு 10:40உபா 20:16 அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயத்தினால் வெட்டி, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டான். உபா 20:16-17உபா 7:2எண் 33:50-53யோசு 10:28யோசு 10:30யோசு 10:32யோசு 10:35யோசு 10:37 ஆனாலும் தங்களுடைய மேட்டின்மேல் இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்கள் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான். எரே 30:18 அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருட்களையும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனிதர்களையும் அழித்துப்போடும்வரைக்கும் அவர்களைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை. உபா 20:14உபா 6:10-11யோசு 10:40யோசு 11:11யோசு 8:27எண் 31:11-12எண் 31:9 யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை. யாத் 34:11-13யோசு 1:7அப் 20:20உபா 7:22 நாளாக 30:12உபா 12:32உபா 31:7உபா 4:5 இந்த விதமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவங்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால்காத் வரையுள்ள அந்த முழு தேசமாகிய மலைகளையும், தென்தேசம் எல்லாவற்றையும், கோசேன் தேசத்தையும் சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு, யோசு 10:41யோசு 11:21யோசு 12:8உபா 34:2-3எசேக் 17:23எசேக் 36:1-3எசேக் 36:8ஆதி 15:18-21 அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான். உபா 7:24யோசு 11:3யோசு 13:5உபா 2:1உபா 33:2ஆதி 32:3யோசு 1:4யோசு 12:7-24 யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான். யோசு 11:23யோசு 14:7-10 கிபியோனின் குடிகளாகிய ஏவியர்களைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் மக்களோடு சமாதானம் செய்யவில்லை; மற்ற எல்லாப் பட்டணங்களையும் யுத்தம்செய்து பிடித்தார்கள். யோசு 9:3-27 யுத்தம்செய்ய இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்மேல் இரக்கம் உண்டாகாமல், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டதும் யெகோவாவால் வந்த காரியமாக இருந்தது. ரோம 9:18உபா 20:16-17யாத் 4:21உபா 2:30உபா 7:16யாத் 14:17யாத் 9:16நியாயாதி 14:4 அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் எல்லா மலைகளிலும் இருந்த ஏனாக்கியர்களை அவர்களுடைய பட்டணங்களோடு சேர்த்து அழித்தான். உபா 9:2உபா 1:28யோசு 15:13-14எண் 13:22-23ஆமோ 2:9உபா 2:21நியாயாதி 1:10-11நியாயாதி 1:20 இஸ்ரவேல் மக்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மட்டும் சிலர் மீதியாக இருந்தார்கள். 1 சாமு 17:41 நாளாக 18:1யோசு 15:461 நாளாக 29:4-81 நாளாக 8:131 இராஜா 2:391 சாமு 5:12 நாளாக 26:6 அப்படியே யோசுவா, யெகோவா மோசேயிடம் சொன்னபடியெல்லாம் முழு தேசத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்களின் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சொந்தமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது. யோசு 21:44-45எண் 26:52-55சங் 46:9யாத் 23:27-31யோசு 14:1-152 தீமோ 4:7-8உபா 1:38உபா 11:23-25