மத்தேயு 4

Matthew 4
அத்தியாயம் 4

இயேசு பிசாசினால் சோதிக்கப்படுதல்

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். எபி 2:18லூக் 4:1-13மாற் 1:12-15எபி 4:15-16ரோம 8:14எசேக் 43:5யோவா 14:30எசேக் 3:14 அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது. உபா 9:18யாத் 34:281 இராஜா 19:8லூக் 4:2உபா 9:9உபா 9:25யாத் 24:18உபா 18:18 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான். 1 தெச 3:5ஆதி 3:1-5எண் 11:4-6லூக் 22:31-32வெளி 2:10சங் 78:17-20ஆதி 25:29-34யோபு 1:9-12 அவர் மறுமொழியாக: உபா 8:3லூக் 4:4யோவா 6:63யோவா 6:31-59ரோம 15:4எபே 6:17யாத் 16:15லூக் 4:8

“மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை,

தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: லூக் 4:9மத் 27:53வெளி 11:2ஏசா 48:2தானி 9:16தானி 9:24ஏசா 52:1யோவா 19:11 “நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான். சங் 91:11-12எபி 1:14சங் 34:72 கொரி 11:14சங் 34:20மத் 4:4யோபு 5:23யோபு 1:10

அதற்கு இயேசு: உபா 6:161 கொரி 10:9சங் 78:41சங் 78:18எபி 3:9யாத் 17:2யாத் 17:7அப் 5:9

உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.

மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 1 யோவா 2:15-16வெளி 11:15லூக் 4:5-7மத் 16:26சங் 49:16-171 பேது 1:24எபி 11:24-26தானி 4:30 “நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்; 2 கொரி 4:4தானி 5:18-19யோவா 16:11வெளி 19:10வெளி 22:8-91 கொரி 10:20-21சங் 72:111 சாமு 2:7-8 அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார். உபா 6:13-14உபா 10:20யோசு 24:14லூக் 4:81 சாமு 7:3யாக் 4:7மத் 16:231 பேது 5:9 அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள். மத் 26:53லூக் 22:43எபி 1:14லூக் 4:13வெளி 5:11-12எபி 1:6லூக் 22:53மத் 28:2-5

இயேசுவின் பிரசங்க ஆரம்பம்

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். மாற் 1:14லூக் 3:20மத் 14:3லூக் 4:14யோவா 3:24மாற் 6:17யோவா 4:43யோவா 4:54 பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார். யோவா 4:46மாற் 1:21மத் 11:23யோவா 6:24யோவா 6:59யோவா 2:12யோவா 6:17யோசு 19:10-16 கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே, ஏசா 9:1-2மத் 2:23லூக் 24:44லூக் 22:37மத் 12:17-21மத் 2:15யோவா 15:25யோவா 19:28

இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; ஏசா 9:1யோசு 21:322இராஜா 15:291 இராஜா 9:11யோசு 20:7

மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு

வெளிச்சம் தோன்றினது” என்று,

ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஏசா 9:2ஏசா 42:6-7லூக் 1:78-79ஏசா 60:1-3மீகா 7:8லூக் 2:32சங் 107:10-14ஆமோ 5:8

அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். மத் 3:2அப் 2:38மாற் 1:14-15லூக் 5:32லூக் 24:47அப் 17:30அப் 26:20லூக் 15:7

முதலாம் சீடர்களின் அழைப்பு

இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு: யோவா 1:40-42மத் 10:2மாற் 1:16-20லூக் 6:14லூக் 5:1-11மத் 16:181 கொரி 1:27-29யோவா 21:1 “என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார். மாற் 1:17-18யோவா 12:26மத் 16:24லூக் 9:59யோவா 1:43யோவா 21:22லூக் 5:27மாற் 2:14 உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். மாற் 10:28-31மத் 19:271 இராஜா 19:21லூக் 18:28-30சங் 119:60கலா 1:16மத் 10:37 அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். மத் 10:2மாற் 1:19-20மாற் 3:17அப் 12:2யோவா 21:2லூக் 5:10-11மத் 17:1மத் 20:20-21 உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். மத் 10:37உபா 33:9-10லூக் 14:26லூக் 9:59-60மாற் 1:202 கொரி 5:16லூக் 14:33

இயேசு வியாதியஸ்தர்களை சுகமாக்குதல்

பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார். மத் 9:35மாற் 1:39லூக் 7:22அப் 10:38மத் 11:5லூக் 4:15-18மத் 13:54மத் 24:14 அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார். மத் 17:15மத் 8:6லூக் 2:2லூக் 5:15மத் 12:22மத் 15:22மத் 17:18அப் 10:38 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். லூக் 6:17மாற் 5:20மாற் 3:7-8மாற் 7:31லூக் 6:19மத் 12:15மத் 19:2மத் 5:1