எருசலேமின் துன்பம்
ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் 1தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! ஏசா 3:261 இராஜா 4:21எஸ்றா 4:20வெளி 18:16-17ஏசா 54:42இராஜா 23:35ஏசா 22:2புலம் 5:16
விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும்,
அந்த தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே!
இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; சங் 6:6மீகா 7:5எசேக் 23:22-25எரே 13:17எரே 22:20-22எரே 30:14எரே 4:30எரே 9:1
அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது;
அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;
அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள்.
யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் உபா 28:64-67புலம் 2:92 நாளாக 36:20-212இராஜா 24:14-152இராஜா 25:112இராஜா 25:21ஆமோ 9:1-4எசேக் 5:12
சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள்,
இளைப்பாறுதல் அடையமாட்டாள்;
அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும்
அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், எரே 9:11யோவே 1:8-13ஏசா 24:4-6எரே 10:22எரே 14:2புலம் 2:6-7ஏசா 32:9-14எரே 33:10-12
சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது;
அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது;
அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்;
அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்;
அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள், உபா 32:15-27எசேக் 8:17-18எசேக் 9:9எரே 30:14-15எரே 39:9சங் 90:7-82 நாளாக 36:14-16தானி 9:7-16
அவளுடைய பகைவர்கள் செழித்திருக்கிறார்கள்;
அவளுடைய மிகுதியான பாவங்களுக்காக யெகோவா அவளைச் சஞ்சலப்படுத்தினார்;
அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது; எசேக் 24:252இராஜா 19:212 சாமு 4:11-12உபா 28:25உபா 32:30எசேக் 11:22-23எசேக் 24:21எசேக் 7:20-22
அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி,
பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள்.
தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே சங் 79:4உபா 4:34-37சங் 42:4சங் 77:5-9உபா 4:7-8உபா 8:7-9ஓசி 2:7ஏசா 5:1-4
எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்;
அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது,
பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள்.
எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்; ஏசா 59:2-13புலம் 1:20-22எரே 13:22எரே 13:26புலம் 1:11புலம் 1:4-51 இராஜா 8:46-471 இராஜா 9:9
ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்;
அவளைக் கனப்படுத்தியவர்கள் எல்லோரும் அவளை அசட்டை செய்கிறார்கள்;
அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்;
அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; உபா 32:29ஏசா 47:7சங் 25:18பிரச 4:1புலம் 1:172 தெச 2:4-8ஏசா 3:8எரே 13:17-18
தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்;
ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்;
தேற்றுபவர்கள் இல்லை;
யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்;
பகைவன் பெருமைபாராட்டினானே.
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; உபா 23:3எரே 51:51ஏசா 64:10-11புலம் 1:7நெகே 13:1சங் 74:4-8எசேக் 44:7எசேக் 7:22
உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள்
உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.
அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்; எரே 52:6எரே 38:9புலம் 2:121 சாமு 30:11-12உபா 28:52-572இராஜா 6:25எசேக் 4:15-17எசேக் 5:16-17
தங்களுடைய உயிரைக் காப்பாற்றத்
தங்களுக்குப் பிரியமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்;
யெகோவாவே, நோக்கிப்பாரும்;
நினைக்கப்படாதவளானேன்.
வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே, தானி 9:12லூக் 23:28-31எரே 18:16எரே 30:24புலம் 4:6-11ஏசா 13:13புலம் 2:13லூக் 21:22-23
இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?
யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால்
எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், ஆப 3:16யோபு 30:30எசேக் 17:20யோபு 19:6சங் 22:14எசேக் 12:13எபி 12:29நாகூ 1:6
அது அவைகளில் பற்றியெரிகிறது;
என் கால்களுக்கு வலையை வீசினார்;
என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்;
தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன்.
என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; உபா 28:48ஏசா 47:6எசேக் 25:4எசேக் 25:7எரே 28:14நீதி 5:22எசேக் 11:9எசேக் 21:31
அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது;
என் பெலனை இழக்கச்செய்தார்;
நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; ஏசா 63:3ஏசா 28:18மல்கி 4:3எபி 10:29லூக் 21:24வெளி 14:19-20வெளி 19:152இராஜா 24:14-16
என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்;
திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல,
ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், புலம் 1:2சங் 119:136எரே 13:17எரே 14:17புலம் 2:11புலம் 2:18புலம் 3:48-49பிரச 4:1
என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது;
என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்;
பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்; எரே 4:31ஏசா 1:15புலம் 1:92இராஜா 24:2-42இராஜா 25:1எரே 21:4-5எரே 34:22புலம் 1:16
அவளைத் தேற்றுபவர்கள் ஒருவருமில்லை;
யெகோவா யாக்கோபைச் சுற்றிலும் உள்ளவர்களை அவனுக்கு விரோதிகளாகக் கட்டளையிட்டார்;
அவர்களுக்குள்ளே எருசலேம் தீட்டான பெண்ணுக்கு ஒப்பானாள்.
யெகோவா நீதிபரர்; சங் 119:751 சாமு 12:14-15செப்ப 3:5எரே 12:1புலம் 1:12புலம் 3:42நெகே 9:33சங் 107:11
அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்;
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்;
என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள்.
என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், புலம் 1:11புலம் 1:2புலம் 2:20யோபு 19:13-19எரே 14:15-18எரே 2:28எரே 23:11-15எரே 27:13-15
அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்;
என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்
தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.
யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; எசேக் 7:15புலம் 2:11உபா 32:25ஏசா 16:11நீதி 28:13எரே 4:19யோபு 30:271 இராஜா 8:47-50
என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது;
வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; புலம் 1:8எரே 50:11புலம் 1:16புலம் 1:22புலம் 2:15சங் 35:15எரே 51:24புலம் 1:2
என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு,
தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்;
நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும். எரே 8:18வெளி 6:10சங் 109:14-15நெகே 4:4-5எபே 3:13ஏசா 13:7எரே 10:25எரே 18:23
என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்;
என் பெருமூச்சுகள் மிகுதியாயின,
என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.