மாற்கு 11

Mark 11
அத்தியாயம் 11

இயேசு எருசலேமில் பிரவேசித்தல்

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: யோவா 12:14-19லூக் 19:29-40மத் 21:1-11அப் 1:12யோவா 8:1மத் 21:17மத் 24:3மத் 26:30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். மத் 21:2-3லூக் 19:30-31 ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 2 கொரி 8:9அப் 10:36அப் 17:25எபி 2:7-9மாற் 14:151 நாளாக 29:12-18அப் 1:24சங் 110:3 அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள். எபி 11:8லூக் 19:32-34யோவா 2:5மத் 21:6-7மத் 26:19 அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள். இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். லூக் 19:35-36சகரி 9:9மத் 21:4-5மத் 21:7-8யோவா 12:12-162இராஜா 9:13 அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள். லேவி 23:40 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்; சங் 118:25-26மத் 21:9லூக் 19:37-38மத் 23:39யோவா 12:13யோவா 19:15 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். எசேக் 37:24-25லூக் 2:14லூக் 19:38-40ஆமோ 9:11-12எசேக் 34:23-24லூக் 1:31-33ஓசி 3:5ஏசா 9:6-7 அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார். யோவா 8:1-2செப்ப 1:12எசேக் 8:9லூக் 19:41-45லூக் 21:37-38மல்கி 3:1மத் 21:10-17

அத்திமரத்தை சபித்தல்

அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. மத் 21:18-22மத் 4:2யோவா 19:28எபி 2:17யோவா 4:31-33யோவா 4:6-7லூக் 4:2 அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை. லூக் 13:6-9மத் 21:19ஏசா 5:7லூக் 12:6-71 சாமு 6:9லூக் 10:31ரூத் 2:3 அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். மத் 21:19மத் 3:10மத் 7:19யோவா 15:6மாற் 11:20-21ஏசா 5:5-6மத் 12:33-35உபா 6:4-8 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து, யோவா 2:13-17மத் 21:12-16லூக் 19:45-47உபா 14:25-26 ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். ஏசா 56:7எரே 7:11லூக் 19:46யோவா 2:161 இராஜா 8:41-48ஏசா 60:7ஓசி 12:7 அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள். மத் 7:28மாற் 12:12அப் 24:25யோவா 11:53-57லூக் 4:22மாற் 1:22மாற் 11:32மாற் 14:1-2 மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள். லூக் 21:37மாற் 11:11யோவா 12:36

பட்டுப்போன அத்திமரம்

அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள். மத் 15:13யோவா 15:6மத் 13:6மத் 21:19-22மாற் 11:14ஏசா 40:24எபி 6:8ஏசா 5:4 பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான். 1 கொரி 16:22மத் 23:7மத் 25:41நீதி 3:33சகரி 5:3-4 இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். சங் 62:8யோவா 14:1மாற் 9:232 நாளாக 20:20ஏசா 7:9தீத் 1:1கொலோ 2:12 யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 17:20யோவா 15:7மத் 21:21சங் 37:4யோவா 14:13யாக் 1:5-6லூக் 17:6எபி 11:17-19 எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். மத் 21:221 யோவா 5:14-151 யோவா 3:22யாக் 1:5-6யோவா 15:7மத் 18:19யோவா 14:13மத் 7:7-11 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள். மத் 6:14-15கொலோ 3:13எபே 4:32லூக் 6:37யாக் 2:13மத் 6:12மத் 5:23மத் 18:23-35 நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார்.

இயேசுவின் அதிகாரத்தைப்பற்றின கேள்வி

அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து: லூக் 20:1-8மத் 21:23-27அப் 4:27-28சங் 2:1-5அப் 4:5-8யோவா 10:23யோவா 18:20மாற் 14:1 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள். யாத் 2:14அப் 7:27-28அப் 7:38-39அப் 7:51எண் 16:13எண் 16:3 இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன். ஏசா 52:13லூக் 20:3-8மத் 21:24 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார். யோவா 1:15-36யோவா 1:6-8யோவா 3:25-36லூக் 3:1-20மத் 3:1-17மாற் 1:1-11மாற் 9:13 அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார். யோவா 1:15யோவா 1:29யோவா 1:34யோவா 1:36யோவா 3:29-36மத் 11:7-14மத் 21:25-27மத் 21:31-32 எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி; மத் 14:5மத் 21:46மாற் 12:12அப் 5:26யோவா 10:41லூக் 20:19லூக் 20:6-8லூக் 22:2 இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார். ஏசா 6:9-102 கொரி 4:3-42 தெச 2:10-122 கொரி 3:15ஏசா 1:3ஏசா 29:9-14ஏசா 42:19-20ஏசா 56:10