லேவியராகமம் 24

Leviticus 24
அத்தியாயம் 24

குத்துவிளக்கு

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் மக்கள் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. 2 கொரி 4:6எபே 5:8-14யாத் 27:20-21யோவா 8:12அப் 26:18எபே 1:17-18பிலி 2:15-161 சாமு 3:3-4 ஆசரிப்புக்கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தின் 1 திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் மாலைதொடங்கி விடியற்காலம்வரை யெகோவாவுடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றுவானாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை. அவன் எப்பொழுதும் யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன். யாத் 31:8யாத் 37:17-24யாத் 39:371 நாளாக 28:151 இராஜா 7:49யாத் 25:31-39எபி 9:2எரே 52:19 “அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும். யாத் 25:301 இராஜா 18:311 சாமு 21:4-5யாத் 40:23அப் 26:7யாக் 1:1மத் 12:4 அவைகளை நீ யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து, 1 இராஜா 7:48யாத் 25:23-242 நாளாக 13:112 நாளாக 4:19யாத் 37:10-16எபி 9:21 கொரி 14:40யாத் 39:36 ஒவ்வொரு அடுக்கிலும் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்துடன் இருந்து, நன்றியின் அடையாளமாகக் யெகோவாவுக்கேற்ற தகனபலியாக இருக்கும். லேவி 2:2வெளி 8:3-41 கொரி 11:23-25அப் 10:31அப் 10:4எபே 1:6யாத் 12:14யாத் 13:9 அப்பத்தை நிரந்தரமான உடன்படிக்கையாக இஸ்ரவேல் மக்கள் கையிலே வாங்கி, ஓய்வுநாள் தோறும் யெகோவாவுடைய சந்நிதியில் அடுக்கிவைப்பானாக. 2 நாளாக 2:4எண் 4:71 நாளாக 9:321 நாளாக 23:29மத் 12:3-5நெகே 10:33 அது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே சாப்பிடுவார்களாக; நிரந்தரமான கட்டளையாக யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாக இருக்கும்” என்றார். லேவி 8:31லூக் 6:4மத் 12:4மாற் 2:26லேவி 10:17லேவி 6:161 சாமு 21:6லேவி 21:22

தெய்வ நிந்தனைக்குத்தண்டனை

அக்காலத்திலே இஸ்ரவேலைச் சார்ந்த பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் பிறந்த மகனாகிய ஒருவன் இஸ்ரவேல் மக்களோடு புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் முகாமிலே சண்டையிட்டார்கள். யாத் 12:38எண் 11:4 அப்பொழுது இஸ்ரவேலைச் சார்ந்த அந்தப் பெண்ணின் மகன் யெகோவாவின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாயின் பெயர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள். யாத் 20:7யாத் 18:22யாத் 18:26யாத் 3:15ஏசா 8:21யோபு 2:5லேவி 24:15-16மத் 26:65 யெகோவாவின் வாக்கினாலே தங்களுக்கு உத்திரவு வரும்வரை, அவனைக் காவலில்வைத்தார்கள். யாத் 18:15-16எண் 15:34எண் 27:5எண் 36:5-6யாத் 18:23 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தூஷித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவனுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறிவார்களாக. உபா 17:7உபா 21:21லேவி 20:27யோவா 10:31-33லேவி 20:2அப் 7:58-59உபா 13:9-10உபா 22:21 மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான். யாத் 22:28லேவி 5:1எண் 9:13லேவி 20:16-17 யெகோவாவுடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறியவேண்டும்; அந்நியனானாலும் இஸ்ரவேலனானாலும் யெகோவாவின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும். மத் 12:31யாக் 2:7யோவா 10:33-361 தீமோ 1:13மாற் 3:28-291 இராஜா 21:10-13அப் 26:11யாத் 20:7 “ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். உபா 19:11-12ஆதி 9:5-6உபா 27:24யாத் 21:12-14எண் 35:30-31 மிருகத்தைக் கொன்றவன் மிருகத்திற்கு மிருகம் கொடுக்கக்கடவன். லேவி 24:21யாத் 21:34-36 “ஒருவன் மற்றவனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது. உபா 19:21மத் 5:38மத் 7:2 நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும். உபா 19:21மத் 5:38யாத் 21:23-25 மிருகத்தைக் கொன்றவன் அதற்கு பதிலாக வேறு மிருகம் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன். லேவி 24:17-18யாத் 21:33 உங்களில் அந்நியனுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார். யாத் 12:49எண் 15:15-16எண் 9:14லேவி 19:34எண் 15:29லேவி 17:10 அப்படியே, நிந்தித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் மக்களிடம் சொன்னான்; யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். எபி 10:28-29எபி 2:2-3லேவி 24:14-16எண் 15:35-36