சீயோனிலே தேவனுடைய ஆளுகை
ஆனாலும், வரும் நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். ஏசா 2:1-4எரே 3:17அப் 2:17சங் 22:27சகரி 14:16-21சங் 86:9சகரி 8:3எசேக் 43:12 திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும். ஏசா 2:3எரே 31:6அப் 1:8ஏசா 54:13சங் 25:12சங் 25:8-9சகரி 14:8-9ஏசா 42:1-4 அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. ஏசா 2:4யோவே 3:9-16மத் 25:31-32ஓசி 2:18அப் 17:31ஏசா 65:25யோவா 5:22-23யோவா 5:27-29 அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று. சகரி 3:101 இராஜா 4:25எசேக் 39:26ஏசா 1:20ஏசா 54:14ஏசா 58:14எசேக் 34:28ஏசா 40:5 சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம். சகரி 10:12கொலோ 3:17யோசு 24:15ஏசா 2:5சங் 145:1-2சங் 48:142இராஜா 17:292இராஜா 17:34 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு, செப்ப 3:19எசேக் 34:12-17ஏசா 56:8ஏசா 35:3-6யோவா 10:16மீகா 2:12சங் 147:2எசேக் 36:24 நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார். தானி 7:14ஏசா 24:23லூக் 1:33மீகா 2:12மீகா 5:7-8மீகா 7:18ஏசா 9:6-7மீகா 5:3 மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும். ஏசா 1:26வெளி 22:5சகரி 9:10தானி 2:44ஆதி 35:21ஒபதி 1:21சகரி 9:122 சாமு 5:7 இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும். எரே 8:19ஏசா 3:1-7புலம் 4:20ஓசி 10:3ஓசி 13:10-11ஓசி 3:4ஏசா 13:8ஏசா 21:3 மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். ஏசா 48:202இராஜா 20:18ஓசி 13:13ஓசி 2:14ஏசா 43:14ஏசா 45:13ஏசா 52:9-122 நாளாக 36:20 சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள். ஒபதி 1:12ஏசா 5:25-30மீகா 7:10ஏசா 8:7-8எரே 52:4யோவே 3:2-15புலம் 2:15-16 ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார். ஏசா 55:8எரே 29:11ரோம 11:33-34யோவே 3:12-13லூக் 3:17சகரி 14:1-3வெளி 14:14-20ஏசா 21:10 மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய். ஏசா 41:15-16தானி 2:44ஏசா 18:7ஏசா 23:181 கொரி 16:2வெளி 2:26-27வெளி 21:24-26ரோம 15:25-28