சீயோனின் சீரழிவு
ஐயோ, தங்கம் மங்கி, சுத்தத் தங்கம் மாறி, எசேக் 7:19-22புலம் 2:19ஏசா 1:212இராஜா 25:9-10ஏசா 14:12எரே 52:13மத் 24:2லூக் 21:5-6
பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டப்பட்டதே.
ஐயோ, தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற மகன்களாகிய சீயோன், ஏசா 30:14எரே 19:11ரோம 9:21-232 தீமோ 2:202 கொரி 4:7ஏசா 51:18புலம் 5:12சகரி 9:13
குயவனுடைய கைவேலையான மண்பாத்திரங்களைப்போல நினைக்கப்படுகிறார்களே.
திமிங்கிலங்கள் முதற்கொண்டு மார்பகங்களை நீட்டி, எசேக் 5:10லூக் 23:28-29புலம் 2:20புலம் 4:102இராஜா 6:26-29உபா 28:52-57எரே 19:9யோபு 39:13-16
தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்;
என் மகளாகிய மக்களோ வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழியைப்போல் கடின மனமுள்ளவளாக இருக்கிறாளே.
குழந்தைகளின் நாக்கு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; சங் 22:15புலம் 2:11-12சங் 137:6உபா 32:24புலம் 1:11மத் 7:9-11
பிள்ளைகள் உணவுகேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பவர்கள் இல்லை.
சுவையான உணவுகளைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பயனற்றுக்கிடக்கிறார்கள்; லூக் 16:19ஆமோ 6:3-7லூக் 15:16நீதி 31:211 தீமோ 5:62 சாமு 1:24உபா 28:54-56ஏசா 24:6-12
இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்கிறார்கள்.
உதவி செய்பவர்கள் இல்லாமல், ஒரு நிமிடத்திலே அழிக்கப்பட்ட ஆதி 19:25ஏசா 1:9-10லூக் 10:12லூக் 12:47மத் 24:21தானி 9:12எசேக் 16:48-50புலம் 4:9
சோதோமின் பாவத்திற்கு வந்த தண்டனையைவிட
என் மகளாகிய மக்களின் அக்கிரமத்திற்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், சங் 51:7சங் 144:12உன்னத 5:101 சாமு 16:12ஆமோ 2:11-12தானி 1:15நியாயாதி 13:5நியாயாதி 13:7
பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும்,
இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள்.
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; புலம் 5:10யோபு 30:30சங் 102:3-5யோபு 19:20சங் 119:83ஏசா 52:14யோபு 2:12யோபு 30:17-19
வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது;
அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு,
காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.
பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட எசேக் 24:23எரே 16:4லேவி 26:39எசேக் 33:10
பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்;
அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள்.
இரக்கமுள்ள பெண்களின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, 2இராஜா 6:26-29ஏசா 49:15புலம் 2:20எரே 19:9எசேக் 5:10புலம் 3:48புலம் 4:3லேவி 26:29
என் மகளாகிய மக்களின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி, எரே 7:20எசேக் 22:31எரே 17:27புலம் 2:17தானி 9:12உபா 32:21-25எசேக் 20:47-48எரே 13:14
சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்;
அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது.
எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப் உபா 29:24-28சங் 48:4-61 இராஜா 9:8-9எரே 21:13
பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள்.
அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், எரே 5:31எரே 6:13எசேக் 22:26-28எரே 26:8-9புலம் 2:14மத் 23:311 தெச 2:15-16அப் 7:52
அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து, ஏசா 1:15எரே 2:34உபா 28:28-29ஏசா 56:10எண் 19:16எபே 4:18ஓசி 4:2ஏசா 29:10-12
ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், லேவி 13:45-46
என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்;
இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது.
யெகோவாவுடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, ஏசா 9:14-16புலம் 5:12உபா 32:26உபா 28:25உபா 28:64-65எபி 8:9எரே 24:92 நாளாக 36:17
அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்;
ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள்.
இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின; எசேக் 29:162இராஜா 24:7ஏசா 20:5எசேக் 29:6-7ஏசா 30:1-7ஏசா 31:1-3எரே 2:18எரே 2:36
காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்; ஆமோ 8:2எசேக் 7:2-12சங் 140:11எரே 16:16புலம் 3:521 சாமு 24:142இராஜா 25:4-5எசேக் 12:22-23
எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது;
எங்கள் முடிவு வந்துவிட்டது.
எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்; ஆப 1:8எரே 4:13ஏசா 5:26-28உபா 28:49ஓசி 8:1ஏசா 30:16-17ஆமோ 2:14ஆமோ 9:1-3
மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்;
வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள்.
யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; 2 சாமு 1:142 சாமு 19:21எசேக் 12:13ஆதி 2:7எரே 39:52 சாமு 1:21எசேக் 17:18புலம் 2:9
அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த மகளாகிய ஏதோமே, சந்தோஷப்பட்டு மகிழ்ந்திரு; ஆமோ 1:11யோபு 1:1வெளி 16:15சங் 137:72 நாளாக 28:19பிரச 11:9எசேக் 25:12-14எசேக் 25:6
பாத்திரம் உன்னிடத்திற்கும் வரும், அப்பொழுது நீ வெறித்து, ஆடையில்லாமல் கிடப்பாய்.
மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது; ஏசா 40:2எரே 50:20சங் 137:7எசேக் 37:28ஏசா 52:1ஏசா 60:18எரே 32:40எரே 33:8
அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்;
மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்;
உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.