ஒழுக்க சீர்கேடுகளுக்கான விதிமுறைகள்
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய யெகோவா. யாத் 6:7லேவி 11:44எசேக் 20:5லேவி 20:7யாத் 20:2எசேக் 20:19-20எசேக் 20:7ஆதி 17:7 நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், யாத் 23:24லேவி 20:231 பேது 4:2-4எசேக் 20:7-8எசேக் 23:8உபா 12:30-31உபா 12:4எபே 5:7-11 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. எசேக் 20:19லேவி 18:2உபா 6:1எசேக் 36:27யோவா 15:14லேவி 18:26லேவி 19:37லேவி 20:22 “ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் யெகோவா. கலா 3:12எசேக் 20:11ரோம 10:5எசேக் 20:13எசேக் 20:21லூக் 10:28யாத் 6:2யாத் 6:6 “ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் யெகோவா. லேவி 20:17-21லேவி 18:7-19லேவி 20:11-12 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது. லேவி 20:11எசேக் 22:10லேவி 18:8-16லேவி 20:14 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம். லேவி 20:111 கொரி 5:1உபா 22:30உபா 27:20ஆமோ 2:7ஆதி 49:42 சாமு 16:21-22எசேக் 22:10 உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது. லேவி 20:17உபா 27:22எசேக் 22:112 சாமு 13:11-14லேவி 18:11 உன் மகனுடைய மகளையாவது உன் மகளுடைய மகளையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அது உன்னுடைய நிர்வாணம். உன் தகப்பனுடைய மனைவியிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த மகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உனக்குச் சகோதரி. உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள். லேவி 20:19யாத் 6:20 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள். உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி. லேவி 20:20 உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது. லேவி 20:12எசேக் 22:11ஆதி 38:26ஆதி 38:18-19 உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம். உபா 25:5லேவி 20:21மத் 22:24மாற் 12:19லூக் 3:19மத் 14:3-4மாற் 6:17 ஒரு பெண்ணையும் அவளுடைய மகளையும் நிர்வாணமாக்கக்கூடாது; அவளுடைய மகன்களின் மகளையும் மகளின் மகளையும் நிர்வாணமாக்கும்படி திருமணம் செய்யக்கூடாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின உறவானவர்கள்; அது முறைகேடு. லேவி 20:14ஆமோ 2:7உபா 27:23 உன் மனைவி உயிரோடிருக்கும்போது அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்குவதற்காக அவளைத் திருமணம் செய்யக்கூடாது. ஆதி 29:28ஆதி 30:15மல்கி 2:151 சாமு 1:6-8ஆதி 4:19யாத் 26:3 “பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே. லேவி 15:24லேவி 20:18எசேக் 22:10எசேக் 18:6லேவி 15:19லேவி 12:2 பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம். யாத் 20:141 கொரி 6:9எபி 13:4லேவி 20:10மத் 5:27-282 சாமு 11:3-4உபா 5:18நீதி 6:25 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகு தெய்வத்திற்கென்று தீயில் பலியாக்க இடம்கொடுக்காதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் யெகோவா. உபா 12:31உபா 18:10லேவி 20:2-5லேவி 19:12லேவி 22:321 இராஜா 11:331 இராஜா 11:7அப் 7:43 பெண்ணோடு உடலுறவு செய்வதுபோல ஆணோடே உடலுறவு செய்யவேண்டாம்; அது அருவருப்பானது. லேவி 20:131 கொரி 6:9ரோம 1:26-271 தீமோ 1:10யூதா 1:71 இராஜா 14:24உபா 23:18நியாயாதி 19:22 எந்தவொரு மிருகத்தோடும் நீ உடலுறவுகொண்டு, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; பெண்ணானவள் மிருகத்தோடே உடலுறவுகொள்ள ஏதுவாக அதற்கு முன்பாக நிற்கக்கூடாது; அது அருவருப்பான தாறுமாறு. யாத் 22:19லேவி 20:15-16லேவி 20:12உபா 27:21 “இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற மக்கள் இவைகளெல்லாவற்றாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. உபா 18:12லேவி 18:30லேவி 20:22-231 கொரி 3:17உபா 12:31எரே 44:4லேவி 18:3மத் 15:18-20 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் மக்களை புறக்கணித்துவிடும். லேவி 18:28எரே 2:7லேவி 20:22-23எரே 9:9சங் 106:38எண் 35:33-34உபா 18:12எசேக் 36:17-18 இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர்கள் செய்ததினாலே தேசம் தீட்டானது. லேவி 18:5உபா 12:32உபா 4:1-2உபா 4:40யோவா 14:15யோவா 14:21-23யோவா 15:14லேவி 17:10 இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த மக்களை தேசம் புறக்கணித்ததைப்போல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் புறக்கணிக்காதிருக்க, 1 இராஜா 14:242 நாளாக 36:142இராஜா 16:32இராஜா 21:2உபா 20:18உபா 23:18உபா 25:16உபா 27:15 நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம். லேவி 18:25லேவி 20:22வெளி 3:16எசேக் 36:17எரே 9:19எசேக் 36:13ரோம 8:22 இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் ஒன்றையாவது யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள். யாத் 12:15லேவி 17:10லேவி 20:6 ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலிருக்க என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார். லேவி 20:23உபா 18:9-12லேவி 22:9லேவி 18:2-4லேவி 18:26-27உபா 11:1